Posts

Showing posts with the label விவசாயம்

பிளாஸ்டிக் தடை விவசாய விவசாய பொருட்களின் தேவையை அதிகரிக்கும்

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு இந்த பிளாஸ்டிக் தடை ! தாமரை இலை பயன்பாடு அதிகரித்துள்ளது ஒரு நல்ல உதாரணம் ! தாமரை இலை வேண்டுமெனில் குளங்கள் பாதுகாக்க படவேண்டும்.. குளமிருந்தால் தானே தாமரை மலரும் ? தாமரையின் தேவை அதிகரிக்கும் பொழுது குளங்களில் நீர் இருப்பு மற்றும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலெழும்.. அப்படித்தான் குளங்களையும் தாமரையையும் பாதுகாக்க முடியும்.. எந்த பொருளையும் அழிவிலிருந்து காப்பாற்ற ஒரே வழி அதற்கு சந்தையில் தேவையை ஏற்படுவது தான்... வெறும் இரக்கம் மட்டும் எந்த ஒரு பொருளையும் அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது.. விவசாயத்தை நாம் அணுகும் பொழுது இரக்கத்தை விட பொருளாதார பார்வையுடன் அணுகுவது தான் விவசாயத்தை காப்பாற்ற உதவும்... 

கரும்பு விவசாயிகளுக்கு பெட்ரோல் விலை குறைவதும் ஒரு பிரச்சனை

Image
பெட்ரோல் விலை குறைந்துகொண்டே வருவதால் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் தேவை வெகுவாக குறையும் என கணிக்கப்படுகிறது... கவனிக்க: எத்தனால் அதிகம் கரும்பில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.. எனவே உலகின் பெரிய கரும்பு உற்பத்தியாளரானா பிரேசில் 2019ல் கரும்புக்கு பதிலாக சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே சர்க்கரை விலை அடுத்த ஆண்டு குறையும். நம்ம விவசாயிகளுக்கு இதையெல்லாம் எடுத்துரைத்து நாம் அவர்களை தயார்செய்வதில்லை.. அவர்கள் வழக்கம் போல் கரும்பை உற்பத்தி செய்து விட்டு விலை கிடைக்கவில்லை என்று ரோட்டுக்கு வருவார்கள்...

மக்கா ஓடிவாங்கலே !! விவசாயத்தை காப்பாத்தீட்டு வந்துருவோம்

சம்பளகாரனுக்கு வருஷா வருஷம் சம்பளம் ஏறனும், வியாபாரி எவரும் நஷ்டத்துல ஒரு சோப்பு டப்பா கூட விற்க மாட்டீங்க ஆனா விவசாயி மட்டும் கடைசி வரைக்கும் நஷ்டத்துல 10 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் வெங்காயம் விற்று உங்களுக்கு சோறு போடணும் ??? சுயநலம் என்றால் என்ன என்பதை நம்ம மக்க கிட்ட தான் கத்துக்கனும் டோய்... இதுல Good morning, Good Afternoon அனுப்புற மாதிரி டெய்லி நாலுவாட்டி விவசாயத்த காப்பாத்தனூன்னு பேஸ்புக் போஸ்ட், அதுக்கு நாலு பேர் கண்ணீர் smiley வேற.... விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றாமல் விவசாயத்தை உணர்ச்சிகர பிரச்னையாக வைத்திருப்பதும், விவசாயத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், கடன் தள்ளுபடி செய்து அடுத்த வருடம் மீண்டும் அவனை கடன்காரன் ஆக்குவது என எல்லாமே விவசாயத்தை அழிக்கும் செயல் தான்....வந்துருவோம்..

எனக்கு ஒரு டவுட்

எனக்கு ஒரு டவுட் டெல்டா மாவட்டம் திருவாரூர் எடுத்துக்கோங்க. இங்க ஊருக்கு வெளியே இருந்த விவசாய நிலத்தையெல்லாம் plot போட்டு விற்பனை செய்வதும் வாங்குவதும் யாரு ? வெளிநாட்டுல சம்பாதிச்சது, அரசு ஊழியர் கையில் எக்கச்சக்கமா புழங்குற பணம், IT மக்கள் சம்பாத்தியம், வியாபாரிகள் கிட்ட இருந்த கருப்பு பணம் இதெல்லாம் எதுல முதலீடு செஞ்சா double ஆகுன்னு கணக்கு போட்டு ஊருக்கு வெளில இருந்த விவசாய நிலத்தை எல்லாம் plot போட்டு வாங்கி ரியல் எஸ்டேட் வளர்த்தது கார்ப்பரேட்டா நம்ம லோக்கல் மக்களா ?? இதுல விவசாயம் காப்போம்ன்னு hashtag வேற டெய்லி போட்டுக்கவேண்டியது...

விவசாயத்தை காக்க விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுங்கள்

இந்தியாவின் விவசாய பிரச்னையை புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல.. சிறிய உதாரணம் சொல்கிறேன் : 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நாட்டிலேயே அதிகபட்சமாக  விவசாயத்தில் 14% வளர்ச்சி  கண்ட மாநிலம் மத்திய பிரதேசம். இதற்கு காரணம் அரசாங்கம் நீர் சார்ந்த திட்டங்களிலும், பயிர் உற்பத்தியிலும் அதீத கவனம் செலுத்தியது தான். ஆனால் அதன் விளைவு இன்று வேறுமாதிரி வெளிப்பட்டிருக்கிறது. அதீத உற்பத்தி காரணமாக கருப்பு உளுத்தம் பருப்பு குவிண்டாலுக்கு வெறும் ₹ 4000 க்கு விற்பனை ஆகிறது. இது அரசாங்கம் அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலையான (MSP) ₹ 5600 க்கு 29% குறைவான விலையாகும். பூண்டு அதீத உற்பத்தி காரணமாக கிலோ ₹ 7 க்கு வாங்கப்படுவதாக குமுறுகின்றனர் விவசாயிகள். விலை இன்னும் வீழும் என்ற அச்சம் வேறு உள்ளது. உற்பத்தியில் மட்டும் அரசு பெரிய அளவில் கவனம் செலுத்த சந்தை படுத்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இன்று விவசாயிகளின் போராட்ட களமாக மாறியுள்ளது மத்திய பிரதேசம். சந்தை இருந்தால் தான் வியாபாரம் நடக்கும் , லாபம் வந்தால் தான் ஒரு தொழிலை செய்பவர் அதை தொடர்வார். விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால்...

