Posts

Showing posts with the label வங்கி

கொரோனாவிற்கு எதிரான போரில் அரசுடன் கைகோர்த்த ரிசர்வ் வங்கி - அறிவிப்புகள் மற்றும் அதன் விளைவுகள்

Image
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளின் சுருக்கம் RBI இந்த கட்டுரையின் ஆங்கில வடிவை படிக்க -  RBI announcement to tackle Corona 1. RBI allows deferment of EMIs upto 3 months வங்கிகள் (பொதுத்துறை, தனியார், பிராந்திய, கூட்டுறவு வங்கி), NBFC நிறுவனங்கள் (பஜாஜ் பைனான்ஸ் போன்றவை), வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் (HDFC, DHFL போன்றவை) போன்றவற்றில் பெறப்பட்ட கடன்களின் மாத தவணையை மூன்று மாதத்துக்கு செலுத்தியாகவேண்டிய அவசியம் இல்லை.  கொரோனாவிற்கு எதிரான போரில் அரசுடன் கைகோர்த்த ரிசர்வ் வங்கி - அறிவிப்புகள் மற்றும் அதன் விளைவுகள்  செலுத்தாமல் விடும் பட்சத்தில் உங்களின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது.  இதில் கவனிக்க வேண்டியது : ரிசர்வ் வங்கி EMI வசூலை தள்ளிவைக்க அனுமதி தான் கொடுத்துள்ளது. தள்ளி வைக்கும் முடிவு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை சார்ந்தது 2. RBI allows deferment of loans for business upto 3 months நிறுவனங்கள் அன்றாட பணிகளுக்காக வங்கியுள்ள Working Captial தொகைக்கான EMI மூன்று மாதத்துக்கு கட்ட தேவையில்லை. இதில் கவனிக்க வேண்டியத...

வங்கிகள் இணைப்பும், வங்கி போட்டி தேர்வுகளின் எதிர்காலமும்

வங்கிகள் இணைப்பு இதோ அதோ என்று கடந்த வருடம் முழுவதும் இழுத்தடிக்கப்பட்டு நேற்று இறுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது இங்கே கலை, அறிவியல் பட்டம்பெற்றவர் துவங்கி பொற...

வங்கிகள் இணைப்பு அறிவிப்பு - வங்கித்தேர்வுக்கு படிப்போர் உஷார்

தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா, விஜயா பேங்க் மூன்றையும் இணைக்க அரசு முடிவு செய்துவிட்டது. தேனா வங்கி மோசமான நிதி நெருக்கடி மற்றும் வாரக்கடன் பிரச்னையில் உள்ளது. பேங்க் ஆப் பரோடா மற்றும் விஜயா வங்கி ஓரளவுக்கு நல்ல நிதிநிலையில் உள்ளன.. எனவே இந்த இணைப்பு சரியாகவேபடுகிறது. ஏற்கனவே SBI வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளும் இணைக்கப்பட்டது நினைவிருக்கலாம். இப்பொழுது அடுத்த 3 வங்கிகள் இணைக்கப்படுகிறது. இந்த trend தொடரத்தான் போகிறது. இன்னும் சில வங்கிகளை இணைக்கும் எண்ணமும் அரசாங்கத்துக்கு இருக்கிறது. இந்த இணைப்புகளில் ஒரே side effect புதிய வேலைவாய்ப்புகள்.. உதாரணமாக ஒரே ஊரில் தேனா, விஜயா, பரோடா வங்கிகளுக்கு கிளைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இணைப்புக்கு பிறகு இவைமூன்றும் ஒரே வங்கி தான். ஒரே வங்கிக்கு ஒரு ஊரில் எதற்கு மூன்று கிளைகள் ??  எனவே சில கிளைகள் மூடப்படும் ஏற்கனவே இருக்கும் 3 வங்கி ஊழியர்களை இணைக்கப்பட்ட புதிய வங்கியில் ஏதாவது பணியில் அமர்த்தவே வங்கிகள் திண்டாடும். இதில் எங்கே புதிய ஆட்கள் எடுக்க ?? வங்கி தேர்வே லட்சியமாக கொண்டு படிப்போர் இதைப்போன்ற நாட்டு நடப்புகளையும் படி...

