இந்தியாவின் New Bio Fuel Policy/புதிய உயிரி எரிபொருள் கொள்கை

இந்தியாவின் New Bio Fuel Policy/புதிய உயிரி எரிபொருள் கொள்கை பற்றி கேள்விபட்டீர்களா ?

பெட்ரோலில் 10% வரை எத்தனால் கலக்க இந்தியாயாவில் அனுமதி உண்டு. அதே சமயம் இதுவரையில் கரும்புச் சாறிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை மட்டும்தான் பெட்ரோலில் கலக்க இந்தியா அனுமதித்தது. ஆனால் இனி சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம், மழை-ஈரம்-பூஞ்சைகளால் சேதமடைந்த உணவு தானியங்கள், உருளைக் கிழங்கு, நகர்ப்புற திடக் கழிவு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலைக் கூடப் பயன்படுத்த அனுமதி தரப்பட்டிருக்கிறது.

வேளாண் கழிவுகளைக் கொள்முதல் செய்து அதிலிருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். அதே சமயம் மூலப்பொருள் அதிகம் கிடைக்கும்பொழுது உயிரி எரிபொருளின் தயாரிப்பு விலையும் கணிசமாக குறையும் !

அதே போல் 12 உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவவும் இந்திய முடிவெடுத்துள்ளது !

பெட்ரோல் விலை அனைத்துத்தரப்பு மக்களையும் வதைக்கும் இந்த நேரத்தில், சமீபத்தில்அறிவித்த Bio Fuel Policy நமக்கு எதிர்காலம் பற்றிய ஒரு நம்பிக்கையை அளிக்கிறது.

Reference :

https://tamil.thehindu.com/opinion/editorial/article24170228.ece

https://sputniknews.com/asia/201808101067094368-india-biofuel-refineries/

https://sputniknews.com/asia/201805171064534319-india-aims-promote-use-biofuel/

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)