Posts

Showing posts with the label தேர்தல் 2016

மதுவிலக்கு என்னும் மாய அஸ்திரம் !

Image
மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும்  இந்த வாசகம் இடம்பெறாத கட்சிகளின் தேர்தல் அறிக்கையே 2016 தேர்தலில் இல்லை. தி.மு.க மற்றும் மக்கள் நல கூட்டணியினர் ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு என்றும், ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு என்றும் அறிவித்துள்ளனர். மதுவிலக்கு கொண்டு வருவதினால் ஏற்படும் உடனடி பிரச்சனைகளான வருவாய் இழப்பு, மதுஅடிமைகளின் உடல் நலன், மது பழக்கத்திலிருந்து மீட்டலுக்கான மருத்துவ வசதி, கள்ள சாராய பிரச்சனைகள், கடத்தல் மது விற்பனையை தடுப்பது என பல சிக்கல்களை அரசு சமாளிக்க வேண்டிவரும். எனவே ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு என்பது தேர்தல் அறிக்கைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் படிப்படியாக மதுவிலக்கு என்பதே நிஜத்தில் சாத்தியம். ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு கொண்டுவருவதற்கு நிதிஷ் குமாரை உதாரணம் காட்டுவோர் பீகார் ஜார்கண்ட் மாநில எல்லை பகுதியில்  சாராயக்கடை அமைக்க ஏலம் பல கோடி ரூபாய்க்கு நடைபெற்றதையும், புதுச்சேரி தேர்தலில்  மதுவிலக்கு பற்றி எந்த கட்சியும் (தி.மு.க, அ.தி.மு.க உட்பட) வாய்திறக்காததையும், பீகார் முத...

இதில் யார் பலவீனமானவர் ?

மாநிலம் முழுவதும் நமக்கு நாமேன்னு சுத்தியாச்சு ! 18 கோடி செலவு செஞ்சு எல்லா பத்திரிக்கையிலும் முதல் பக்கம் விளம்பரம் கொடுத்தாச்சு ! பழைய நண்பர் காங்கிரஸ் உடன் கூட்டணி மீண்டும் வச்சாச்சு ! இதில் தே.மு.தி.க வும் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே ஜெயலலிதாவை வீழ்த்தி  ஆட்சியை பிடிக்க முடியும் என்று விழிமேல் விழி வைத்து காத்திருந்து பல்பு வாங்கிய தி. மு. க ! கடந்த கால தவறுகள் மீண்டும் செய்யாமல் சொந்த பலத்தில் தனித்து தேர்தலில்  போட்டி - விஜயகாந்த், பா.ம.க , பா.ஜ.க  கட்சிகள் ! இதில் யார் பலவீனமானவர் ? 

ஸ்டிக்கர் மட்டும் தான் புதுசு நண்பர்களே !

Image
சினிமா பார்த்துவிட்டு நண்பர்களுடன் அரட்டை அடித்த படியே ECR - OMR இணைப்பு சாலையில் நடத்து சென்று கொண்டிருந்தோம். சாலையோரத்தில் ஜெயலலிதாவிற்கு புதன்கிழமை வரப்போகிற பிறந்தநாளுக்கு இன்றே வைக்கப்பட்ட பிறந்தநாள் ப்ளக்ஸ் பேனர்கள் பற்றி நண்பர் ஒருவர் கமெண்ட் அடிக்க மற்றொரு நண்பர் ஸ்டிக்கர் கலாச்சாரம் பற்றி குறிப்பிட அ.தி.மு.க அரசின் ஸ்டிக்கர் அரசியலை கலாயித்து தீர்த்தது நண்பர் பட்டாளம். இடம் :  Dr.  கலைஞர் கருணாநிதி சாலை, சோழிங்கநல்லூர்.  படிக்க தலைப்பு ! 

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி

Image
தி.மு.க காங்கிரஸ் கூட்டணி என்பது எதிர்பார்த்த கூட்டணி தான். சரி, பழைய தி.மு.க காங்கிரஸ் கூட்டணி யை சற்று திரும்பிபார்போம் ! 19 மார்ச் 2013, இலங்கை தமிழர் பிரச்சனையை காரணம் காட்டி தி. மு. க UPA 2 கூட்டணி மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது. ஜூன் 2013, கனிமொழியை மீண்டும் ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் கதவை தட்டியது தி. மு. க. அதுவும் கூட்டணி முறிந்த இரண்டரை மாதத்தில். காங்கிரஸ் போட்ட நிபந்தனை நீங்கள் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் நாங்கள் கனிமொழிக்கு ஆதரவு தருகிறோம் என்பது. குடும்பமே கழகம் என்பதால் கழக நன்மை கருதி குடும்ப உறுப்பினர் கனிமொழிக்கு ராஜ்ய சபை எம்.பி பதவி வாங்கித்தந்தார் கலைஞர் . ஆகஸ்ட் மாதம் 2013, ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவும் அளித்தார். ஆதாரம்: http://www.ndtv.com/south/congress-to-support-kanimozhi-for-a-second-term-in-rajya-sabha-526497 மார்ச் மாதம் கூட்டணி பிளவு ! ஜூன் மாதம்...

கோஷம் ஆரம்பம் !

கடந்த ஆண்டு பீகார் மாநில தேர்தலுக்கு முன்னால் மிகச்சரியாக எழுப்பப்பட்ட நாட்டில் சகிப்புதன்மை குறைந்து விட்டது என்ற மீடியாக்களின் கோஷம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல எழுத்தாளார்கள் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி வழங்கி சகிப்புத்தன்மையின்மை கோஷத்துக்கு உரமூட்டினர். பீகார் தேர்தலுக்கு பிறகு இந்தியா மீண்டும் தான் இழந்த சகிப்பு தன்மையை மீட்டுவிட்டதாக மீடியாக்கள் முடிவு செய்துவிட்டனர் போலும், அதன் பின் எந்த மீடியாவும் அதைப்பற்றி பேசவில்லை, எழுத்தாளர்களின் விருதுகளும் பத்திரமாக அவரவர் வீடுகளில் உறங்குகின்றன. இந்த ஆண்டு அஸ்ஸாம், தமிழகம், கேரளா என பல மாநிலங்கள் தேர்தலை சந்திக்கின்றன. அஸ்ஸாம் தேர்தலுக்கு பிரச்சாரமும் தொடங்கிவிட்ட நிலையில் இப்பொழுது ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் தற்கொலைக்கு தலித் சாயம் பூசி அடுத்த பிரச்சனையை எதிர்கட்சிகளும் மீடியாக்களும் தொடங்கிவிட்டன. நன்றாக கவனித்து பாருங்கள், எல்லா செய்தி ஊடகமும் இறந்த மாணவரை தலித் அடையாளமாக மாற்ற மிகவும் முனைந்துள்ளதும், ஹைதராபாத் பல்கலைகழகம் அமைந்துள்ள தெலுங்கானா மாநில அரசை பற்றி கண்டுக...