Posts

Showing posts with the label வெளியுறவு கொள்கை

மலேசிய பாமாயில் வாங்க தடை ! காஷ்மீர் கருத்துக்கு இந்தியா பதிலடி

பாமாயில் உற்பத்தியில் உலகளவில் முதலிடம் இந்தோனேசியா தான். ஆனால் நாம் மலேசியாவிடம் இருந்து தான் பாமாயில் இறக்குமதி செய்கிறோம். அதற்கு இந்திய அரசு வரிச்சலுகையும் தந்துவருகிறது. ஆனால் மலேசிய பிரதமர் சமீபகாலமாக இந்தியாவிற்கு எதிராக பேசி வருகிறார். இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது என்றார். CAA மூலம் முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதாக அறிக்கை விட்டு இந்திய அரசை கடுப்பேத்தினார்.. பொறுத்து பார்த்த இந்திய அரசு பதிலடி கொடுக்க முடிவு செய்தது. வியாபாரிகளை அழைத்து மலேசியாவில் இருந்து பாமாயில் வாங்குவதை நிறுத்திக்கொள்ள சொன்னது. அதற்கு பதிலாக இந்தோனேசியாவிடம் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.. இது மலேசிய அரசுக்கு பெரிய அடியாக இருக்கும். காரணம் பாமாயில் ஏற்றுமதி மலேசிய GDP யில் கிட்டத்தட்ட 3% பங்கு வகிக்கிறது..

பாதுகாப்பு + பொருளாதாரம் = வெளியுறவு கொள்கை

நம்மில் பலரும் foreign affairs என்று சொல்லப்படும் வெளியுறவு கொள்கை மற்றும் வெளிநாடுகளுடன் நல்லுறவை வளர்க்க இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் பொழுது போக்கிற்கு செய்யும் வெட்டி வேலை என்றே எண்ணுகிறார்கள். ஆனால் நமது நாட்டின் பாதுகாப்பை மட்டுமல்ல பொருளாதாரத்தையும் வளர்ப்பதில் வெளியுறவு கொள்கை மிக முக்கிய பங்காற்றுகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன்.. வெள்ளி போல தோற்றம் அளிக்கும் லித்தியம் (Lithium) உலோகத்தை பேட்டரி தயாரிப்பில் முதன்மை மூலப்பொருளாக பயன்படுத்துகின்றனர். நமது செல்போன் பேட்டரிகள் Lithium Ion என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.  பொலிவியா (Bolivia) என்ற வட அமெரிக்க நாட்டில் லித்தியம் எக்கச்சக்கமாக கிடைக்கிறது. இதே போல் பொலிவியாவை சுற்றி இருக்கும் அர்ஜென்டீனா (Argentina) மற்றும் சிலி நாட்டிலும் அள்ள அள்ள குறையாத லித்தியம் கிடைக்கிறது. இந்த மூன்று நாடுகளை Lithium Triangle Countries என்று செல்லமாக அழைப்பர். இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதியை குறைக்க (இந்தியா ஒவ்வொரு வருடமும் சுமார் 6 லட்...