குட்டி தகவல்: "பிங்க் சிட்டி" ஜெய்ப்பூர் - பெயர் வந்த கதை

ஜெய்ப்பூருக்கு  பிங்க் சிட்டி என பெயர் வந்த கதை தெரியுமா உங்களுக்கு ?

அதற்கு நாம் 139 வருடங்கள் பின்னே செல்லவேண்டும்.

ஆண்டு 1876,

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியா நாட்டில், வெள்ளையரோடு நட்பு பாராட்டிய சில இந்திய அரசர்களும் ஓரமாக ஆட்சி செய்து கொண்டுதான் இருந்தனர். இந்த நிலை 1947 வரை தொடர்ந்தது.

ஜெய்ப்பூர் மஹாராஜா ராம்சிங் பிரிட்டிஷ் அரசோடு நட்பு பாராட்டி வந்தார். 1876 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் மற்றும் விக்டோரியா மஹாராணி ஜெய்ப்பூருக்கு வருகை தந்தனர்.

அவர்களின் மனம் கவர்ந்து பிரிட்டிஷ் உடனான தனது நட்பை விரிவு படுத்த வேண்டும் என்று யோசித்த மகாராஜாவிற்கு கன நேரத்தில் தோன்றியது தான் பிங்க் சிட்டி ஐடியா.

பார்த்தார் மனிதர்  ஜெய்ப்பூர் நகர் முழுவதையும் பிங்க் நிறத்தால் வண்ணம் பூச உத்தரவிட்டார்.

காரணம், பிங்க் நிறம் விருந்தோம்பலை மற்றும் வரவேற்பை குறிக்கும் நிறமாகும்.

மக்கள் முழுமனதோடு இந்த உத்தரவை செய்தார்கள் என்று சொல்வதற்கில்லை.ராஜா உத்தரவு என்பதால் ஊர் முழுவதும்  பிங்க் நிறமாக வண்ணம் பூசப்பட்டது. அவளாவே  (அரசாங்கம் மழை நீர் சேமிப்பு தொட்டி சொந்த காசுல கட்டுன்னு சொன்னப்ப  நம்ம முழுமனசோடைய கட்னோம் ? )

jaipur pink city
ஜெய்ப்பூர் அரண்மனை 

அட, பிங்க் நிறம்  கூட நல்லாதானா இருக்கு என்று யோசித்த ஜெய்ப்பூர் மகாராணி தனது கணவரிடம் பேசி ஜெய்ப்பூரில் கட்டப்படும் வீடுகள் பிங்க் நிறத்தில் மட்டுமே வண்ணம் பூசவேண்டும் என்று 1877 ஆம் ஆண்டு சட்டம் இயற்றினார். அந்த சட்டம் இன்றுவரை அமலில் உள்ளது என்பது ஆச்சரியமான உண்மை.

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)