இந்தியாவின் New Bio Fuel Policy/புதிய உயிரி எரிபொருள் கொள்கை

இந்தியாவின் New Bio Fuel Policy/புதிய உயிரி எரிபொருள் கொள்கை பற்றி கேள்விபட்டீர்களா ? பெட்ரோலில் 10% வரை எத்தனால் கலக்க இந்தியாயாவில் அனுமதி உண்டு. அதே சமயம் இதுவரையில் கரும்புச் சாறிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை மட்டும்தான் பெட்ரோலில் கலக்க இந்தியா அனுமதித்தது. ஆனால் இனி சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம், மழை-ஈரம்-பூஞ்சைகளால் சேதமடைந்த உணவு தானியங்கள், உருளைக் கிழங்கு, நகர்ப்புற திடக் கழிவு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலைக் கூடப் பயன்படுத்த அனுமதி தரப்பட்டிருக்கிறது. வேளாண் கழிவுகளைக் கொள்முதல் செய்து அதிலிருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். அதே சமயம் மூலப்பொருள் அதிகம் கிடைக்கும்பொழுது உயிரி எரிபொருளின் தயாரிப்பு விலையும் கணிசமாக குறையும் ! அதே போல் 12 உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவவும் இந்திய முடிவெடுத்துள்ளது ! பெட்ரோல் விலை அனைத்துத்தரப்பு மக்களையும் வதைக்கும் இந்த நேரத்தில், சமீபத்தில்அறிவித்த Bio Fuel Policy நமக்கு எதிர்காலம் பற்றிய ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. Reference : https://tamil.thehindu.com...

விவசாயம் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை... !

இந்தியாவின் விவசாய பிரச்னையை புரிந்து கொள்வது எளிதான காரியமல்ல... உணவின்றி தவிக்கும் மக்கள் ஒரு பக்கம் என்றால் உற்பத்தியில் வருடா வருடம் உச்சத்தை தொடும் விவசாயிகள் மறுபக்கம்.. உதாரணத்திற்கு பால் பொருட்களை எடுத்துக்கொள்வோம்.. இந்திய பால் உற்பத்தி உலகிலேயே பெரியது..கடந்த ஆண்டு இந்தியா உற்பத்தி செய்த பாலின் அளவு 176 மில்லியன் டன்கள்... ஆனால் சந்தையில் பாலுக்கு தேவை அவ்வளவு இல்லை. எனவே பாலின் கொள்முதல் விலை குறைந்து கொண்டே வருகிறது. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏறிக்கொண்டே போகிறது.. SMP (Skim Milk Powder) என்று சொல்லப்படும் பால் பவுடராக மாற்றி உலக அளவில் ஏற்றுமதி செய்யலாம் என்றால் உலக அளவில் பால் பவுடரின் விலையும் ஒரு டன்னுக்கு $ 3519 ல் இருந்து $ 2000 அளவுக்கு விழுந்து விட்டது.. இப்பொழுது விவசாயிகள் வீதிக்கு வந்துவிட்டார்கள். அரசே அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்து கொள்ளவேண்டும் என்று.. சந்தையில் தேவையே இல்லாத பொழுது அரசாங்கம் மட்டும் பாலை கொள்முதல் செய்து என்ன தான் செய்யமுடியும் ?

பட்ஜெட் 2018 : என் கருத்து

Image
Source : Google image search * பசுமை புரட்சிக்கு வித்திட்ட M S சுவாமிநாதன் தலைமையில் விவசாய பிரச்சனைகளை தீர்க்க அமைக்கப்பட்ட கமிட்டி (2004-06) தனது அறிக்கையை தயாரித்து வழங்கி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான தீர்வுகளில் ஒன்று விவசாய உற்பத்திக்கு அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum Support Price - MSP) விட 1.5 மடங்கு அதிகம் விலை தரவேண்டும் என்பதே. இந்த அறிவுரையை மோடி இந்த முறை செயல்படுத்தியுள்ளார். இனி விவசாய பொருட்கள் MSP விலையை விட 1.5 மடங்கு அதிக விலைகொடுத்து அரசாங்கம் கொள்முதல் செய்யும். மேலே சொன்ன அறிவிப்பு விவசாயிகளுக்கு நல்ல விலை ஈட்ட உதவி செய்யும். அதே போல் விவசாய பதப்படுத்துதல் மற்றும் குளிர் சாதன வசதிக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Sea food ஏற்றுமதிக்கு 10000 கோடி ஒதுக்கீடு வரவேற்கப்படவேண்டிய அம்சம். விவசாய கடன் தள்ளுபடி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது நல்லவிஷயம். * பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. (குறையும் என்ற நடுத்தர மக்களின் கனவில் மண் விழுந்தது தான் மிச்சம்) * 10 கோடி மக்களுக்கு 5 லட்ச ரூபாய் இன்...