Posts

Showing posts with the label பெண்ணியம்

மூன்றாவது கோணம் - யேசுதாஸின் குரல்

Image
காலையில் செய்தித்தாள் வாங்கலாம் என்று கடைக்கு சென்ற பொழுது கடைக்கு வெளியே தொங்க விடப்பட்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த அனைத்து செய்திதாள்களின் தலையங்கத்திலும் தவறாமல் இருந்த ஒரு செய்தி என்னை ஈர்த்தது. "பெண்களுக்கு எதிரான கருத்து  யேசுதாஸ் பேச்சால் சர்ச்சை" நானும் ஆர்வமாக செய்தித்தாளை வாங்கி அவரது பேச்சு பற்றிய கட்டுரையை படித்தேன். அவரது முழு பேச்சும் கீழே தரப்பட்டுள்ளது. "பெண்கள் ஆண்களைப் போல் இருக்க முயற்சிக்கக் கூடாது. பெண்களின் அழகு அவர்கள் எளிமையில் இருக்கிறது. ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து மற்றவருக்கு பெண்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. எதை மறைக்க வேண்டுமோ அதை மறைப்பது அவசியம்.  பெண்கள், தங்கள் உடையலங்காரத்தால் ஆண்களை தேவையில்லாத செய்கைகளில் ஈடுபடத் தூண்டக் கூடாது. ஆண்களை ஈர்க்கும் வகையில் உடைகளை அணியக் கூடாது.  ஜீன்ஸ் அணியும் பெண்ணைப் பார்க்கும் ஓர் ஆண் ஆடைக்குள் ஒளிந்திருக்கும் பெண்ணின் அங்கங்களையும் பார்க்கத் தூண்டப்படுகிறான். ஜீன்ஸ் - இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான உடை"  இதை படித்த பொழுது எனக்கு ஏற்பட்ட உணர்வு இது அவரது சொந்த கர...