இந்திய கிரிக்கெட் அணி தேசிய அணியா ?
சரிதா தேவி , இந்திய மகளிர் குத்து சண்டை போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பு இருந்தும் நடுவரின் தவறால் அரையிறுதியில் வெளியேற்றப்பட்டு வெண்கலம் வென்றார். பதக்க விழாவில் அவர் கதறி அழுது பதக்கத்தை வாங்கமறுத்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்திய போன்ற ஒரு நாட்டில் பிறந்து பல கட்ட ஊழல்கள், சிபாரிசுகள், அமைச்சர்கள், அதிகாரிகளின் தலையீட்டை எல்லாம் போராடி வென்று ஆசியா கோப்பை போன்ற ஒரு போட்டிக்கு செல்வதே பெரிய உலக சாதனையாகும். அப்படி போராடி கலந்து கொண்ட போட்டியில் நடுவரின் அநீதியால் பதக்கத்தை பறிகொடுத்து, தங்கத்துக்கு பதிலாக வெண்கல பதக்கம் தரப்பட்ட பொழுது சரிதா தேவியின் மனம் எப்படி துடித்திருக்கும் என்பதை நினைப்பதற்கே கடினமாக உள்ளது. பதக்கங்களின் மதிப்பை நமக்கு உணர்த்திய நிகழ்வு அது. இங்கே மற்றொரு விளையாட்டு, இந்தியராகிய நாம் உயிராக கருதும் கிரிக்கெட். ஆசியா போட்டிகளிள் 2010 முதல் கிரிக்கெட் சேர்த்து கொள்ளப்பட்டது. இதுவரை இரண்டு ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி இருமுறையும் தங்கள் நாட்டின் சார்பாக எந்த வீரரையும...