Posts

Showing posts from September, 2015

கர்நாடகா தண்ணி தர்லேன்னு திட்டற தமிழர்களே இத முதல்ல படிங்க

Image
இது ஆந்திர மாநிலத்தின் கதை  கோதாவரி - கிருஷ்ணா நதி நீர் இணைப்பு திட்டம்  கால்வாய் நீளம் - 174 KM திட்ட செலவு - 1300 கோடி தொடங்கப்பட்ட ஆண்டு - மே மாதம் 2014 முடிக்கப்பட்ட ஆண்டு - செப்டம்பர் 2015 இது தமிழகத்தின் கதை  காவிரி வைகை இணைப்பு திட்டம்  கால்வாய் நீளம் - 225 KM திட்ட செலவு - 2800 கோடி தொடங்கப்பட்ட ஆண்டு - 2008 முடிக்கப்பட்ட ஆண்டு - ??????? (முடிச்சா தான) திட்டம் முடிக்கப்படாததிற்கு தமிழக அரசு சொல்லும் காரணம் நிதி இல்லை! ஆனால் தமிழக அரசு 2012 -13 ஆம் ஆண்டு செலவிட்ட தொகைகள் இலவச லேப்டாப் திட்டம் 10,000 கோடி இலவச மின்விசிறி, கிரைண்டர் திட்டம் 1250 கோடி இலவச வேட்டி சேலை 300 கோடி சரி நம்ம மக்களும் அடுத்த தேர்தலுக்கு பிரிஜ், வாஷிங் மெசின் தருவாங்களான்னு வாய பொளந்து காத்துட்டு இருக்க கூட்டம் தான ! நதியா எனச்சா ? என்ன விவசாயம் செத்தா என்ன ? சிவகார்த்திகேயன அடிச்சுபுட்டாங்கலாம்ல ?? அது என்ன மேட்டர்ன்னு அலசி ஆராய்வோம்.  ஆதாரங்கள் :  http://www.dinamalar.com/news_detail.asp?id=1347852 http://www.thehindu.com/news/national/tamil-nadu/the-canal-connectin

வல்லவனுக்கு வல்லவன் - #1 (சபாஸ் சரியான ஜோடி)

Image
வல்லவனுக்கு வல்லவன் தொடர் தமிழக மற்றும் இந்திய அரசியலில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பாகும். படித்து விட்டு உங்கள் மேலான கமென்ட்களை பதிவிடவும். சபாஸ் சரியான ஜோடி எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை மனிதரின் மாயாஜாலத்தில் தமிழகம் அரசியல் சுழன்ற காலகட்டம் அது. ஆனால் அவருக்கு எதிர் கட்சியாக விளங்கிய கருணாநிதி அரசியலில் யாருக்கும் சளைத்தவர் அல்ல.  1977 - அதிமுக சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக வெற்றியை பறித்து ஆட்சியை கைபற்றி இருந்தது. அப்பொழுது இந்திரா காந்தியும் எம்.ஜி.ஆரும் கூட்டணியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றார்கள். ஆனால் அதிமுக இந்திரா கூட்டணி சில மனகசப்பால் நீடிக்கவில்லை. 1979 ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் கலைஞர் உடன் கூட்டு சேர்ந்து பாராளமன்ற தேர்தலை சந்தித்தது.  எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக திமுக இந்திரா கூட்டணி பாராளமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். பிரதமர் ஆனதும் இந்திரா செய்த முதல் வேலை எதிர் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் ஆட்சி களைப்பு.  தமிழகத்தில் கருணாநிதியின் நெருக்குதலால் எம்.ஜி.ஆர் ஆட்சியு

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Image
நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ?  பாஸ் என்கிற பாஸ்கரன் திரைபடத்தில் சந்தானம் பேசிய நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ? வசனம் மூலம் புகழ் பெற்றது அப்பாடக்கர் என்கிற வார்த்தை.  நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ? உண்மைலேயே அப்பாடக்கர் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? அப்பாடக்கர் வார்த்தை உருவான சுவாரசிய கதை இதோ.  அமிர்தலல் விதல்தாஸ் தக்கர் (Amritlal Vithaldas Thakkar) என்பவர் மிக பெரிய சமூக சீர்திருத்தவாதி. குஜராத்தில் பிறந்த இவர் ஹரிஜன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர்.  சுதந்திரத்திற்கு முன்னால் மெட்ராஸ் மாகாணத்திலும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இவரை மெட்ராஸ் மக்கள் பாசமாக  தக்கர் பாபா என்று அழைத்தனர். (குஜராத்தியில்  பாபா என்றால் அப்பா என்று பொருள்). தக்கர் பாபா பெரிய அறிவாளி, பல துறைகளில் சிறந்து விளங்கியவர். அவரிடம் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் சொல்வார். நாளடைவில் மெட்ராஸ் மக்கள் யாரையும் பெரிய அறிவாளியா என்று கேலியாக குறிப்பிட   பெரிய அப்பா தக்கரா ? என்று கேட்க தொடங்கினர். பின்னாளில் அப்பா தக்கரா என்ற வார்த்தை மருவி அப்பாட

முதுகில் குத்தும் நண்பன் !

Image
இந்தியாவும் அமெரிக்காவும் 21ஆம் நூற்றாண்டுக்கு பிறகு நெருங்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகே பாகிஸ்தானுக்கு ஜாலரா அடிப்பதை குறைத்து கொண்டது அமெரிக்கா. இன்று ஓபாமாவும் மோடியும் செல்பி நண்பர்களாக இருக்கலாம் ஆனால் அமெரிக்கா என்றுமே வியாபார நோக்கத்தை மட்டுமே முன் நிறுத்தும் நண்பன் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா 2022 ஆம் ஆண்டுக்குள் சூரிய சக்தியை கொண்டு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவை 20,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த முடிவெடுத்துள்ளது. முடிவு எடுக்கப்பட்டது 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில். அமெரிக்கா இதற்கு உச்சி குளிர வாழ்த்து சொல்லியது. (காரணம் இல்லாமலா ?)ஆனால் 2014 ஆம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்றதும் சூரிய கொள்கையில் பெரும் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சூரிய செல் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே கொள்கை மாற்றமாகும். (Make in India). நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சூரிய செல்லை பயன்படுத்தினால் தான் உங்களுக்கு மானிய சலுகை எல்லாம் கிடைக்கும். இந்தியாவிலேயே சோலார் பே

இந்தியன் டிக்ஸனரி - டிராபிக் சிக்னல்

Image
இந்தியர்கள் தாங்களாக ஒரு  டிக்ஸனரி உருவாக்கினாள் அது எப்படி இருக்கும் என்ற கற்பனையே "இந்தியன் டிக்ஸனரி"  என்ற தொடர்.  இந்த தொடரின் முதல் வார்த்தை டிராபிக் சிக்னல்: டிராபிக் சிக்னல்  (Traffic Signal)  சிவப்பு விளக்கு - டிராபிக் போலீஸ் நிற்கிறாரா என்று பார்த்து விட்டு இல்லையெனில் தாரளமாக கடந்து செல்லலாம் .   மஞ்சள் விளக்கு - உங்கள் வாகனத்தை உச்ச வேகத்தில் செலுத்தி சிக்னலை கடக்கவும் .  பச்சை விளக்கு - ஹாரனில் இருந்து கை எடுக்காதே ! ப்ரேக்கில் கால் வைக்காதே !