இது ஒரு சாலையின் கதை
15 வருடங்களுக்கு முன்பு அந்த சாலையில் சென்றவர்கள் யாரும் KFC யை பார்த்திருக்க மாட்டார்கள், வானளாவிய கட்டிடங்களை சத்தியமாக பார்த்திருக்க மாட்டார்கள். அதிகபச்சம் புதர்களையும் செடிகளையும் மட்டுமே பார்த்திருப்பார்கள் .
இன்றோ வானளாவிய கட்டிடங்கள், எப்பொழுதும் கழுத்தில் அடையாள அட்டையுடன் சுற்றும் மனிதர்கள், அவர்களின் பர்சுகளை நம்பி இயக்கப்படும் ஏ.சி பேருந்துகள் என வருடங்கள் அந்த சாலையை உரு தெரியாமல் மாற்றிவிட்டது.
ஆம் சென்னையில் இருந்து பல்லவன் செய்து வடித்த சிற்ப கோவில்களை காண மஹாபலிபுரம் செல்ல மட்டும் பயன்படுத்தப்பட்ட சாலை தான் (அட நம்ம OMR ரோடு தாங்க ) இன்று இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரி இந்தியர்களின் வாழ்வாதாரம்.
அவர்களுக்கு மட்டுமா ? இரண்டு லட்சம் ஊழியர்களை நம்பி தொடங்கப்பட்ட தங்கும் விடுதிகள் , KFC, பிட்சா கடைகள், ஆந்திரா உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் , ஆட்டோக்கள் என இந்த சாலையால் வாழ்கையை ஓட்டுவோர் பலர்.
CTS , TCS , இன்போசிஸ், விப்ரோ என இந்த சாலையில் இந்தியாவின் மிக முக்கியமான அனைத்து ஐ.டி கம்பெனிகளும் தனது கிளைகளை வைத்துள்ளன.
புதர் மண்டி கிடந்த இந்த சாலையின் இருபக்கங்களையும் ஐ.டி நிறுவனங்களுக்கு கொடுக்கலாம் என்று எந்த புண்ணியவானுக்கு தோணுச்சோ இன்று சென்னையை இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐ.டி நகரமாக மாற்றியுள்ளது.
அந்த புண்ணியவானுக்கு நன்றி !
இன்றோ வானளாவிய கட்டிடங்கள், எப்பொழுதும் கழுத்தில் அடையாள அட்டையுடன் சுற்றும் மனிதர்கள், அவர்களின் பர்சுகளை நம்பி இயக்கப்படும் ஏ.சி பேருந்துகள் என வருடங்கள் அந்த சாலையை உரு தெரியாமல் மாற்றிவிட்டது.
ஆம் சென்னையில் இருந்து பல்லவன் செய்து வடித்த சிற்ப கோவில்களை காண மஹாபலிபுரம் செல்ல மட்டும் பயன்படுத்தப்பட்ட சாலை தான் (அட நம்ம OMR ரோடு தாங்க ) இன்று இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரி இந்தியர்களின் வாழ்வாதாரம்.
அவர்களுக்கு மட்டுமா ? இரண்டு லட்சம் ஊழியர்களை நம்பி தொடங்கப்பட்ட தங்கும் விடுதிகள் , KFC, பிட்சா கடைகள், ஆந்திரா உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் , ஆட்டோக்கள் என இந்த சாலையால் வாழ்கையை ஓட்டுவோர் பலர்.
CTS , TCS , இன்போசிஸ், விப்ரோ என இந்த சாலையில் இந்தியாவின் மிக முக்கியமான அனைத்து ஐ.டி கம்பெனிகளும் தனது கிளைகளை வைத்துள்ளன.
அந்த புண்ணியவானுக்கு நன்றி !
Comments
Post a Comment
Post ur comments and help us to improve