அறிவியல் ரீவைண்ட் - சுத்தியல் vs இறகு எது தரையை முதலில் தொடும் ?

ஒரே நேரத்தில் ஒரு சுத்தியலையும், இறகையும் கீழேபோட்டால் சுத்தியல் தான் முதலில் தரையை தொடும். சுத்தியல் கனமானது என்பதால் தான் சீக்கிரம் விழுகிறது என்பதே பலரின் உடனடி புரிதல். ஆனால் உண்மை காரணம் அதுவல்ல !

கீழே விழும் பொழுது ஒரு பொருளுக்கு காற்று ஏற்படுத்தும் தடையே அது தரையை தொடும் நேரத்தை தீர்மானிக்கிறது ! இதை முதலில் உணர்ந்தவர் கலிலியோ கலீலி என்கிற மேதை !

கலிலியோ சொன்னது உண்மை என்று உணர்த்த நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய பொழுது ஒரு சோதனையை செய்து காட்டியது !

நிலவில் விண்வெளி வீரர் ஒரே நேரத்தில் ஒரு சுத்தியலையும், இறகையும் கீழே போடுவார். அவை இரண்டும் ஒரே நேரத்தில் தரையை தொடும் !

பார்க்க நாசாவின்  வீடியோ


Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)