Posts

Showing posts with the label வாராக்கடன்

வாராக்கடன் மீட்பில் பின்னடைவு

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாராக்கடன் பிரச்னையை கையாள பிப்ரவரி 12 ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.. கடன் வாங்கியவர்கள், வங்கிகள் என பல நிலைகளில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த சுற்றறிக்கையை நேற்று உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.. ரிசர்வ் வங்கிக்கு இதுபோன்றதொரு சுற்றறிக்கையை அனுப்ப சட்டரீதியாக அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது... பிப்ரவரி 12 சுற்றறிக்கையின் சில முக்கிய பகுதிகள் கிழே * 2,000 கோடிக்கு மேல் கடன் பாக்கியுள்ள நிறுவனம் கடனை தவணையை கட்ட குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு நாள் தாமதமானாலும் அந்த நிறுவனத்தை திவால் சட்டத்தின் அடிப்படையில் NCLT எனப்படும் திவால் வழக்குகளை தீர்க்கும் நீதிமன்றதத்திக்கு எடுத்து செல்லவேண்டும் * அவ்வாறு எடுத்துச்செல்லப்படும் நிறுவனத்தை அடுத்த 180 நாட்களுக்குள்  கடனில் இருந்து மீட்க வழியிருக்கிறதா (Resolution plan) என ஆராய வேண்டும் * அப்படி வழி ஏதும் இல்லையெனில் அந்த நிறுவனத்தை திவால் என அறிவித்து நிறுவனத்தை ஏலம் விடுவதன் மூலமோ அல்லது பகுதியாக சொத்துக்களை விற்பதன் மூலமோ கடனை வங்கிகள் மீட்டுக்கொள்ளலாம் ...

வாராக்கடன் அதிகம் வைத்துள்ள மாநிலம் தமிழகம்

கல்விக்கடனை திரும்ப செலுத்தாமல் வாராக்கடன் அதிகம் வைத்துள்ள மாநிலம் தமிழகம் !!!! தமிழகத்தில் வசூலாகாத கடன் தொகை : 2659 கோடி ₹ நபர்கள் : 1,71,744 பேர் இந்தியாவில் மொத்தம் வசூலாகாத கல்வி தொகை : 6356 கோடி  ₹  நபர்கள் : 3,45,340 பேர் சரியாக சொன்னால் மொத்த இந்தியாவில் வசூல் ஆகாமல் உள்ள கல்வி கடனில் 40% தமிழர்களின் கடன். மொத்த இந்தியாவில் கல்வி கடனை திரும்பி செலுத்தாத நபர்களில் பாதி பேர் தமிழர்கள் !! திமுக வெற்றி பெற்றால் கடன் தொகை தள்ளுபடி என்று நம்பி ஏமாந்த கூட்டம் இது ! தரவு - தி ஹிந்து நாளிதழ் - https://www.thehindu.com/news/national/tamil-nadu/40-study-loan-npas-are-from-tn/article24485638.ece

வங்கி தேர்வுகளுக்கு தயார் செய்துகொண்டிருப்போர் உடனடி கவனத்திற்கு

இந்திய வங்கித்துறை வாராக்கடன் (NPA) பிரச்சனை காரணமாக மிகப்பெரிய அழுத்தத்தில் உள்ளது. வங்கிகளின் லாபம் குறைந்து கொண்டேபோவதும், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் நீரவ் மோடிக்கு 11,000 கோடி அளவுக்கு ஊழல் செய்ய உதவி செய்ததும் கடந்த மாதங்களில் ஊடக செய்திகளை ஆக்கிரமித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கோடிக்கணக்கான கடன்கள் காரணமாக இன்று பல பொதுத்துறை வங்கிகள் மிக மோசமான நிதி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. வாராக்கடன் அளவு ஒரு கட்டத்துக்கு மேல் அதிகரிக்கும் பொழுது  Prompt Corrective Action (PCA) என்றழைக்கப்படும் வங்கியை இழுத்து மூடாமல் காப்பாற்றும் தற்காப்பு முயற்சிகளை  ரிசர்வ் வங்கி மேற்கொள்ள துவங்கும். ஒரு வங்கி PCA நடவடிக்கைக்கு உள்ளானதாக ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்தால் அந்த வங்கியின் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படாது. ஆனால் அந்த வங்கி புதிய கடன்கள் ஏதும் வழங்க முடியாது. தேனா வங்கியின் (Dena Bank) வாராக்கடன் மிக அதிக அளவு சென்றுவிட்டதால் அந்த வங்கியை PCA நடவடிக்கையின் கீழ் சேர்ப்பதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது....

