ஊர் பேசுது - மணல் வியாபாரம்
ஊர் பேசுது !
ஆற்றில் மணல் எடுத்தால் சுற்றுசூழல் பாதிக்கும் என்கிறது ஒரு தரப்பு ! ஆற்றுமணலை எடுத்து எடுத்து தான் நிலத்தடி நீர் கிழே செல்கிறது என்கிறார்கள் ! (கவனிக்க நாம் நிலத்தடி நீரை நம்பித்தான் விவசாயமே செய்கிறோம்)
மணல் எடுக்காவிட்டால் கட்டுமான துறை பாதிக்கும் என்கிறது இன்னொரு தரப்பு.
சரி மணலை எடுக்கவேண்டாம் இறக்குமதி செய்யலாம் என்றால் இறக்குமதி செய்யப்படும் மணல் தரமானதாக இல்லை என்று ஏற்கனவே ஊருக்குள் பேச்சை கிளப்பிவிட்டாயிற்று. ஒருவரும் இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை..
கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை நம்பி ஒரு பெரிய பொருளாதார சக்கரத்தை கட்டமைத்து வைத்திருக்கிறோம். கட்டிட தொழிலாளி முதல் நாட்டின் பெரிய தொழில்களான சிமெண்ட், ஸ்டீல் அவ்வளவு ஏன் வீட்டுகடன் கொடுப்பதில் வங்கிகள் என கட்டுமான துறையின் மந்தமானது பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது இன்னொரு தரப்பு !
திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டுமான துறை மீளும், ரியல் எஸ்டேட் கிங் திமுக என 2021 க்காக ஏக்கமாக காத்திருக்குது இன்னொரு தரப்பு !