கல்வி கடன் தள்ளுபடி ஆகும் என்று நம்புபவரா நீங்கள் ??

மாதம் நல்ல சம்பளம் வாங்கும் சில IT நண்பர்கள் கூட தாங்கள் வாங்கிய கல்வி கடனை ஏன் திரும்பி கட்டவேண்டும் ? அது அடுத்த தேர்தலுக்கு பிறகு தள்ளுபடி ஆகிவிடும் என்று நம்புகின்றனர் ! ஒரே காலாண்டில் (Quarter) அரசு துறை வங்கிகள் மட்டும் சுமார் 56,000 கோடி நஷ்டம் என அறிவித்திருக்கும் இந்த மோசமான காலகட்டத்தில் கடன் தள்ளுபடியெல்லாம் எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை... (எந்த வங்கி எத்தனை கோடி நஷ்டம் என கீழே இணைக்கப்பட்டுள்ள உள்ள ட்வீட் பார்த்து தெரிந்து கொள்ளலாம்) ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.. ஆதார் எண், பான் (PAN) எண், உங்கள் PF account (UAN) என எல்லாமே இணைக்கப்பட்டுவிட்டது. சிம்பிளாக சொன்னால் உங்களின் மாத வருமானம் என்ன என்பது அரசாங்கத்துக்கு நன்றாக தெரியும். மாதம் 50,000 80,000 என சம்பளம் வாங்கிக்கொண்டு கல்விக்கடனில் ஒரு தவணை கூட கட்டாதவரை wilful defaulter (அதாவது கடனை திரும்ப செலுத்த வழி இருந்தும் வேண்டுமென்றே கடனை செலுத்தாமல் வங்கிகளை ஏமாற்றுபவர், உதாரணமாக விஜய் மல்லையா) என்று அறிவிக்கப்பட்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. கடனை ஒழுங்காக செலுத்தாமல் இருந்தால் Cibil score எனப்படும் உங்களி...

வங்கி தேர்வுகளுக்கு தயார் செய்துகொண்டிருப்போர் உடனடி கவனத்திற்கு

இந்திய வங்கித்துறை வாராக்கடன் (NPA) பிரச்சனை காரணமாக மிகப்பெரிய அழுத்தத்தில் உள்ளது. வங்கிகளின் லாபம் குறைந்து கொண்டேபோவதும், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் நீரவ் மோடிக்கு 11,000 கோடி அளவுக்கு ஊழல் செய்ய உதவி செய்ததும் கடந்த மாதங்களில் ஊடக செய்திகளை ஆக்கிரமித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கோடிக்கணக்கான கடன்கள் காரணமாக இன்று பல பொதுத்துறை வங்கிகள் மிக மோசமான நிதி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. வாராக்கடன் அளவு ஒரு கட்டத்துக்கு மேல் அதிகரிக்கும் பொழுது  Prompt Corrective Action (PCA) என்றழைக்கப்படும் வங்கியை இழுத்து மூடாமல் காப்பாற்றும் தற்காப்பு முயற்சிகளை  ரிசர்வ் வங்கி மேற்கொள்ள துவங்கும். ஒரு வங்கி PCA நடவடிக்கைக்கு உள்ளானதாக ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்தால் அந்த வங்கியின் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படாது. ஆனால் அந்த வங்கி புதிய கடன்கள் ஏதும் வழங்க முடியாது. தேனா வங்கியின் (Dena Bank) வாராக்கடன் மிக அதிக அளவு சென்றுவிட்டதால் அந்த வங்கியை PCA நடவடிக்கையின் கீழ் சேர்ப்பதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது....