Posts

Showing posts with the label வரலாற்றின் பக்கங்கள்

citizen திரைப்பட கிளைமாக்ஸும் - இராஜராஜ சோழனும்

சிட்டிசன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் வில்லன்களுக்கு வித்தியாசமான ஒரு தண்டனையை அறிவிப்பார். அதன்படி வில்லன், அவரது குடும்பத்தார்,அவர்தம் குடும்பத்துடன் திருமண உறவு செய்துகொண்டவர்கள் என அனைவரது குடியுரிமை மற்றும் சொத்துகளும் பறிக்கப்பட்டு சொந்தநாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்படுவர். புதுமையான தண்டனை என்று சொல்லப்பட்ட இந்த தண்டனை சுமார் 1000 வருடங்களுக்கு முன்னரே வழங்கியுள்ளார் இராஜராஜ சோழன் ! சோழ சரித்திரத்தில் அவிழ்க்க முடியாத ரகசியமான ஆதித்ய கரிகாலன் கொலை பற்றிய மர்மத்தை தனது சிற்றப்பா உத்தம சோழரின் ஆட்சிக்கு பின் பதவியேற்ற ராஜராஜ சோழர் கண்டுபிடிக்க முயல்கிறார். தனது இரண்டாவது ஆட்சியாண்டில் (கி. பி 986-987) பாண்டிய ஆபத்துதவிகளின் தலைவரான ரவிதாசன் மற்றும் அவரது சகோதரர்களே அதித்ய கரிகால சோழரின் கொலைக்கு காரணம் என்பதை கண்டுபிடித்த ராஜராஜர் அவர்களுக்கு வழங்கிய தண்டனை வித்தியாசமானது. அதாவது ரவிதாசன் அவர்தம் சகோதர்கள் மட்டுமல்லாது அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர் (சிறு குழந்தைகள் உட்பட) என அனைவரின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டதோடு...

கர்நாடக இசையின் பிறப்பிடம் திருவாரூர் - திருவாரூர் நீங்கள் அறிய வேண்டிய தகவல்கள் 3

Image
இந்தியாவில் சங்கீதம் என்றால் இரண்டை முக்கியமாக குறிப்பிடுவர். ஒன்று ஹிந்துஸ்தானி சங்கீதம் மற்றொன்று கர்நாடக சங்கீதம். இதில் கர்நாடக சங்கீதம் தென் இந்தியாவை மையமாக கொண்டதாகும். சரி கர்நாடக சங்கீதத்துக்கும் சோழ நாட்டில் உள்ள திருவாரூருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? கர்நாடக சங்கீதத்திற்கு மிகப்பெரிய பங்களிப்புகளை அளித்த  மூன்று இசை மேதைகள்  தியாகராசர் ,  சியாமா சாஸ்திரிகள் ,  முத்துச்சாமி தீட்சிதர் . இவர்களை கர்நாடக இசை மும்மூர்த்திகள் என்று அழைப்பர். இவர்கள் மூவருக்கும் ஒரு அதிசயக்கதக்க ஒற்றுமை உண்டு.  மூவருமே பிறந்தது திருவாரூரில் தான் . மூவர் பிறந்த வீடுகளும் திருவாரூரில் இன்றும் அவர்களின் நினைவாக போற்றி பாதுகாக்கப்படுகின்றன கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள்  பல கர்நாடக இசை மேதைகளும், சுற்றுலா பயணிகளும் இந்த இடங்களை பார்த்து செல்கின்றனர். மூன்று இடங்களுமே திருவாரூர் கோவிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் அமைந்துள்ளது. தியாகராஜா சுவாமிகள் வீடு - புது தெரு, திருவாரூர் ஷ்யாமா சாஸ்திரிகள் நினைவு வ...

திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு - திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் 2

Image
திருவாரூர் பற்றி நமது தளத்தில் ஏற்கனவே வெளிவந்து 3000 வாசகர்கள் மேல் படித்து மகிழ்ந்த  திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் என்ற கட்டுரையின் அடுத்த பாகமே திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு என்ற இந்த கட்டுரை. 18 ஆம் நூற்றாண்டு  நாம் 10 ஆம் வகுப்பில் மனப்பாடம் செய்து பாஸான கர்நாடக போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுகாரர்கள் இந்தியாவில் தங்கள் இருப்பை நிலைநாட்ட மோதிக்கொண்டனர். பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகத்தின் கீழ் மெட்ராஸ், கடலூர் மற்றும் திருச்சி என மூன்று முக்கிய நகரங்கள் இருந்தன. அவற்றை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று பிரெஞ்சு படை திரட்டியது.  பிரெஞ்சு படைக்கு  தலைமை ஏற்ற தளபதி லாலே பிரிட்டிஷ் வசம் இருந்த கடலூர் கோட்டையை அசால்ட்டாக கைப்பற்றினார். லாலேவிற்கு அடுத்து இரண்டு வாய்ப்புகள் இருந்தன ஒன்று  வடக்கு திசையில் உள்ள மெட்ராஸ் நகரை நோக்கி படையெடுப்பது மற்றொன்று தெற்கு பக்கம் உள்ள திருச்சிநோபோலி (இன்றைய திருச்சி நகரம்) நோக்கி படையெடுப்பது.    பூவா தல...

வல்லவனுக்கு வல்லவன் - #1 (சபாஸ் சரியான ஜோடி)

Image
வல்லவனுக்கு வல்லவன் தொடர் தமிழக மற்றும் இந்திய அரசியலில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பாகும். படித்து விட்டு உங்கள் மேலான கமென்ட்களை பதிவிடவும். சபாஸ் சரியான ஜோடி எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை மனிதரின் மாயாஜாலத்தில் தமிழகம் அரசியல் சுழன்ற காலகட்டம் அது. ஆனால் அவருக்கு எதிர் கட்சியாக விளங்கிய கருணாநிதி அரசியலில் யாருக்கும் சளைத்தவர் அல்ல.  1977 - அதிமுக சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக வெற்றியை பறித்து ஆட்சியை கைபற்றி இருந்தது. அப்பொழுது இந்திரா காந்தியும் எம்.ஜி.ஆரும் கூட்டணியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றார்கள். ஆனால் அதிமுக இந்திரா கூட்டணி சில மனகசப்பால் நீடிக்கவில்லை. 1979 ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் கலைஞர் உடன் கூட்டு சேர்ந்து பாராளமன்ற தேர்தலை சந்தித்தது.  எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக திமுக இந்திரா கூட்டணி பாராளமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். பிரதமர் ஆனதும் இந்திரா செய்த முதல் வேலை எதிர் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் ஆட்சி களைப்பு.  தமிழகத்தில் கருணாநி...

சம்பளத்தோடு ஆபரேஷன் - தஞ்சாவூர் நீங்கள் அறியாத தகவல்கள்

Image
லட்ச லட்சமாக பணம்கொடுத்து வைத்தியம் பார்த்தவர்களை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். வைத்தியமும் பார்த்துவிட்டு கையில் பணமும் கொடுத்த தஞ்சாவூர் கதை பற்றி கேள்விபட்டதுண்டா? தஞ்சாவூர் நீங்கள் அறியாத தகவல்கள்  தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் ஆவணங்களை ஆய்வு செய்த ஒரு நிபுணர் குழு ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்றது.  காரணம், சரஸ்வதி மஹால் ஆவணங்களில்   நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே  44 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ததற்கான குறிப்புக்கள் உள்ளன. அவற்றில் 6  குறிப்புக்கள்  மோடி ஸ்கிரிப்ட் (Modi  Scripts)   எனப்படும் மராத்தா மொழியிலும், 38 குறிப்புக்கள் ஆங்கிலத்திலும் உள்ளன. சிகிச்சை எடுத்து கொண்டவர்களின் வயது 5 முதல் 60. அந்த ஆவணங்களோடு 18 படங்களும் கிடைத்தன. ( சில படங்கள் உங்கள் பார்வைக்கு )   இந்த படங்கள் கண் நோயையும் அதற்கு சிகிச்சை அளிக்கும் முறையையும் தெளிவாக விளக்கியுள்ளன. "கார்னியா (Cornea), லென்ஸ் (lens), கண்ஜெக்டிவ் (Conjective) " போன்ற பல நவீன கால வார்த்தைகளு...

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

Image
திருவாரூரில் தங்க கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர் தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன என்பது உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் : திருவாரூர் தங்க கோவில் : திருப்பதி கோவில் தங்கத்தால் செய்யப்பட்ட கோபுரத்திற்கு பெயர் போனது. திருப்பதியை போன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறை கோபுரமும் தங்கத்தால் செய்யப்பட்டது.  ஆச்சர்யமாக உள்ளதா ? தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனுக்கு திருவாரூரில் பிறந்த பரவை என்ற நாட்டிய பெண்ணின் மேல் காதல். அவளுக்கு திருவாரூர் கோவில் என்றால் அத்தனை பிரியம். அவள் வேண்டுகோளுக்காக ராஜேந்திரன் திருவாரூர் கோவில் விமானம் மற்றும் கருவறை சுவர்களை தங்கத்தால் வேய்ந்தான். தங்கமா ? திருவாரூர் கோவில்லையா ? யார்கிட்ட விட்ரிங்க ரீல் என்று கூறுவோருக்கு ராஜேந்திரன் செய்த கல்வெட்டு வரிகள்  " உடையார் வீதிவிடங்கதேவர் குடத்திலும் வாய்  மாடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும் பொன்வேய்தான் " தங்கம் காலபோக்கில் பலரால் அழிக்கப்பட்டுள்ளது. இன்று மிஞ்சம் இருப்பது கற்க...

உச்ச நீதிமன்ற தீர்ப்பு (பாகம் 3)

Image
தொழிற்சங்கங்கள் மற்றும் தி. மு. க சார்பில் தமிழக அரசின் பணி நீக்க நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டன. தமிழக அரசு விடுவதாக இல்லை. கே.கே.வேணுகோபால் மற்றும் பி.பி.ராவ் என்ற தலைசிறந்த வழக்கறிஞர்கள் தமிழக அரசு சார்பாக வாதாடினார். இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் பரபரப்பான தீர்ப்பைவழங்கினர். "Employees thinking strike is their birth right, No political party or organisation can claim a right to paralyze the economic and industrial activities of a state or nation or inconvenience citizens even  t he trade unions, who have a guaranteed right for collective bargaining, have no right to go on strike. Government employees could not complain that they could hold society to ransom by going on strike to ventilate their grievances" தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் என்ற பெயரில் மாநில அரசையே ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது தங்கள் பிறப்புரிமை என்று கருதக்கூடாது. அவர்களுக்கு போராட்டம் செய்ய உரிமை இல்லை . தமிழக  அரசு எடுத்த நட...

ஜெயலலிதா பாணி (பாகம் 2)

Image
அரசாங்கம் உழியர் போராட்டதுக்கு முடிவு கட்ட தயாரானது. போராட்டம் தொடங்கப்பட்ட ஜூலை 1 அன்றே பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சத்தமில்லாமல் அரசு செயலில் இறங்கியது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்யப்பட்டவர்கள் ஒப்பந்த தொழிலார்களாக பணியில் அமர்த்தப்பட்டனர். எஸ்மா சட்டம் அவசர சட்டமாக அமல் செய்யப்பட்டது. பல அரசு அலுவலகங்கள் அத்தியாவசிய பணிகளுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டன. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீண்டும் பணிக்கு திரும்பாத 1.7 லச்சம் ஊழியர்கள் நிபந்தனையின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது போரட்டகாரர்கள் சற்றும் எதிர்பாராத திருப்பம். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் ஆயிரக்கணக்கில் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர். பணிக்கு திரும்பிய பலரும் மீண்டும் பணியில் சேர்ந்துக்கொள்ளப்படவில்லை. எஸ்மா சட்டத்தை  எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி சிறையில் இருக்கும் அனைத்து ஊழியர்களையும் விடுவிக்க உத்தரவிட்டார். உயர்நீதி மன்ற தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் த...

