Posts

Showing posts with the label கருணாநிதி

புத்தக விமர்சனம் - இனியவை இருபது (கலைஞர் திரு. கருணாநிதி)

Image
கலைஞர் திரு. கருணாநிதி அவர்களின் எழுத்துகளை படிக்க இன்றுதான் சந்தர்ப்பம் வாய்த்தது! புத்தகத்தின் பெயர் : இனியவை இருபது கலைஞர் அவர்கள் தான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் பற்றி எழுதிய பயண குறிப்பு புத்தகம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எதர்ச்சியாக கண்ணில்பட்டது இந்த புத்தகம். பயண குறிப்பாக மட்டுமல்லாமல் அவர் சென்று வந்த இடங்களின் வரலாற்றை சொன்னவிதம் அருமை ! உதாரணமாக இத்தாலி பயணத்தை பற்றி குறிப்பிடும் பொழுது ஜூலியஸ் சீசர் மற்றும் கிளியோபட்ரா காதல் மற்றும் ஆண்டனி - கிளியோபட்ரா காதல்  (ஆம் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் சீசர் கொல்லப்பட்டபின் பிரமாதமான உரை நிகழ்த்தி மக்களை ப்ரூட்டஸ் மற்றும் அவரது கூட்டாளிகளிக்கு எதிராக திருப்பிய அதே ஆண்டனி தான்) பற்றி விவரித்த விதங்கள் அருமை ! கண்டிப்பாக திரு. கலைஞர் அவர்களின் மற்ற எழுத்துக்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாவதை தவிர்க்க முடியவில்லை ! அவர்தம் எழுத்துகளை படித்தவர்கள் உங்கள் மனம் கவர்ந்த புத்தக பெயர்களை சிபாரிசு செய்தால் உதவியாக இருக்கும் ! ஆவலுடன் ! விக்கி

ஸ்டாலினுக்கு பொன்னான வாய்ப்பு !

Image
தமிழகம் சந்தித்த வித்தியாசமான தேர்தல் இது ! அ.தி.மு.க விற்கு இரண்டாவது முறை ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்த அதேநேரம் தி.மு.க விற்கு 90 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழகமக்கள் கொடுத்துள்ளார்கள்.    குறிப்பாக ஜெயலலிதா போல் தனித்து இயங்க விரும்பும் தி. மு.க பொருளாளர் ஸ்டாலினுக்கு இது அறிய வாய்ப்பு என்றுதான் சொல்லவேண்டும். சென்னை மேயராக செயல்பட்டதை தாண்டி ஸ்டாலின் நிர்வாக திறமையை வெளிப்படுத்த பெரிதாக வாய்ப்புகள் தரப்படவில்லை. இந்த தேர்தலிலாவது ஸ்டாலின் முதலமைச்சராக முன்னிறுத்தப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எனக்கு பின் ஸ்டாலின் என ஒரே போடாக போட்டார் 93 வயதான கருணாநிதி. ஆனால் கருணாநிதியின் பேராசையில் மக்கள் மண்ணை தூவி விட்டனர். தி.மு.கவின் தோல்வியிலும் ஸ்டாலினுக்கு சாதகமான அம்சம் ஒன்று நடந்துள்ளது எனில் அது அவர்கள் பெற்ற 90 உறுப்பினர் எண்ணிகையை தான் சொல்லவேண்டும். கருணாநிதி வரும் 5 வருடங்களில் கையெழுத்து போடுவதை தவிர வேறு எதற்கும் சட்டசபை இருக்கும் வடக்கு பக்கம்  தலைவைத்து கூட படுக்கமாட்டார். எனவே ச...