கொரோனாவிற்கு எதிரான போரில் அரசுடன் கைகோர்த்த ரிசர்வ் வங்கி - அறிவிப்புகள் மற்றும் அதன் விளைவுகள்
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளின் சுருக்கம்
RBI |
இந்த கட்டுரையின் ஆங்கில வடிவை படிக்க - RBI announcement to tackle Corona
1. RBI allows deferment of EMIs upto 3 months
வங்கிகள் (பொதுத்துறை, தனியார், பிராந்திய, கூட்டுறவு வங்கி), NBFC நிறுவனங்கள் (பஜாஜ் பைனான்ஸ் போன்றவை), வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் (HDFC, DHFL போன்றவை) போன்றவற்றில் பெறப்பட்ட கடன்களின் மாத தவணையை மூன்று மாதத்துக்கு செலுத்தியாகவேண்டிய அவசியம் இல்லை.
கொரோனாவிற்கு எதிரான போரில் அரசுடன் கைகோர்த்த ரிசர்வ் வங்கி - அறிவிப்புகள் மற்றும் அதன் விளைவுகள்
செலுத்தாமல் விடும் பட்சத்தில் உங்களின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது.
இதில் கவனிக்க வேண்டியது : ரிசர்வ் வங்கி EMI வசூலை தள்ளிவைக்க அனுமதி தான் கொடுத்துள்ளது. தள்ளி வைக்கும் முடிவு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை சார்ந்தது
2. RBI allows deferment of loans for business upto 3 months
நிறுவனங்கள் அன்றாட பணிகளுக்காக வங்கியுள்ள Working Captial தொகைக்கான EMI மூன்று மாதத்துக்கு கட்ட தேவையில்லை.
இதில் கவனிக்க வேண்டியது : ரிசர்வ் வங்கி EMI வசூலை தள்ளிவைக்க அனுமதி தான் கொடுத்துள்ளது. தள்ளி வைக்கும் முடிவு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை சார்ந்தது
2. RBI cuts Repo rate by 75 bps to 4.4%
கடனுக்கான தவணையை தள்ளிவைத்தது மட்டுமல்ல கடனுக்கான வட்டியையும் சேர்த்து குறைந்துள்ளது ரிசர்வ் வங்கி.
அதிலும் 75bps (0.75%) குறைப்பார்கள் என்று நிச்சயம் யாரும் எதிர்பார்க்கவில்லை. இதன் மூலம் வீட்டுக்கடன் உட்பட எல்லா கடன்களின் வட்டியும் பெரியளவில் குறையும்
இதில் கவனிக்க வேண்டியது : இதன் பயனை வங்கிகள் மக்களுக்கு எத்தனை தூரம் தருகின்றன என்று பார்க்கவேண்டும். ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டிக்குறைப்பை வங்கிகள் வாடிக்கையாளருக்கு முழுவதும் அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது
3. RBI cuts Reverse Repo rate by 90 bps
இதன் அர்த்தம் ரிசர்வ் வங்கியில் நாட்டின் மற்ற வங்கிகள் வைத்திருக்கும் பணத்திற்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. இதனால் ரிசர்வ் வங்கியில் பணத்தை பூட்டி வைப்பது நாட்டின் மற்ற வங்கிகளுக்கு லாபமாக இருக்காது
எனவே அவர்கள் அதிகமாக மக்களுக்கு கடன்களை வழங்குவதை தவிர வேறு வழியில்லை. இதன் மூலம் நாட்டின் பணப்புழக்கம் அதிகரிக்கும்
இதில் கவனிக்க வேண்டியது : இந்த முடிவு நாட்டில் பணப்புழக்கத்தை பெரிய அளவில் அதிகரிக்கும். அதேசமயம் நிரந்தர வைப்பு தொகையின் (FD) வட்டி விகிதம் குறையும்
இதில் கவனிக்க வேண்டியது : இந்த முடிவு நாட்டில் பணப்புழக்கத்தை பெரிய அளவில் அதிகரிக்கும். அதே சமயம் பணவீக்கத்தை அதிகரிக்கலாம்
இதில் கவனிக்க வேண்டியது : இந்த முடிவு நாட்டில் பணப்புழக்கத்தை பெரிய அளவில் அதிகரிக்கும். அதேசமயம் நிரந்தர வைப்பு தொகையின் (FD) வட்டி விகிதம் குறையும்
4. Reduction of CRR for all banks by 100 basis points (1%)
பொதுவாக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட்டாக வைத்திருக்க வேண்டும் என்ற விதி உண்டு. எவ்வளவு பணம் டெபாசிட் வைக்கவேண்டும் என்ற குறியீடே CRR.
இதனை 1% குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. எனவே வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய பணத்தின் அளவு குறையும். ரிசர்வ் வங்கியின் கணக்கு படி ₹ 1,37,000 கோடி வங்கிகளுக்கு இதன் மூலம் கிடைக்கும். இந்த தொகையை வங்கிகள் கடன் வழங்க பயன்படுத்தலாம். எனவே நாட்டில் பணப்புழக்கம் மேலும் அதிகரிக்கும்
இதில் கவனிக்க வேண்டியது : இந்த முடிவு நாட்டில் பணப்புழக்கத்தை பெரிய அளவில் அதிகரிக்கும். அதே சமயம் பணவீக்கத்தை அதிகரிக்கலாம்
ஒட்டுமொத்த தாக்கம்
- வீட்டுக்கடன் உட்பட எல்லா கடன்களின் வட்டியும் பெரியளவில் குறையும்
- நாட்டில் பணப்புழக்கத்தை பெரிய அளவில் அதிகரிக்கும்
- பணவீக்கத்தை அதிகரிக்கலாம்
- நிரந்தர வைப்பு தொகையின் (FD) வட்டி விகிதம் குறையும்
Comments
Post a Comment
Post ur comments and help us to improve