இந்தியாவில் சத்தமில்லாமல் ஒரு பெரிய மாற்றம்

ஒரு பெரிய மாற்றம் இந்தியாவில் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது...

இதுவரை பெரிய நிறுவனங்களுக்கு இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடன் அம்பானிக்கு இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடன் என்றுதானே செய்திகளில் படித்தோம்.. இன்று நிலைமை தலைகீழ்... ஒவ்வொரு பெருநிறுவனமும் தாங்கள் வாங்கிய கடனை அவசர அவசரமாக திரும்பி செலுத்துகின்றனர். (மேலும் படிக்க திவால் சட்டம் - முடிவுக்கு வந்தது Bhushan Steel வழக்கு)

அதிலும் ஒரு பெரிய மனிதர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அல்ல 40000 கோடி ரூபாய் கடனை திரும்பி செலுத்துகிறார் ! அந்த தொழில் அதிபர் வேறு யாருமல்ல அனில் திருபாய் அம்பானி தான்...

என்னது அம்பானி கடனை திரும்ப செலுத்துகிறாரா என்று ஆச்சரியமாக இருக்கிறதா ????

திவால் சட்டம்
Source : கூகுள் தேடுபொறி 

இதையெல்லாம் சாதித்து காட்டியது Insolvency & Bankrupty code எனப்படும் திவால் சட்டம்.. வங்கிகளின் வாராக்கடன் அளவுக்கு மிஞ்சி சென்றதால் (சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு) மோடி அரசு பெரிய நிறுவனங்களுக்கு வழங்கிய கடனை வசூல் செய்ய IBC சட்டத்தை கொண்டுவந்தது..

இந்த சட்டப்படி நிறுவனம் வாங்கிய கடன் வாராக்கடன் என்று RBI (ரிசர்வ் வங்கி) முடிவு செய்தால் அந்த நிறுவனத்தை முழுமையாக கையகப் படுத்தவோ விற்கவோ வங்கிகளுக்கு உரிமை உண்டு.. இதன் மூலம் கொடுத்த கடனை வங்கிகள் வசூல் செய்யலாம்...

எங்கே தங்கள் நிறுவனம் கையை விட்டு போய்விடுவோமோ என்ற பயத்தில் பெரிய நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் திரட்டி இன்று கடனை அடைகின்றனர்... இதில் அனில் அம்பானி திரும்ப செலுத்தும் தொகை மட்டும் 50,000 கோடி...

இதேபோல் 40,000 கோடி கடன் உள்ள jaypee associates நிறுவனமும் கடனை அடைக்கும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் பல நிறுவனங்கள் திவால் என அறிவிக்கப்படும் அச்சத்தில் இருப்பதால் கடன்களை வேகமாக அடைக்கும் வழிகளை தேடுகின்றனர்..

பின் குறிப்பு : இந்த செய்தி எந்த வாட்ஸப் forward லும் வராது.. ஏனென்றால் இது நல்ல செய்தி...

http://www.businesstoday.in/sectors/telecom/anil-ambani-reliance-communications-rcoms-rs-25000-crore-debt-sdr/story/266818.html  

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)