உச்ச நீதிமன்ற தீர்ப்பு (பாகம் 3)

தொழிற்சங்கங்கள் மற்றும் தி. மு. க சார்பில் தமிழக அரசின் பணி நீக்க நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டன. தமிழக அரசு விடுவதாக இல்லை.

கே.கே.வேணுகோபால் மற்றும் பி.பி.ராவ் என்ற தலைசிறந்த வழக்கறிஞர்கள் தமிழக அரசு சார்பாக வாதாடினார். இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் பரபரப்பான தீர்ப்பைவழங்கினர்.

supreme court of india judgement on tamilnadu strike 2003

"Employees thinking strike is their birth right, No political party or organisation can claim a right to paralyze the economic and industrial activities of a state or nation or inconvenience citizens even the trade unions, who have a guaranteed right for collective bargaining, have no right to go on strike. Government employees could not complain that they could hold society to ransom by going on strike to ventilate their grievances"

தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் என்ற பெயரில் மாநில அரசையே ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது தங்கள் பிறப்புரிமை என்று கருதக்கூடாது. அவர்களுக்கு போராட்டம் செய்ய உரிமை இல்லை . தமிழக  அரசு எடுத்த நடவடிக்கைகள் சரியே  இருந்தாலும் கருணை அடிப்படையில்  நிரந்தரமாக பணி  நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை தற்காலிக  பணி நீக்கத்தில் வைக்கும் படியும் வன்முறையில் ஈடுபடாமல் போராட்டத்தில் மட்டும் கலந்து கொண்ட ஊழியர்களை பணியில் திரும்ப சேர்த்துகொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தமிழக அரசு 2,200 பேரை (FIR பதிவு செய்யப்பட்டவர்கள்) தவிர மற்றவரை பணியில் சேர்த்துக்கொள்ள ஒத்துகொண்டது. பணிக்கு திரும்பியவர்களையும் இனி ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என்று எழுதி தந்தபிறகே பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இந்த போராட்டம் தொழிற்சங்கங்களுக்கு பேரடியாக விழுந்தது. இனி ஒரு வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதுற்கு முன் யோசிக்கும் அளவுக்கு தொழிற்சங்கங்கள் பல சங்கங்களாக சிதறுண்டன .

இந்த நிகழ்வை பற்றி எழுத உதவிய தரவுகள்

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)