இந்தியாவில் சத்தமில்லாமல் ஒரு பெரிய மாற்றம்

Image
ஒரு பெரிய மாற்றம் இந்தியாவில் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது... இதுவரை பெரிய நிறுவனங்களுக்கு இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடன் அம்பானிக்கு இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடன் என்றுதானே செய்திகளில் படித்தோம்.. இன்று நிலைமை தலைகீழ்... ஒவ்வொரு பெருநிறுவனமும் தாங்கள் வாங்கிய கடனை அவசர அவசரமாக திரும்பி செலுத்துகின்றனர். (மேலும் படிக்க  திவால் சட்டம் - முடிவுக்கு வந்தது Bhushan Steel வழக்கு ) அதிலும் ஒரு பெரிய மனிதர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அல்ல 40000 கோடி ரூபாய் கடனை திரும்பி செலுத்துகிறார் ! அந்த தொழில் அதிபர் வேறு யாருமல்ல அனில் திருபாய் அம்பானி தான்... என்னது அம்பானி கடனை திரும்ப செலுத்துகிறாரா என்று ஆச்சரியமாக இருக்கிறதா ???? Source : கூகுள் தேடுபொறி  இதையெல்லாம் சாதித்து காட்டியது Insolvency & Bankrupty code எனப்படும் திவால் சட்டம்.. வங்கிகளின் வாராக்கடன் அளவுக்கு மிஞ்சி சென்றதால் (சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு) மோடி அரசு பெரிய நிறுவனங்களுக்கு வழங்கிய கடனை வசூல் செய்ய IBC சட்டத்தை கொண்டுவந்தது.. இந்த சட்டப்படி நிறுவனம் வாங்கிய கடன் வாராக்கடன் என்று RBI ...

திவால் சட்டம் - முடிவுக்கு வந்தது Bhushan Steel வழக்கு

Image
வாராக்கடனை வசூல் செய்ய கொண்டுவரப்பட்ட IBC எனப்படும் திவால் சட்ட உதவியுடன் Bhushan Steel நிறுவன கடன் வழக்கு வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது Source : கூகுள் தேடுபொறி  சுமார் 44,000 கோடி ரூபாய் அளவு கடனில் உள்ள Bhushan Steel நிறுவனத்தை IBC சட்ட உதவியுடன் வங்கிகள் ஏலம்விட்டன. இந்த ஏலத்தில் டாடா ஸ்டீல் நிறுவனம் அதிகபட்சமாக 34000 கோடி ரூபாய் குறிப்பிட்டு Bhushan Steel நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது இந்த வழக்கு மூலம் வங்கிகளுக்கு எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பதையும், வங்கிகள் Bhushan Steel நிறுவனத்துக்கு கொடுத்த கடன் தொகையை அடைப்புகுறியிலும் () கீழே குறிப்பிட்டுள்ளேன் * ஸ்டேட் வங்கி - 8083 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 12,000 கோடி ரூபாய்) * PNB வங்கி - 3081 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 4904 கோடி ரூபாய்) * கனரா வங்கி - 1794 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 2856 கோடி ரூபாய்) * ICICI வங்கி - 1583 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 2448 கோடி ரூபாய்) * AXIS வங்கி - 1218 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 1939 கோடி ரூபாய்) Bhushan steel நிறுவனத்துக்கு தனியார், பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாது வெளிநாட்...