இராணுவ கொள்முதலில் வரவேற்கப்படவேண்டிய மாற்றம்

இந்தியாவிற்கு இராணுவ ரீதியில் அதிக உதவி செய்த நாடு ரஷ்யா தான். எனவே நாம் அமெரிக்கா பக்கம் அதிகம் போகக்கூடாது என்ற கருத்து பலர் மத்தியில் உள்ளது,

ஆனால் ரஷ்யா செய்யும் ஆயுத உதவிகளில் இருக்கும் பின்னணி தந்திரத்தை நாம் கவனிக்க வேண்டும்.

IT நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் development (ஒரு பொருளை உருவாக்கி விற்பனை செய்யவது ) முறையில் வரும் லாபத்தை விட support (ஏற்கனவே விற்றபொருளுக்கு service பார்த்துத்தருவது) முறையில் தான் கொள்ளை லாபம் என்று.

ரஷ்யா தான் விற்கும் விமானங்களுக்கு தொழில்நுட்ப உதவியை (Technology Transfer) என்றுமே வழங்குவதில்லை.

உதாரணமாக இந்திய அரசு ரஷ்யா தயாரிப்பான சுகாய் விமானங்களில் 55000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஆனால் சின்ன சின்ன தொழில் நுட்ப கோளாறுக்கும் நாம் ரஷ்யாவின் உதவியையே நாடவேண்டும். அதற்கு அவர்கள் கேட்கும் சேவை கட்டணமும் மிக அதிகம்.

sukhoi Indian air force
இந்திய விமான படையில் சுகாய் விமானங்கள் 

மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் தற்போதைய இராணுவ அமைச்சர் திரு மனோகர் பாரிக்கர் மேலே குறிப்பிட்ட நிலைப்பாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டுவர முயல்கிறார்.

யாருடன் ஒப்பந்தம் போட்டாலும் உன் பொருளை நான் வாங்கி கொள்கிறேன் ஆனால் அந்த பொருளை நாங்களே எப்படி தயாரிப்பது, பழுதுபார்த்துக்கொள்வது போன்றவற்றை நீ கட்டாயம் எங்களுக்கு கற்று தந்தே ஆகவேண்டும் என்று கறாராக ஒப்பந்த ஷரத்துக்களை வடிவமைக்கிறார்.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் ஐந்தாம் தலைமுறை விமான தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆகவிருந்த நிலையில் தொழில்நுட்ப உதவிகளையும் சேர்த்து வழங்கினால் மட்டுமே ஒப்பந்தம் என்று கூறி ரஷ்யாவிற்கு குடைச்சல் கொடுக்க தொடங்கியுள்ளார்.

இது வரவேற்கப்படவேண்டிய மாற்றம் !

நாளை ஆயுத உற்பத்தியில் இந்தியா தன்னிறைவடைய இத்தகைய தொலைநோக்கு திட்டங்கள் அவசியமானவை.

ஆதாரங்கள்:


Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)