தொழிலதிபர்னா திருடன் - இந்த அடிப்படையே தப்பு

nilesh shah tweet


என்ன திமிர் பார்த்தீங்களா இந்த பெரிய மனுசனுக்கு ? இந்தியாவில் தொழில் உற்பத்தி செய்யவேண்டுமாம் !!!

லூசு பய எப்ப பாத்தாலும் இந்தியா உருப்புடனும், தொழில் வளர்க்கணும், முதலாளிகளுக்கு தொழில் செய்ய உதவிசெய்யனுன்னு உளறிக்கிட்டு இருக்கான் ! இந்தியாவுக்கு எதுக்கு தொழிற்சாலை ??? தொழில் அதிபர் என்றாலே திருடனாச்சே !!!!

தொழிலதிபர்னா திருடன்னு வளரும் சமுதாயத்தின் மனதில் வெற்றிகரமாக விதத்தாயிற்று !

என்ஜினீயர் படிக்குறவனே தொழிலுக்கு எதிராத்தான் facebook போஸ்ட் போடறான் ! அத என்ஜினீயரிங் பாடம் எடுக்குற வாத்தியார் ஷேர் பண்றார் !!!! இந்த அடிப்படையே தப்பு !

ஒன்று உண்மை சின்ன கடையோ பெரிய அம்பானியோ நாம் தொழில்முனைவோர்களை மதிக்காத வரை இங்கே எதுவும் மாறப்போவது இல்லை !

நம்ம எல்லா பிரச்சனைக்கும் அமெரிக்கா தான் காரணம், அம்பானி பெட்ரோல் விலையை ஏத்துறார், தொழிலதிபர்னா திருடன், CIA நெனச்ச இந்தியா இருக்காது இதெல்லாம் fantasy கதைகள்.

கேட்க சுவாரசியமா இருக்கும். கொஞ்சம் திறமையா வார்த்தை ஜாலத்தோட பேசுவரன் சொன்னா உண்மை மாதிரி கூட இருக்கும். ஆனால் எதுவும் உண்மை இல்லை !

தொழில்முனைவோர் தான் நமக்கு தேவை ! அவர்கள் தவறு செய்தால் தட்டி கேட்போம் ஆனால் அவர்கள் இல்லாமல் இந்தியா உருப்படா முடியாது ! DOT


Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)