Posts

Showing posts with the label உலக நடப்பு

மாலத்தீவு தேர்தல் - வெற்றி பெற்றது இந்தியா !!☺

மாலத்தீவில் நடத்த தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாகும்.. ஏற்கனவே ஆட்சியில் இருந்த அதிபர் சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டு இந்தியாவை எதிர்த்தார்.. இந்த தேர்தலின் மூலம் தங்களுக்கு சாதமான ஒருவரை மாலத்தீவில் ஆட்சியில் அமர்த்துகிறது இந்தியா... ஸ்ரீலங்காவில் மஹிந்தா ராஜபக்சே சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்ததாள் அவரை தோற்கடிக்க இந்திய உளவு அமைப்பான RAW இலங்கையில் இறங்கி வேலைசெய்ததும், ராஜபக்சே தான் தோல்வியுற இந்திய உளவுத்துறையே காரணம் என்று பேட்டியளித்ததும் இந்தியாவின் பெரிய அண்ணன் மொமெண்ட்ஸ்களில் சில...

முதுகில் குத்தும் நண்பன் !

Image
இந்தியாவும் அமெரிக்காவும் 21ஆம் நூற்றாண்டுக்கு பிறகு நெருங்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகே பாகிஸ்தானுக்கு ஜாலரா அடிப்பதை குறைத்து கொண்டது அமெரிக்கா. இன்று ஓபாமாவும் மோடியும் செல்பி நண்பர்களாக இருக்கலாம் ஆனால் அமெரிக்கா என்றுமே வியாபார நோக்கத்தை மட்டுமே முன் நிறுத்தும் நண்பன் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா 2022 ஆம் ஆண்டுக்குள் சூரிய சக்தியை கொண்டு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவை 20,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த முடிவெடுத்துள்ளது. முடிவு எடுக்கப்பட்டது 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில். அமெரிக்கா இதற்கு உச்சி குளிர வாழ்த்து சொல்லியது. (காரணம் இல்லாமலா ?)ஆனால் 2014 ஆம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்றதும் சூரிய கொள்கையில் பெரும் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சூரிய செல் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே கொள்கை மாற்றமாகும். (Make in India). நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சூரிய செல்லை பயன்படுத்தினால் தான் உங்களுக்கு மானிய சலுகை எல்லாம் கிடைக்கும். இந்தியாவிலேயே ...

Temporary Smile 3.37 Price cut

Image
Today Modi's government announced one of its biggest reforms by deregulating Diesel price. (Earlier in UPA Government Petrol prices were deregulated) Why Diesel matters much? In India, the fuels like Diesel, Kerosene, Domestic gas prices are controlled by Government. So Government only fix the prices. Market price may be high or low, but Government will fix the price of Diesel. UPA government had decided to raise diesel price in small dose until it align with market price. With continuation to that Diesel price are raised 50 paise every month & in past 19 months Diesel price are raised by   Rs. 11.81 per liter. Now market price of crude oil nearly falls under $80 due to global situations. but keep in mind its not permanent. We can't or even US can't predict the oil price. It will be in fluctuation through out the year.   As of now the price is below 80 $. but you cant expect the same through out the year. Lets take an small example to explain...

வரலாற்றின் பக்கங்கள் - தடுப்புகள்

Image
ஏப்ரல் 15 , 1989 சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ளது தியனன்மென் சதுக்கம் என்ற இடம். அன்று எப்பொழுதும் இல்லாத அளவுக்கு திடீரென மக்கள் கூட ஆரம்பித்தார்கள். அவர்கள் சீனாவில் ஜனநாயகத்தை (பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம்....) வலியுறுத்தி அரசுக்கு எதிராக குரல்கள் எழுப்பினார்கள். போராட்டத்தை முதலில் அரசு அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் போராட்டம் நாட்களை கடந்து வார கணக்காக நீண்டது. 10 லட்சம் மக்கள் தியனன்மென் சதுக்கத்தில் குவிந்தார்கள். போராட்டம் காட்டு தீயை போல 500 நகரங்களுக்கு பரவியது. போரட்டகாரர் ஒருவவரை நோக்கி சீனா பீரங்கிகள் சீனா அரசு விழித்து கொண்டது. தியனன்மென் சதுக்கத்தை நோக்கி ராணுவம் தனது நவீன 59 ரக பீரங்கிகளுடன் முன்னேறியது. மக்கள் கண்மூடி தனமாக தாக்க பட்டார்கள். போராட்டம் ஒடுக்கப்பட்டது. இந்த ஆண்டோடு தியனன்மென் சதுக்க போராட்டம் முடிவுற்று 25 ஆண்டுகள் ஆகிறது. எங்கே மக்கள் மீண்டும் விழித்து கொள்வார்களோ என்று பயந்த சீனா அரசு செய்திருக்கும் செயல்கள் சீனா தனி மனித சுதந்திரத்திற்கு எத்தனை மதிப்பு தருகிறது என்பதை காட்டுகிறது. சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளில் சில ...