Posts

Showing posts with the label தண்ணீர் பஞ்சம்

உலக தண்ணீர் தினம் : திருவாரூர் கமலாலய குளம்

Image
தண்ணீர் தினம் என்றவுடன் எனக்கு முதலில் ஞாபகம் வந்தது திருவாரூர் கமலாலயம் தான் ! திருவாரூர் கோவிலின் கமலாலயம் குளம் 350 மீட்டர் நீளம் 250 மீட்டர் அகலம் உடையது. காவேரி ஆற்றில் வரும் நீர் தானாக குளத்தில் நிரம்பும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் கமலால குளத்தின் நீர் தான் திருவாரூரில் நிலத்தடி நீர் ஓரளவுக்கு இருப்பதற்கு காரணம். ஆனால் திருவாரூர்காரர்கள் (என்னையும் சேர்த்து) கமலாலய குளத்தை பார்த்துக்கொள்ளும் லட்சணம் வெட்கக்கேடானது. குளத்தை சுற்றி இருக்கும் எல்லா மருத்துவமனைகளின் குப்பைகளும் கொட்டுமிடம் கமலாலயம் தான். சொத்துவரியை ஒழுங்காக வசூலிக்க வழியில்லாத நகராட்சி தான் ஏதோ கோடிரூபாய் வருமானம் வரும் என்று கமலாலய குளத்து நீரை மீன் வளர்ப்பிற்கு குத்தகைக்கு விட்டுருக்கிறார்கள். அவர்கள் மீனுக்கு உணவாக இறைச்சிக்கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகிறார்கள். பலகாலம் குளத்தின் நீர் சுத்தமாகத்தான் இருந்தது. நான் பள்ளி செல்லும் காலத்தில் கூட பலரும் கமலாலயத்தில் தினமும் குளிக்கும் பழக்கமுடியவர்களாக இருந்தார்கள். இன்று அதே கமலாலயம் அருகில் செல்ல முடியாத அளவுக்கு பச்சை நிறத்தில் ஏதோ கெமிக்கல் குப்ப...

தீபாவளி கசக்கிறது !

Image
இன்று தீபாவளி என்று சன் டிவி சிறப்பு நிகழ்ச்சி பார்த்தால்தான் தெரியும் போல !  ஊரு அவளோ அமைதியா இருக்கு ! விவசாயம் பொய்தது, மழையை காணும், பேண்ட் சட்டை எடுக்க குறைந்தது 1500 ரூபாய் வேண்டும், வெடி, இனிப்புகளின் விலை 200 ஐ கடந்து விட்டது.. எவர் வீட்டு போர் குழாயிலும் தண்ணீர் இல்லை... அரசாங்கம் 5000 செலவில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்ட சொன்னபொழுது 4 செங்களை நட்டு வைத்து அரசாங்கத்தை ஏமாற்றிய நாம் இன்று 40000 முதல் 100000 வரை செலவு செய்து போர் குழாய் ஆழத்தை அதிகப்படுத்துகிறோம்.. வறட்சி அதன் கோரா முகத்தை காட்ட தொடங்கி விட்டது.. இதுதான் திருவாரூரின் இன்றைய நிலை... குடிநீர் லாரிகளை இதுவரை பார்க்காத திருவாரூர் மக்கள் வெகு விரைவில் குடிநீர் லாரிக்கு பின்னால் ஓடப்போகிறார்கள்.. விழித்துக்கொண்டோர் பிழைத்து கொண்டார்.. திருவாரூர் மக்களே நாம் எப்போது விழிக்கப் போகிறோம்.. ? செலவோடு செலவாக மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டுவீர் ! வரும் டிசம்பர் மாத மழை உங்களை போர் குழாய் ஆழப் படுத்தும் செலவில் இருந்து காக்கட்டும்... பெற்றோரிடம் எதை எதையோ அடம் பிடித்து வாங்கும் நாம் மழை நீர் சேம...

காணவில்லை !

Image
போலீஸ் வாகனங்கள் விடிய விடிய  சைரன் ஒலித்தபடி ரோந்து செல்கின்றன. ஊர்க்காவல் படை வீரர்கள் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேவைபட்டால் மேலும் போலீஸ் படை குவிக்கப்படும் என அரசு சொல்கிறது. வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து செல்லக் கூடாது என கூடுதல் உத்தரவு வேறு. இது ஏதோ தேர்தல் நடக்கும் மாநிலத்தின் பதட்டமான வாக்குசாவடி பற்றிய செய்தி அல்ல. மகாராஷ்டிரா மாநிலத்தின் லதூர் மாவட்டத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அங்குள்ள எரி, கிணறுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது பற்றிய செய்தி. அதே மாநிலத்தின் மற்றுமொரு மூலையில் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படும் கிரிக்கெட் ஆடுகளங்கள். கிரிக்கெட்டை வேறு மாநிலத்துக்கு மாற்ற சொன்னால் நாங்கள் வேண்டுமானால் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தி கொள்கிறோம் ஆனால் பணம் கொழிக்கும் IPL போட்டியை மாற்றும் எண்ணமில்லை என்று அலட்சியமாக சொல்லும் பிசிசிஐ. பாருங்கள் பிசிசிஐ கழிவு நீரைதானே ...