வல்லவனுக்கு வல்லவன் - #1 (சபாஸ் சரியான ஜோடி)
வல்லவனுக்கு வல்லவன் தொடர் தமிழக மற்றும் இந்திய அரசியலில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பாகும். படித்து விட்டு உங்கள் மேலான கமென்ட்களை பதிவிடவும். சபாஸ் சரியான ஜோடி எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை மனிதரின் மாயாஜாலத்தில் தமிழகம் அரசியல் சுழன்ற காலகட்டம் அது. ஆனால் அவருக்கு எதிர் கட்சியாக விளங்கிய கருணாநிதி அரசியலில் யாருக்கும் சளைத்தவர் அல்ல. 1977 - அதிமுக சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக வெற்றியை பறித்து ஆட்சியை கைபற்றி இருந்தது. அப்பொழுது இந்திரா காந்தியும் எம்.ஜி.ஆரும் கூட்டணியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றார்கள். ஆனால் அதிமுக இந்திரா கூட்டணி சில மனகசப்பால் நீடிக்கவில்லை. 1979 ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் கலைஞர் உடன் கூட்டு சேர்ந்து பாராளமன்ற தேர்தலை சந்தித்தது. எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக திமுக இந்திரா கூட்டணி பாராளமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். பிரதமர் ஆனதும் இந்திரா செய்த முதல் வேலை எதிர் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் ஆட்சி களைப்பு. தமிழகத்தில் கருணாநி...