Posts

அதிகம் வாசிக்கபட்ட பதிவு

அவளும் ! நானும் ! நீங்களும் !

ஆண்டு 2011

வீட்ல பொண்டாட்டி தொல்லை போல அதான் வீட்டுக்கு போக மனசில்லாம வண்டிய நிப்பாட்டிவச்சுருக்கான் என்றார் எதிரில் இருந்தவர், பாவம் அவருக்கு தெரியாது கடவுள் ஏன் திருச்சி ரயில்நிலையத்தில் அரைமணிநேரமாக ரயிலை நிறுத்திவச்சுருக்கார்னு !என் ஹெட்போனில் ஜி வி பிரகாஷ் கத்திக்கொண்டு இருந்தார் !

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ !

அந்த ஆரஞ்சு கலர் சுடிதார் போட்ட தேவதை அவள் அப்பா அம்மாவுடன் வந்து எனக்கு எதிர்சீட்டில் அமர்ந்தாள். சீட் கிடைத்த சந்தோஷத்தில் ஆயாசமாக அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஒரு நொடி ஒரு சிறு பார்வை என் பக்கம் வீசினாள்.

ஜி வி பிரகாஷின் தொடர்ந்து பாடினார்.

அடி வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா !
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா !
நா தலகாலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே !

ஆடுகளம் பாட்டுக்கும், அவளின் ஒரே நொடி காந்தப்பார்வைக்கும் கூட தொடர்பு உண்டு என மேற்கத்திய Choas தியரிக்கு கிழக்கில் நான் புதுவிளக்கம் கொடுத்துக்கொண்டேன் !

அந்த நொடியே அவள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவளை அடிக்கடி பார்த்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்தேன். எங்களுக்குள் ஒரே அலைவரிசை (waveleng…

அழிவின் விளிம்பில் BSNL

ஜியோ நிறுவனத்துக்கு உதவ மோடி அரசு BSNL க்கு 4G அலைக்கற்றை வழங்காமல் இழுத்தடிப்பது ஊரறிந்த உண்மை...இதை தான் Crony Capitalism என்று கூறுவார்கள்..

இதில் கவனிக்கதக்கது மற்றுமொரு செய்தி பிராட்பேண்ட் (broadband) சேவையில் 50 சதவீத சந்தையை வைத்திருப்பது BSNL நிறுவனம் தான். வரும் நாட்களில் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை துவங்கியதும் BSNL அழிவு தவிர்க்க முடியாதது ஆகிவிடும் !

குறிப்பு : நான் BSNL சேவை தரத்தை கடுமையாக விமர்சிப்பவன். ஊழியர்கள் அலட்சியம், லஞ்சம் தலைவிரித்தாடும் இடத்துக்கு சிறந்த உதாரணம் BSNL அலுவலகங்கள். ஒரு சில நேர்மையான ஊழியர்களை தவிர மற்ற எல்லாரும் எனக்கு என்ன என்றுதான் பணிசெய்கிறார்கள். இன்று அழிவு அவர்கள் நிறுவனத்தின் வாசல் வரை வந்துவிட்டது அறிந்ததும் ரோட்டுக்கு வந்து போராட முடிவு செய்திருக்கிறார்கள்.

இனியாவது வாடிக்கையாளரை மதித்து லஞ்சம் வாங்காமல் சேவை வழங்குவீர்களா ??

எனக்கு ஒரு டவுட்

எனக்கு ஒரு டவுட்

டெல்டா மாவட்டம் திருவாரூர் எடுத்துக்கோங்க.

இங்க ஊருக்கு வெளியே இருந்த விவசாய நிலத்தையெல்லாம் plot போட்டு விற்பனை செய்வதும் வாங்குவதும் யாரு ?

வெளிநாட்டுல சம்பாதிச்சது, அரசு ஊழியர் கையில் எக்கச்சக்கமா புழங்குற பணம், IT மக்கள் சம்பாத்தியம், வியாபாரிகள் கிட்ட இருந்த கருப்பு பணம் இதெல்லாம் எதுல முதலீடு செஞ்சா double ஆகுன்னு கணக்கு போட்டு ஊருக்கு வெளில இருந்த விவசாய நிலத்தை எல்லாம் plot போட்டு வாங்கி ரியல் எஸ்டேட் வளர்த்தது கார்ப்பரேட்டா நம்ம லோக்கல் மக்களா ??

இதுல விவசாயம் காப்போம்ன்னு hashtag வேற டெய்லி போட்டுக்கவேண்டியது...

மொரீசியஸ் வழி பற்றி கேள்விபட்டதுண்டா ?

இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும் நாடு எது என்று கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள் !

10 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் ஒரு குட்டி ஆப்பிரிக்க தீவு நாடான மொரீசியஸ் தீவு தான் அது. ஆமாங்க 2001 முதல் 2011 வரை இந்தியாவில் குவிந்த மொத்த FDI எனப்படும் அந்நிய முதலீட்டில் 40 சதவீதம் மொரீசியஸ் தீவில் இருந்து வந்தது தான்.

ஆச்சர்யமா இருக்கா ? இந்தியாவில் இருக்கும் கருப்பு பண முதலைகள் பணத்தை வெளுப்பாக மாற்ற மொரீசியஸ் தீவில் இருந்துதான் முதலீடு செய்கின்றனர் என்பது ஊரறிந்த செய்தி..

கூகுளில் Mauritius route என்று தட்டி பாருங்கள். அத்தனை செய்தியும் கிடைக்கும்..

மோடி பதியேற்றபின் கருப்பு பணத்தை ஒழிக்க மொரீசியஸ் தீவுகளுடனான வரி ஒப்பந்தத்தில் திருத்தம் கொண்டுவந்தது. ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்தில் இருந்த ஓட்டைகளை வைத்து பணம் பரிமாற்றப்பட்டதால் அவை சரி செய்யப்பட்டன எடுக்கப்பட்டது.. இப்பொழுது மொரீசியஸ் தீவில் இருந்து வரும் முதலீடு படிப்படியாக குறைய துவங்கியுள்ளது..

கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அத்தனை எளிதானதள்ள.. ஆனால் இந்த அரசு மிக உறுதியாக நடவடிக்கைளை எடுத்துவருவது வரவேற்கதக்கது

மிஷன் இந்திரதனுஷ் - தடுப்பூசி போடுவதில் ஒரு புரட்சி

நாட்டில் குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதில் இருந்த பெரிய அளவிலான குறைபாட்டை போக்க Mission Indradhanush என்கிற திட்டத்தை மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு துவங்கியது.

இத்திட்டத்தின் இலக்கு 90% குழந்தைகள் மற்றும் 80 லட்சம் கருவுற்ற தாய்மார்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்குள் 12 முக்கியமான தடுப்பூசிகளை போடுவதாகும்.

இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. World's best 12 practices என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜார்னல் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது..

குழந்தைகளுக்கு உயிர்காக்கும் தடுப்பூசி போடும் திட்டம் கூட 70 வருட காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாதது வெட்ககேடு. இதுபோன்ற திட்டங்கள் கவர்ச்சி திட்டங்கள் அல்ல. ஆனால் இவைதான் நாளைய இந்தியாவை சிறப்பாக படைக்க உதவும்.

அதே சமயம் இது போன்ற மத்திய அரசின் சீரிய முயற்சி இல்லாத காலத்திலிருந்தே தமிழக அரசு தடுப்பூசி போடுவதில் ஆகச்சிறந்த மாநிலமாக விளங்கிவருவதை இங்கே குறிப்பிடவேண்டும்...

வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆர்வம்

இந்தியாவில் உற்பத்தியை துவங்க white goods என்று அழைக்கப்படும் வீட்டு உபயோக பொருட்களான வாஷிங் மெஷின், AC, பிரிட்ஜ் தயாரிப்பாளர்கள் ஆர்வம்..