ஜூலை 1, இது வெறும் ஆரம்பம் (பாகம் 1)

Image
ஜூலை 1, 2003. ஜெயலலிதா தமிழக முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்திருந்தது. அரசு ஊழியருக்கு சம்பளம் வழங்கவே கஷ்டப்படும் அளவுக்கு நிதி நிலை மோசமாக இருந்ததால் பல சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. D.A என்ற அழைக்கப்படும் பஞ்சப்படி மற்றும் சில பென்ஷன் சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்தும் ஊதிய உயர்வு போன்றவற்றை வழியுறுத்தியும் போக்குவரத்து தொழிலாளர்கள், ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தன. மொத்தம் 13 லச்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு இயந்திரம் ஸ்தம்பித்தது.  தமிழகம் சந்தித்த மிகப்பெரிய அரசு ஊழியர் வேலைநிறுத்தமாக இது பார்க்கப்பட்டது. போராட்டத்துக்கு பல அரசியல் கட்சிகளும் (தி.மு.க உட்பட) ஆதரவு தெரிவித்தன. அரசு   Essential Services Maintenance Act  ( ESMA )  சட்டம் பாயும் என எச்சரித்தது. எனினும் போராட்டம் தொடர்ந்தது. ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் செயல்படாததால் அரசு தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்து விடும் என்று அவர்கள் தீர்க்க...

வரலாற்றின் பக்கங்கள் - போராடுவோம் ! போராடுவோம் !

Image
நாள் 28/12/2014, தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக திரு. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசாங்கம் செயல்படவில்லை என்ற நிலையில் தமிழக போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின் முதல்வராக பொறுப்பேற்று கொண்ட பன்னீர்செல்வம் (ஓ.பி. எஸ்) முதல்வர் நாற்காலியில் கூட அமராமல் சத்தமில்லாத முதல்வராக தொடர்கிறார். ஓ.பி. எஸ் அவர்கள் இந்த போராட்டத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அதற்கு முன்னர் இதேபோல் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு ஊழியர் வேலை நிறுத்த போராட்டத்தை ஜெயலலிதா எப்படி எதிர்கொண்டார் என்பதை வரலாற்றின் பக்கங்களை திரும்பி பார்போம். ஜூலை 1, இது வெறும் ஆரம்பம் (பாகம் 1) ஜெயலலிதா பாணி (பாகம் 2) உச்ச நீதிமன்ற தீர்ப்பு (பாகம் 3)

இது ஒரு சாலையின் கதை

Image
15 வருடங்களுக்கு முன்பு அந்த சாலையில் சென்றவர்கள் யாரும் KFC யை பார்த்திருக்க மாட்டார்கள், வானளாவிய கட்டிடங்களை சத்தியமாக பார்த்திருக்க மாட்டார்கள். அதிகபச்சம் புதர்களையும் செடிகளையும் மட்டுமே பார்த்திருப்பார்கள் . இன்றோ வானளாவிய கட்டிடங்கள், எப்பொழுதும் கழுத்தில் அடையாள அட்டையுடன் சுற்றும் மனிதர்கள், அவர்களின் பர்சுகளை நம்பி இயக்கப்படும் ஏ.சி பேருந்துகள் என வருடங்கள் அந்த சாலையை உரு தெரியாமல் மாற்றிவிட்டது. ஆம் சென்னையில் இருந்து பல்லவன் செய்து வடித்த சிற்ப கோவில்களை காண மஹாபலிபுரம் செல்ல மட்டும் பயன்படுத்தப்பட்ட சாலை தான் (அட நம்ம OMR ரோடு தாங்க ) இன்று இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரி இந்தியர்களின் வாழ்வாதாரம். அவர்களுக்கு மட்டுமா ? இரண்டு லட்சம் ஊழியர்களை நம்பி தொடங்கப்பட்ட தங்கும் விடுதிகள் ,  KFC, பிட்சா கடைகள்,  ஆந்திரா உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் , ஆட்டோக்கள்  என இந்த சாலையால் வாழ்கையை ஓட்டுவோர் பலர். CTS , TCS , இன்போசிஸ், விப்ரோ என இந்த சாலையில் இந்தியாவின் மிக  முக்கியமான அனைத்து ஐ.டி கம்பெனி...

