Posts

Showing posts with the label பட்ஜெட்

பட்ஜெட் 2019 - என் புரிதல் (சரியாக செல்லாதவை)

வறுமையை ஒழிக்கவேண்டும், வளர்ச்சியை பெருக்கவேண்டும். அதற்கு திட்டங்கள் வேண்டும். திட்டங்களுக்கு செலவு செய்ய பணம் வேண்டும்.  பணத்திற்கு என்ன செய்யலாம் ??  இது வரை இருந்த எல்லா நிதியமைச்சரும் எதிர்கொண்ட பிரச்சனை இது தான்..  பணத்தை திரட்ட அரசு கடன் வாங்கலாம், பெட்ரோல் டீசல் வரியை உயர்த்தலாம், GST வரியை உயர்த்தலாம், பணக்காரனுக்கு அதிக வரி விதிக்கலாம், மத்திய அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி திரட்டலாம். இறக்குமதிக்கு வரியை உயர்த்தலாம். இவைதான் தான் காலம் காலமாக எல்லா நிதியமைச்சரும் நிதி திரட்ட செய்துவரும் நடவடிக்கைகள்.. இதே பாணியை அச்சு பிசுங்காமல் காப்பி அடித்துள்ளார் நிர்மலா சீதாராமன் அவர்கள். இதில் இருந்து நமக்கு தெரிவது அவரிடமும், அவரின் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளிடமும் Out of Box ஐடியாக்கள் எதுவும் இல்லை என்பதே..... ஒரு உதாரணம் சொல்கிறேன் : "5% customs duty on imported books, to promote the domestic publishing and printing industry" - பட்ஜெட் 2019 இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5% வரி உயர்வு அறிவித்த நிர்மலா சீதாராமன், இந்த வரி உயர்...

பட்ஜெட் 2018 : என் கருத்து

Image
Source : Google image search * பசுமை புரட்சிக்கு வித்திட்ட M S சுவாமிநாதன் தலைமையில் விவசாய பிரச்சனைகளை தீர்க்க அமைக்கப்பட்ட கமிட்டி (2004-06) தனது அறிக்கையை தயாரித்து வழங்கி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான தீர்வுகளில் ஒன்று விவசாய உற்பத்திக்கு அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum Support Price - MSP) விட 1.5 மடங்கு அதிகம் விலை தரவேண்டும் என்பதே. இந்த அறிவுரையை மோடி இந்த முறை செயல்படுத்தியுள்ளார். இனி விவசாய பொருட்கள் MSP விலையை விட 1.5 மடங்கு அதிக விலைகொடுத்து அரசாங்கம் கொள்முதல் செய்யும். மேலே சொன்ன அறிவிப்பு விவசாயிகளுக்கு நல்ல விலை ஈட்ட உதவி செய்யும். அதே போல் விவசாய பதப்படுத்துதல் மற்றும் குளிர் சாதன வசதிக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Sea food ஏற்றுமதிக்கு 10000 கோடி ஒதுக்கீடு வரவேற்கப்படவேண்டிய அம்சம். விவசாய கடன் தள்ளுபடி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது நல்லவிஷயம். * பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. (குறையும் என்ற நடுத்தர மக்களின் கனவில் மண் விழுந்தது தான் மிச்சம்) * 10 கோடி மக்களுக்கு 5 லட்ச ரூபாய் இன்...