Bosch, Siemens, Haier, TCL, Panasonic, Godrej, BPL என அனைவரும் இந்தியாவில் உற்பத்தியை துவங்க முதலீடு.

இறக்குமதியை குறைத்து உற்பத்தியை பெருக்க சமீபத்தில் இந்திய அரசு white goods களுக்கான இறக்குமதி வரியை (குறிப்பாக compressor கள்) இருமடங்காக உயர்த்தி அறிவித்தது.

BSH நிறுவனம் சென்னையில் 800 கோடியில் பிரிட்ஜ் தயாரிப்பு, Midea குரூப் (சீன நிறுவனம்) 1350 கோடியில் compressor உற்பத்தி, Haier 3000 கோடியில் நொய்டாவில், TCL நிறுவனம் 2000 கோடியில் திருப்பதியில், Voltas நிறுவனம் 250 கோடி குஜராத்தில் உற்பத்தி திட்டங்கள் அறிவித்துள்ளன..

விவசாயத்தை காக்க விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுங்கள்

இந்தியாவின் விவசாய பிரச்னையை புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல..

சிறிய உதாரணம் சொல்கிறேன் :

2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நாட்டிலேயே அதிகபட்சமாக  விவசாயத்தில் 14% வளர்ச்சி  கண்ட மாநிலம் மத்திய பிரதேசம். இதற்கு காரணம் அரசாங்கம் நீர் சார்ந்த திட்டங்களிலும், பயிர் உற்பத்தியிலும் அதீத கவனம் செலுத்தியது தான். ஆனால் அதன் விளைவு இன்று வேறுமாதிரி வெளிப்பட்டிருக்கிறது.

அதீத உற்பத்தி காரணமாக கருப்பு உளுத்தம் பருப்பு குவிண்டாலுக்கு வெறும் ₹ 4000 க்கு விற்பனை ஆகிறது. இது அரசாங்கம் அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலையான (MSP) ₹ 5600 க்கு 29% குறைவான விலையாகும்.

பூண்டு அதீத உற்பத்தி காரணமாக கிலோ ₹ 7 க்கு வாங்கப்படுவதாக குமுறுகின்றனர் விவசாயிகள். விலை இன்னும் வீழும் என்ற அச்சம் வேறு உள்ளது.

உற்பத்தியில் மட்டும் அரசு பெரிய அளவில் கவனம் செலுத்த சந்தை படுத்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இன்று விவசாயிகளின் போராட்ட களமாக மாறியுள்ளது மத்திய பிரதேசம்.

சந்தை இருந்தால் தான் வியாபாரம் நடக்கும் , லாபம் வந்தால் தான் ஒரு தொழிலை செய்பவர் அதை தொடர்வார். விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் விவசாயத்தை லாபகரமான…

துவங்கியது கங்கையில் கன்டெயினர் கப்பல் போக்குவரத்து !

நாட்டிலேயே முதல்முறையாக நீர்வழியில் சரக்குகளை அனுப்பும் திட்டம் கங்கை நதியில் நேற்று துவங்கப்பட்டுள்ளது.
16 கன்டெயினர்களை ஏற்றிய கப்பல் ஒன்று முதல் கப்பலாக கொல்கத்தாவில் இருந்து வாரணாசிக்கு கங்கை நதியில் நேற்று பயணத்தை துவங்கியது ! இந்த நீர்வழிக்கு NW 1 என்று பெயரிட்டுள்ளனர்.
NW என்பது National Waterway என்பதை குறிக்கும் ! நாடுமுழுவதையும் இணைக்கும் NH (National Highway) சாலைகள் போல நதிகளில் சரக்குகளை கொண்டுசெல்ல மோடி அறிவித்த திட்டம் தான் National Waterway !
நீர்வழி போக்குவரத்து மிகவும் சிக்கனமானது, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததும் கூட ! இத்தனை வருடம் வெறும் பேச்சில், தேர்தல் வாக்குறுதியில் மட்டுமிருந்த இந்த திட்டம் நிதின் கட்கரியின் சீரிய முயற்சியால் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது !