உலக தண்ணீர் தினம் : திருவாரூர் கமலாலய குளம்

தண்ணீர் தினம் என்றவுடன் எனக்கு முதலில் ஞாபகம் வந்தது திருவாரூர் கமலாலயம் தான் !

திருவாரூர் கோவிலின் கமலாலயம் குளம் 350 மீட்டர் நீளம் 250 மீட்டர் அகலம் உடையது. காவேரி ஆற்றில் வரும் நீர் தானாக குளத்தில் நிரம்பும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் கமலால குளத்தின் நீர் தான் திருவாரூரில் நிலத்தடி நீர் ஓரளவுக்கு இருப்பதற்கு காரணம்.

ஆனால் திருவாரூர்காரர்கள் (என்னையும் சேர்த்து) கமலாலய குளத்தை பார்த்துக்கொள்ளும் லட்சணம் வெட்கக்கேடானது.


குளத்தை சுற்றி இருக்கும் எல்லா மருத்துவமனைகளின் குப்பைகளும் கொட்டுமிடம் கமலாலயம் தான். சொத்துவரியை ஒழுங்காக வசூலிக்க வழியில்லாத நகராட்சி தான் ஏதோ கோடிரூபாய் வருமானம் வரும் என்று கமலாலய குளத்து நீரை மீன் வளர்ப்பிற்கு குத்தகைக்கு விட்டுருக்கிறார்கள். அவர்கள் மீனுக்கு உணவாக இறைச்சிக்கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகிறார்கள்.

பலகாலம் குளத்தின் நீர் சுத்தமாகத்தான் இருந்தது. நான் பள்ளி செல்லும் காலத்தில் கூட பலரும் கமலாலயத்தில் தினமும் குளிக்கும் பழக்கமுடியவர்களாக இருந்தார்கள்.

இன்று அதே கமலாலயம் அருகில் செல்ல முடியாத அளவுக்கு பச்சை நிறத்தில் ஏதோ கெமிக்கல் குப்பை தொட்டி போல காட்சி தருகிறது. இருமுறை மொத்த நீரையும் வடியவைத்து சுத்தம் செய்துதது அரசு ஆனால் ஒருபயனுமில்லை. எப்படி இருக்கும்? இரவோடிரவாக தான் குப்பையை நாங்கள் கொட்டிவிடுவோமே !

தண்ணீர் பிரச்சனைக்கு அரசு ஒன்றும் செய்யவில்லை என்று அடுத்தவரை கைகாட்டி தப்பித்துக்கொள்வது எளிது, காலி தண்ணீர் குடத்துடன் தெரு தெருவாக அலைவது கஷ்டம். என்ன செய்ய நமக்கு அந்த கஷ்டகாலம் on the way !

இன்று நாம் இருக்கும் நிலைக்கு நாமே பொறுப்பு - விவேகானந்தர் !

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)