Posts

Showing posts from February, 2016

ஸ்டிக்கர் மட்டும் தான் புதுசு நண்பர்களே !

Image
சினிமா பார்த்துவிட்டு நண்பர்களுடன் அரட்டை அடித்த படியே ECR - OMR இணைப்பு சாலையில் நடத்து சென்று கொண்டிருந்தோம். சாலையோரத்தில் ஜெயலலிதாவிற்கு புதன்கிழமை வரப்போகிற பிறந்தநாளுக்கு இன்றே வைக்கப்பட்ட பிறந்தநாள் ப்ளக்ஸ் பேனர்கள் பற்றி நண்பர் ஒருவர் கமெண்ட் அடிக்க மற்றொரு நண்பர் ஸ்டிக்கர் கலாச்சாரம் பற்றி குறிப்பிட அ.தி.மு.க அரசின் ஸ்டிக்கர் அரசியலை கலாயித்து தீர்த்தது நண்பர் பட்டாளம். இடம் :  Dr.  கலைஞர் கருணாநிதி சாலை, சோழிங்கநல்லூர்.  படிக்க தலைப்பு ! 

கர்நாடக இசையின் பிறப்பிடம் திருவாரூர் - திருவாரூர் நீங்கள் அறிய வேண்டிய தகவல்கள் 3

Image
இந்தியாவில் சங்கீதம் என்றால் இரண்டை முக்கியமாக குறிப்பிடுவர். ஒன்று ஹிந்துஸ்தானி சங்கீதம் மற்றொன்று கர்நாடக சங்கீதம். இதில் கர்நாடக சங்கீதம் தென் இந்தியாவை மையமாக கொண்டதாகும். சரி கர்நாடக சங்கீதத்துக்கும் சோழ நாட்டில் உள்ள திருவாரூருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? கர்நாடக சங்கீதத்திற்கு மிகப்பெரிய பங்களிப்புகளை அளித்த  மூன்று இசை மேதைகள்  தியாகராசர் ,  சியாமா சாஸ்திரிகள் ,  முத்துச்சாமி தீட்சிதர் . இவர்களை கர்நாடக இசை மும்மூர்த்திகள் என்று அழைப்பர். இவர்கள் மூவருக்கும் ஒரு அதிசயக்கதக்க ஒற்றுமை உண்டு.  மூவருமே பிறந்தது திருவாரூரில் தான் . மூவர் பிறந்த வீடுகளும் திருவாரூரில் இன்றும் அவர்களின் நினைவாக போற்றி பாதுகாக்கப்படுகின்றன கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள்  பல கர்நாடக இசை மேதைகளும், சுற்றுலா பயணிகளும் இந்த இடங்களை பார்த்து செல்கின்றனர். மூன்று இடங்களுமே திருவாரூர் கோவிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் அமைந்துள்ளது. தியாகராஜா சுவாமிகள் வீடு - புது தெரு, திருவாரூர் ஷ்யாமா சாஸ்திரிகள் நினைவு வீடு - மேட்டுத் தெரு, திருவாரூர் முத்துசுவாமி தீட்சிதர

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி

Image
தி.மு.க காங்கிரஸ் கூட்டணி என்பது எதிர்பார்த்த கூட்டணி தான். சரி, பழைய தி.மு.க காங்கிரஸ் கூட்டணி யை சற்று திரும்பிபார்போம் ! 19 மார்ச் 2013, இலங்கை தமிழர் பிரச்சனையை காரணம் காட்டி தி. மு. க UPA 2 கூட்டணி மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது. ஜூன் 2013, கனிமொழியை மீண்டும் ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் கதவை தட்டியது தி. மு. க. அதுவும் கூட்டணி முறிந்த இரண்டரை மாதத்தில். காங்கிரஸ் போட்ட நிபந்தனை நீங்கள் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் நாங்கள் கனிமொழிக்கு ஆதரவு தருகிறோம் என்பது. குடும்பமே கழகம் என்பதால் கழக நன்மை கருதி குடும்ப உறுப்பினர் கனிமொழிக்கு ராஜ்ய சபை எம்.பி பதவி வாங்கித்தந்தார் கலைஞர் . ஆகஸ்ட் மாதம் 2013, ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவும் அளித்தார். ஆதாரம்: http://www.ndtv.com/south/congress-to-support-kanimozhi-for-a-second-term-in-rajya-sabha-526497 மார்ச் மாதம் கூட்டணி பிளவு ! ஜூன் மாதம் கனிமொழிக்காக மீண்டும் கூட்டணி உறவு. இன்றை