ஜெயலலிதா பாணி (பாகம் 2)

அரசாங்கம் உழியர் போராட்டதுக்கு முடிவு கட்ட தயாரானது.

போராட்டம் தொடங்கப்பட்ட ஜூலை 1 அன்றே பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சத்தமில்லாமல் அரசு செயலில் இறங்கியது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்யப்பட்டவர்கள் ஒப்பந்த தொழிலார்களாக பணியில் அமர்த்தப்பட்டனர்.

எஸ்மா சட்டம் அவசர சட்டமாக அமல் செய்யப்பட்டது. பல அரசு அலுவலகங்கள் அத்தியாவசிய பணிகளுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டன.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீண்டும் பணிக்கு திரும்பாத 1.7 லச்சம் ஊழியர்கள் நிபந்தனையின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது போரட்டகாரர்கள் சற்றும் எதிர்பாராத திருப்பம்.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் ஆயிரக்கணக்கில் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர். பணிக்கு திரும்பிய பலரும் மீண்டும் பணியில் சேர்ந்துக்கொள்ளப்படவில்லை.

tamilnadu bus strike 2003

எஸ்மா சட்டத்தை  எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி சிறையில் இருக்கும் அனைத்து ஊழியர்களையும் விடுவிக்க உத்தரவிட்டார்.

உயர்நீதி மன்ற தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. கைதுகள் தொடர்ந்தன.

தொழிற்சங்கங்கள் விழி பிதுங்கின. அவர்கள் போராட்டத்தை நிறுத்தினாலும் பணி கிடைக்குமா என்ற கேள்வி எழும் அளவுக்கு நிலைமை சென்றது. தொழிற்சங்கங்கள் மற்றும் தி.மு.க இரண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகின.

உச்ச நீதிமன்றமே அவர்களின் கடைசி நம்பிக்கையாகவும் இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் யாரும் எதிர்பாரத தீர்ப்பை வழங்கி அதிர்ச்சி தந்தது.

(தொடரும்)

உச்ச நீதிமன்ற தீர்ப்பு (பாகம் 3)

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)