வரலாற்றின் பக்கங்கள் - தடுப்புகள்

Image
ஏப்ரல் 15 , 1989 சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ளது தியனன்மென் சதுக்கம் என்ற இடம். அன்று எப்பொழுதும் இல்லாத அளவுக்கு திடீரென மக்கள் கூட ஆரம்பித்தார்கள். அவர்கள் சீனாவில் ஜனநாயகத்தை (பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம்....) வலியுறுத்தி அரசுக்கு எதிராக குரல்கள் எழுப்பினார்கள். போராட்டத்தை முதலில் அரசு அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் போராட்டம் நாட்களை கடந்து வார கணக்காக நீண்டது. 10 லட்சம் மக்கள் தியனன்மென் சதுக்கத்தில் குவிந்தார்கள். போராட்டம் காட்டு தீயை போல 500 நகரங்களுக்கு பரவியது. போரட்டகாரர் ஒருவவரை நோக்கி சீனா பீரங்கிகள் சீனா அரசு விழித்து கொண்டது. தியனன்மென் சதுக்கத்தை நோக்கி ராணுவம் தனது நவீன 59 ரக பீரங்கிகளுடன் முன்னேறியது. மக்கள் கண்மூடி தனமாக தாக்க பட்டார்கள். போராட்டம் ஒடுக்கப்பட்டது. இந்த ஆண்டோடு தியனன்மென் சதுக்க போராட்டம் முடிவுற்று 25 ஆண்டுகள் ஆகிறது. எங்கே மக்கள் மீண்டும் விழித்து கொள்வார்களோ என்று பயந்த சீனா அரசு செய்திருக்கும் செயல்கள் சீனா தனி மனித சுதந்திரத்திற்கு எத்தனை மதிப்பு தருகிறது என்பதை காட்டுகிறது. சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளில் சில ...

வரலாற்றின் பக்கங்கள் - யூஸ் & த்ரொ ( Use & Throw )

Image
இந்த பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்  வரலாற்றின் பக்கங்கள் - ஒரு கடிதம் ஜனவரி 10, 1615 ஆக்ராவில் அப்பொழுது குளிர் காலம் யமுனை நதி கரையில் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அவைகளுக்கு தெரியாது தாங்கள் ஆனந்தமாக இப்பொழுது சுற்றி கொண்டிருக்கும் இந்த இடத்தில் சில ஆண்டுகளில் உலக அதிசயம் ஒன்று கட்டப்படப்போகிறது என்று . ஆம் இந்த கதை நடக்கும் பொழுது ஷாஜகானின் தந்தை ஜஹாங்கீர் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தார். அவரை பார்க்க இங்கிலாந்து அரசர் ஜேம்ஸின் நன்றி கடிதத்துடன் பெரிய மீசை கொண்ட தூதர்  தாமஸ் ரோ வந்திருந்தார். அரசவையில் அரியணைக்கு கீழே பிரபுக்களும் அதிகாரிகளும் அரசரை நெருங்க கூட முடியாத அளவுக்கு நிரம்பி இருந்தனர். தாமஸ் ரோ அரியணையில் வீற்றிருந்த மகாராஜாவுக்கு பலமுறை வணக்கம் செலுத்தினார். உங்கள் மரியாதை ஏற்று கொள்ளப்பட்டது என்பது போல் அரசர் கை அசைத்தார். தாமஸ் ரோ (பெரிய மீசைக்காரர்) தாமஸ் தனக்கு அமர ஒரு நாற்காலி போடப்படும் என்று எண்ணினார். பின்புதான் அரசருக்கு முன் யாரும் அமர கூடாது என்பது அவருக்கு புரிந்தத...

வரலாற்றின் பக்கங்கள் - ஒரு கடிதம்

Image
அது ஒரு குளிர் காலம் இங்கிலாந்தின் அரசர் முதலாம் ஜேம்ஸ் தன் அரசவை கவிஞரின் வரவை எதிர்பார்த்து கோட்டையில் அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தார். அரசவை கவிஞருக்கு ஆங்கிலத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் அத்துப்படி. அத்தனை காலையில் அரசர் அழைப்பு என்றதும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் கிளம்பினார் கவிஞர். ஏதோ முக்கிய வேலை உனக்கு காத்திருக்கிறது என்றது அவரது மனம். அவசர அவசரமாக தனது குதிரை பொருத்திய வண்டியை கிளப்பினார். குதிரைக்கு அரசரையும் தெரியாமல் அவரசமும் புரியாமல் மெல்ல நகரவே சுளீர் ! என்று ஒரு அடிவைத்தார் அந்த நீல கோட் போட்ட ஆங்கில கவிஞர். அரசர் குறுக்கும் நெடுக்கும் நடத்து கொண்டிருந்தார். உலகின் பாதியை ஆளும் இங்கிலாந்தின் மாண்புமிகு அரசருக்கு எனது வணக்கங்கள் என்ற குரல் கேட்ட திசையை நோக்கினர் அரசர் . கண்டிப்பாக இவரால் இந்த பணியை சிறப்பாக செய்யமுடியும் என்றது அரசர் மனம். குரலை சரி செய்து கொண்டு அரசர் தொடர்ந்தார். வாருங்கள் கவிஞரே ! உங்களுக்கு ஒரு வேலை வைத்திருக்கிறேன். அதிமுக்கியமான வேலை. உங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து...

