மூன்றாவது கோணம் - யேசுதாஸின் குரல்

காலையில் செய்தித்தாள் வாங்கலாம் என்று கடைக்கு சென்ற பொழுது கடைக்கு வெளியே தொங்க விடப்பட்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த அனைத்து செய்திதாள்களின் தலையங்கத்திலும் தவறாமல் இருந்த ஒரு செய்தி என்னை ஈர்த்தது.

"பெண்களுக்கு எதிரான கருத்து  யேசுதாஸ் பேச்சால் சர்ச்சை"

நானும் ஆர்வமாக செய்தித்தாளை வாங்கி அவரது பேச்சு பற்றிய கட்டுரையை படித்தேன்.

அவரது முழு பேச்சும் கீழே தரப்பட்டுள்ளது.

Jesudas controversial statement against women


"பெண்கள் ஆண்களைப் போல் இருக்க முயற்சிக்கக் கூடாது. பெண்களின் அழகு அவர்கள் எளிமையில் இருக்கிறது. ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து மற்றவருக்கு பெண்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. எதை மறைக்க வேண்டுமோ அதை மறைப்பது அவசியம். 

பெண்கள், தங்கள் உடையலங்காரத்தால் ஆண்களை தேவையில்லாத செய்கைகளில் ஈடுபடத் தூண்டக் கூடாது. ஆண்களை ஈர்க்கும் வகையில் உடைகளை அணியக் கூடாது. 

ஜீன்ஸ் அணியும் பெண்ணைப் பார்க்கும் ஓர் ஆண் ஆடைக்குள் ஒளிந்திருக்கும் பெண்ணின் அங்கங்களையும் பார்க்கத் தூண்டப்படுகிறான். ஜீன்ஸ் - இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான உடை" 

இதை படித்த பொழுது எனக்கு ஏற்பட்ட உணர்வு இது அவரது சொந்த கருத்து இதை ஏற்று கொள்வதும் கொள்ளாததும் அவரவர் சொந்த கருத்து என்பதே. இது பெண்களுக்கு எதிரான கருத்து என்று எனக்கு சொல்லத்தெரியவில்லை.

அவரது பேச்சைவிட என்னை அதிகம் பாதித்த ஒரு செயல் செய்தித்தாள்களின் தலையங்கம் தான்.

யேசுதாஸின் கருத்து என்று என்று எந்த செய்தித்தாளும் சொல்லவில்லை, யேசுதாஸின் பெண்களுக்கு எதிரான கருத்து என்றே சொல்லி  தலையங்கம் எழுதி இருந்தன.

எப்படி சுற்றுசூழல் பற்றி பேசினாலே வளர்ச்சிக்கு எதிரான கருத்து என்று கருத்தாக்கம் உருவாக்கப்படுகிறதோ, அதேபோல் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு என்று வாயை திறந்தால் ஒட்டு மொத்த பெண்களுக்கும் எதிரானவர் என்று தவறான கருத்தாக்கம் மீடியாவாள் உருவாகப்பட்டு வருகிறது.

துஷ்டனை கண்டால் தூர விலகு என்று பெரியவர்கள் சொல்வார்கள். இல்லை இல்லை நான் நவீன நாகரீகத்தவன் நான் விலகமாட்டேன் துஷ்டனை திருந்த சொல்லுங்கள் என்று சொல்வது போல் தான் உள்ளது மகளிர் அமைப்புகளின் போராட்டம்.

தங்கள் வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு யேசுதாஸுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மகளிர் அமைப்பினர் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் பெண்களுக்கான முன்னேற்றம் ஆடை சுதந்திரத்தில் இல்லை.அதையும் தாண்டி நாம் செல்லவேண்டிய தொலைவு அதிகம்.

அவரது பேச்சால் ஆண் ஆதிக்கம் நிலைத்ததோஅல்லது பெண்கள் சுதந்திரம் கெட்டதோ தெரியவில்லை, ஆனால் எங்கள் 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகளுக்கு இரவு 9 மணி விவாத நிகழ்ச்சிக்கு ஒரு தலைப்பு கிடைத்தது.

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)