ஏன் கோவிலில் சிலைகளை போட்டோ எடுக்க கூடாது ? நீங்கள் கொள்ளை அடிக்கவா ?

கோவிலில் சிலைகளை போட்டோ எடுக்க கூடாது என்று அறநிலைய துறை அடம்பிடிப்பதே கோவில் சிலைகள் கொள்ளை போக துணை புரியத்தான் என்று நண்பர் சொன்னார்.

மீட்கப்பட்ட பல சிலைகள் எந்த கோவிலில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அறநிலைய துறைக்கே தெரியவில்லை. காரணம் அவை எங்கும் பதிவு செய்யப்படவில்லை. தங்க சிலையை போட்டோ எடுக்க கூடாது என்று சொல்வதில் கூட ஒரு அர்த்தம் இருக்கலாம். கீழே இணைக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள். 

idol theft
Source : DTNext Newspaper Article
இவை எதுவும் கர்பகிரஹ சிலைகள் இல்லை, கோவிலில் ஆங்காங்கே தென்படும் சாதாரண சிலைகள் தான் ஆனால் இவைகள் சிலை மார்க்கெட்டில் சில கோடிக்கு ஏலம் போகிறது. இதை கூட போட்டோ எடுக்க அனுமதிக்க மாட்டார்கள். காரணம் அப்பொழுது தான் அவை தொலைந்து போனாலும் கண்டுபிடிக்க முடியாது.

நாம் தினம்தினம் சென்று விழுந்து வணங்கும் சிலை ஒரிஜினல் என்பதற்கு எந்த கேரண்டியும் இல்லை மக்களே ! பக்தர்கள் விழித்துக்கொண்டு கோவிலை இந்து சமய அறநிலைய துறையிடம் இருந்து காப்பற்றினால் தான் உண்டு... !

விழித்துக்கொள்ளுவோம் !!!! ஒன்று அரசாங்கம் சிலைகளை பதிவு செய்யட்டும் அல்லது மக்களை போட்டோ எடுக்க அனுமதிக்கட்டும் !

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

சங்கதாரா புத்தக விமர்சனம்