சம்பளத்தோடு ஆபரேஷன் - தஞ்சாவூர் நீங்கள் அறியாத தகவல்கள்

லட்ச லட்சமாக பணம்கொடுத்து வைத்தியம் பார்த்தவர்களை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள்.

வைத்தியமும் பார்த்துவிட்டு கையில் பணமும் கொடுத்த தஞ்சாவூர் கதை பற்றி கேள்விபட்டதுண்டா?

தஞ்சாவூர் நீங்கள் அறியாத தகவல்கள் 


தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் ஆவணங்களை ஆய்வு செய்த ஒரு நிபுணர் குழு ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்றது. 

காரணம், சரஸ்வதி மஹால் ஆவணங்களில்  நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே 44 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ததற்கான குறிப்புக்கள் உள்ளன. அவற்றில் 6  குறிப்புக்கள் மோடி ஸ்கிரிப்ட் (Modi  Scripts)  எனப்படும் மராத்தா மொழியிலும், 38 குறிப்புக்கள் ஆங்கிலத்திலும் உள்ளன. சிகிச்சை எடுத்து கொண்டவர்களின் வயது 5 முதல் 60. அந்த ஆவணங்களோடு 18 படங்களும் கிடைத்தன.

( சில படங்கள் உங்கள் பார்வைக்கு )

 


இந்த படங்கள் கண் நோயையும் அதற்கு சிகிச்சை அளிக்கும் முறையையும் தெளிவாக விளக்கியுள்ளன. "கார்னியா (Cornea), லென்ஸ் (lens), கண்ஜெக்டிவ் (Conjective) " போன்ற பல நவீன கால வார்த்தைகளும் இந்த குறிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது .

இந்தனை நேர்த்தியாக வைத்தியம் பார்த்த  மருத்துவர் ஒரு அரசர் என்பது தான் ஆச்சர்யமான தகவல்.

தஞ்சாவூரை சரபோஜி II என்ற மன்னர் 1789 முதல் 1832 வரை ஆட்சி செய்து வந்தார். அவர் சிறந்த அறிஞர் மற்றும் தத்துவவாதி. சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். அவரது குடும்பத்தார் இன்னும் தஞ்சாவூர் அரண்மனையில் வாழ்கின்றனர் . இதில் பல தகவல்கள் எல்லோருக்கும் தெரிந்ததே. 

சரபோஜி II 
ஆனால் பலருக்கு தெரியாத தகவல் சரபோஜி II மன்னர் ஒரு கண் அறுவை சிகிச்சை நிபுணர் என்பது. யுனானி(Unani), சித்த மருத்துவம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்ட சரபோஜி மன்னர் பல மருத்துவ புத்தகங்களை எழுதியுள்ளார் .

கண் அறுவை சிகிச்சையில் தனி ஆர்வம் காட்டிய மன்னர், அவரிடம் கண் சிகிச்சை பெற்றுக்கொண்டவர்களின் தகவல்கலையும்  சரஸ்வதி மஹால் நூலகத்தில் தனியாக பராமரித்தார். அவற்றில் இருந்து தான் 44 பேருக்கு  அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தகவல் கிடைத்தது.

அறுவை சிகிச்சையின் பொழுது வலிக்காமல் இருக்க பயன்படுத்தப்பட்ட Pills (வலி நிவாரணிகள்) போன்றவற்றையும் குறிப்பிட்டு அசத்தியுள்ள மன்னர் தன்னிடம் சிகிச்சை பெற்றுகொண்டவர்களுக்கு சிகிச்சை முடிந்ததும் கையில் பணமும் கொடுத்து அனுப்புவார் என்பது கூடுதல் தகவல்.

ஆதாரங்கள் :

Comments

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)