இந்திய பொருளாதாரம் - குட்டி கதை (கட்டுரை அத்தியாயம் 1)

இந்திய அரசாங்கத்தின் செயல்பாட்டை இந்த ஒரு கதையை கொண்டு நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

முகுந்தன் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். தன்னிடம் சுத்தமாக பணம் இல்லாததால் கடன் வாங்கும் முகுந்தன் அந்த பணத்தை கொண்டு சாப்பாடு செலவு, வீட்டின் இதர செலவுகளை செய்தான். அவனிடம் இருந்த மொத்த பணமும் தீர்ந்து போனது. அடுத்த மாத செலவுக்கு அவனிடம் பணம் இல்லை. மீண்டும் கடன் வாங்குகிறான்.

அவன் செய்த தவறு வாங்கிய கடனை கொண்டு தொழிலிலோ வேறு ஏதேனும் விதத்திலோ முதலீடு செய்து அந்த பணத்தை பெருக்கி அதை கொண்டு குடும்பத்தை நடத்தி இருக்கவேண்டும்.

digital native


கடன்வாங்குவது தவிர்க்க முடியாதது என்று கூறும் ஆட்சியாளர்கள், அந்த கடனை வாங்கி என்ன செய்தார்கள் என்பது தான் கேள்விக்குரியது. ? அவர்கள் முகுந்தனை போலத்தான் நடந்து கொள்கிறார்கள்.

ஒரு நல்ல அரசாங்கம் தொழில் செய்வதற்கான வழிகளை ஏற்படுத்தி தரவேண்டும். அதை கொண்டு மக்கள் தொழில் செய்து தங்கள் உணவு உடை இருப்பிடம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும்.

ஆனால் இந்திய அரசாங்கம் கடனை வாங்கி முதலீடு செய்வதற்கு பதிலாக பல ஊதாரி திட்டங்களுக்கு செலவு செய்கிறது. அதனிடம் உள்ள பணம் தீர்த்து போகும் போது ஒன்று  மீண்டும் வெளியே கடன் வாங்குகிறது அல்லது மக்களிடம் அதிக வரிவிதித்து அவர்கள் உழைப்பை உறிஞ்சுகிறது.

Comments

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)