நோபல் பரிசு வாங்க ஒபாமாவுக்கு தகுதி உண்டெனில் டிரம்ப்க்கு இல்லையா?

நேற்று தமிழ் நாளிதழ் ஒன்றில் பணிப்பிரியும் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு கார்டூனை ஷேர் செய்திருந்தார்.
அது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதை கிண்டல் அடிக்கும் ஒரு கார்ட்டூன்..


கார்ட்டூன் அல்லது meme வரைவதற்கு humour sense போதும் வரலாறு அல்லது உண்மையை படிப்பததெல்லாம் தேவையில்லை போலும்.. சரி இதற்கு முன்னால் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உலகம் போற்றும் அமைதிப்போராளி பராக் ஒபாமாவின் கதையை பார்த்துவிட்டு ட்ரம்புக்கு நோபல் வாங்க தகுதி இருக்கிறதா என்பதை பற்றி பேசுவோம்..

~~~~~~~அமைதி ஒபாமா~~~~~~~

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றது 2009 ஜனவரியில். அதே 2009ல் அக்டோபர் மாதம் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது..
அதாவது பதவியேற்ற 9 மாதத்தில் அவர் அமைதிக்கு பெரும்பாடு பட்டதாக சொல்லி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது..
ஆனால் ஒபாமா ஆட்சியில் பிற நாட்டின் மீதான அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல்கள் எப்போதும் இருப்பதை விட சற்றும் குறையாமல் நடத்துவந்தன..

அவர் ஆட்சியில் நடந்த சில முக்கிய நடவடிக்கைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்..

  • லிபியாவில் அதிபர் கடாபியை தூக்கியெறிய உள்நாட்டு போர் மற்றும் குழப்பத்தை விளைவித்தது. பல லட்சம் மக்கள் உள்நாட்டு போர் காரணமாக அகதியாகினர்
  • ISIS தீவிரவாதிகளை கட்டுப்படுத்த தவறியது. அவர்கள் வளர்ந்து உலக அமைதிக்கே ஆபத்தாக முடிந்தார்கள்
  • சிரியா அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை தூண்டிவிட்டது. அதன் விளைவாக சிரியா யுத்ததில் பாதிக்கப்பட்டு மக்கள் சிரியாவை விட்டு ஓடி ஐரோப்பாவில் தஞ்சம் அடைத்தனர். இதனால் லட்சக்கணக்கான அகதிகளை ஐரோப்பிய நாடுகள் ஏற்கவேண்டிய சூழல் உருவாகி அவர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியது.. (கூகுளில் European Migration Crisis என்று தேடவும்)
  • ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கி அது மீண்டுவந்து மத அடிப்படைவாதத்தை தூக்கிப்பிடிக்க உதவியது
  • ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துவதில் தோல்வி மற்றும் அமெரிக்க படைகளை தொடர்ந்து அதிகப்படுத்தியது
  • அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேல் மீது ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றியது
இப்படி ஒபாமாவின் நடவடிக்கைகள் பலவும் அவரை அமைதிக்கு எதிர்பக்கத்தில் தான் நிறுத்துகிறது.
ஆனால் அவர் பதவி ஏற்ற 9வது மாதமே அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.. அதை எதிர்த்து யாரும் கார்ட்டூன் வரையவில்லை, 
ஏனெனில் ஒபாமா ஒரு liberal மற்றும் இடதுசாரி. எனவே மீடிவாயும் அவருக்கு கொடுத்ததில் என்ன தவறு என்று தான் எழுதிதள்ளினார்கள்.. அவர் கடவுளின் அடுத்த தூதுவர் என்று மட்டும் தான் சொல்லவில்லை இவர்கள்..

~~~~~ட்ரம்ப் ஆட்சி~~~~~~

சரி அடுத்து ட்ரம்ப் கதைக்கு வருவோம் 
  • ISIS இயக்கம் தோற்கடிப்பட்டது. அதன் தலைவர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். கொடூரமான இயக்கம் என்று அறியப்பட்ட ISIS சில வருடங்களில் முடிக்கப்பட்ட்டது
  • ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுடன் அமைதி ஒப்பந்தம். படைகளை வாபஸ் பெறுவதில் வேகம் (இது இந்தியாவிற்கு நன்மை பயக்காது என்பது தனி)
  • இஸ்ரேலை எதிர்ப்பதே முதல் குறி என்று சொல்லிவந்த மத்திய கிழக்கு நாடுகளை இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள வைத்தது. UAE மற்றும் பஹரின் நாடுகள் இப்பொழுது இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுதிட்டுள்ளனர். இது மிகப்பெரிய விஷயம். 
மத்திய கிழக்கில் அமைதியே வெடிசத்தமோ அதில் இஸ்ரேல், ஈரான் மற்றும் சவூதிக்கு ஏதேனும் ஒருவகையில் தொடர்பு இருக்கும். வரும் நாட்களில் சவூதியும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம். அதை செய்யமுடிந்தால் ஓபாமாவுக்கு சும்மா தூக்கி கொடுக்கப்பட்ட நோபல் பரிசை ட்ரம்புக்கும் தாராளமாக கொடுக்கலாம்..

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)