பெட்ரோல் விலை குறையுமான்னு தெரியனுமா? இதை படிங்க !

சவூதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர், ஜமால் கசோக்கி (Jamal Khashoggi) சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் சவூதி அரசுக்கும், சவூதியின் ஏமன் படையெடுப்புக்கும் எதிராக கடும் விமர்சன கட்டுரைகளை எழுதி வந்தார்.

இதன் காரணமாக சவூதியில் அவருக்கு மிரட்டல்கள் வரவே 2017ல் அமெரிக்காவில் குடியேறி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் இணைந்தார். அங்கும் சவூதி அரசை விமர்சித்து தொடர்ந்து எழுதிவந்தார் !

துருக்கியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த ஜமால் தனது முந்தைய திருமண விவாகரத்து சான்றிதழ் தொடர்பாக துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரிலுள்ள உள்ள சவூதி தூதரகத்துக்குச் செப்டம்பர் 28ஆம் தேதி சென்றார். தூதரகத்துக்குள் சென்ற ஜமால் திரும்பி வரவேயில்லை.

இதனால் அதிர்ச்சியுற்ற மேலை நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, சவூதிக்கு அழுத்தம் கொடுக்க ஜமால் தூரகத்துக்குள்ளேயே கொடூரமாக கொல்லப்பட்டதை சவூதி ஒத்துக்கொண்டது !

இதனால் நெருங்கிய கூட்டாளிகளான அமெரிக்கா மற்றும் சவூதி இடையேயான உறவில் பெரிய விரிசல் விழத்துவங்கியுள்ளது. தன்னிடம் அடைக்கலம் தேடிவந்தவனை தூதரகத்துக்குள் கொடூரமாக கொல்லப்பட்டத்தை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அமெரிக்கா எங்கே பொருளாதார தடை விதிக்குமோ என்று கணக்கு போட்ட சவூதி அரசு, எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பெட்ரோல் விலையை ஏற்றுவோம் என மிரட்ட துவங்கியுள்ளது !

உலகின் ஆகப் பெரிய பெட்ரோல் உற்பத்தியள்ளார் சவூதி என்பதும், இன்னொரு பெரிய உற்பத்தியாளரான இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடதக்கது. 

சக நிகழ்வுகளின் கோர்வை தான் உலகமே என்ற தசாவதாரம் பட ஆரம்பத்தில் ஒரு வசனம் வரும் ! அதுபோல போல சவூதி அரசரை திட்டி ஒருவர் கட்டுரை எழுதுகிறார், அதற்காக அரசர் அவரை கொலை செய்கிறார் அதனால் நீங்களும் நானும்  பெட்ரோலுக்கு அதிக பணம் தரவேண்டும் !

Reference :

https://www.washingtonpost.com/politics/congress/trump-says-he-needs-to-learn-more-on-slain-saudi-writer/2018/10/21/62359494-d4f8-11e8-a4db-184311d27129_story.html?noredirect=on&utm_term=.ac256c2cd6c3  

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)