வரலாற்றின் பக்கங்கள் - பழைய புத்தக கடை

Image
பழைய புத்தக கடை , சென்னை மூர் மார்க்கெட் கல்லூரி முடிந்ததும் சுற்றுலா செல்வது போல அனைவரும் செல்லும் ஒரு இடம் பழைய புத்தக கடை. அப்பொழுது கல்லூரி தேர்வுகள் முடியவில்லை. எனவே அவ்வளவாக அந்த கடையில் கூட்டமில்லை.  கூட்டம் இல்லாததால் பொழுது போக்கிற்கு வானொலி கேட்டுகொண்டிருந்த கடைக்காரர் யாரோ தன் கடைக்கு வந்திருப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தார். இளம் வயதுடைய இளைஞன், கண்ணில் சோகம், பை நிறைய புத்தகம் என நின்றான்.எப்பொழுதுமே பொறியியல் புத்தங்களுக்கு அங்கே கடும் கிராக்கி. வந்திருப்பவன் பொறியியல் மாணவன் என்று தெரிந்ததும் கடைகாரனுக்கு ஏக குஷி. பையையில் உள்ள புத்தகங்களை பார்த்தார். புத்தகத்தின் முனைகள் கூட மடங்காமல் பத்திரமாக படித்திருந்தான் அந்த இளைஞன். வந்தவன் முகத்தில் இருக்கும் சோகத்தை கடைக்காரர் கவனித்தார். ஆனால் அவனிடம் பேச்சு கொடுக்கவில்லை. ஒருபுத்தகத்தை பிரித்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்தார் .அந்த புத்தகத்தில் எழுதி இருந்த வரிகள் " Awarded for excellence in academics in the first year of engineering at the Madras Institute of Technology by the Vic...

வரலாற்றின் பக்கங்கள் - ஆபரேஷன் பூமாலை

Image
இடம்: க்வாலியர் (Gwalior)   காலை சூரியனின் ஒளி இன்னும் முற்றாக பரவவில்லை. அரை தூக்கத்தில் இருந்த அஜித் பவ்னானியின் காதுக்கு தன் அறையின் கதவு வேகமாக தட்டப்படும் சத்தம் கேட்டது . அஜித் பவ்னானி இந்திய விமான படையின் மூத்த அதிகாரி. இத்தனை காலையில் அவரது அறை கதவு தட்டப்பட்ட பொழுதே ஏதோ முக்கிய செய்தி வந்திருக்கிறது என்று அவருக்கு தெரிந்து விட்டது . கதவை திறந்த பொழுது  மூச்சு வாங்கிபோய் நின்ற அவரது படை வீரன் தன்னை ஆசுவாச படுத்த கூட நேரம் தராமல் ஒரு காகிதத்தை நீட்டினான் அந்த காகிதம் இந்தியாவின் தலைநகரில் இருந்து வந்திருந்தது . " உடனே 5 விமானிகளுடன் மிராஜ் 2000 ரக விமானத்தில் பெங்களூரின் ஹால் (Hal) விமான நிலையத்திற்கு வரவும் " மிராஜ் 2000 பதிலேதும் பேசவில்லை அவர் . தன் படையின் 5 சிறந்த விமானிகளுடன் பெங்களூருக்கு பறந்தார் . நேரம் மத்தியத்தை நெருங்கிவிட்டது. அஜித் பவ்னானிக்கு குழப்பமாக இருந்தார் காரணம் தன்னை பெங்களூருக்கு அழைக்கபட்ட காரணம் இன்னும் சொல்லப்படவில்லை. An 32 ரக விமானம் அதேநேரம் இந்தியாவின் தாஜ்மஹால் நகரான ஆக்ராவில் இருந்து  ஐந்து ...