சென்னை MTCக்கு ஆண்கள் சார்பாக ஒரு கோரிக்கை

சென்னைக்கு வந்த பொழுது எனக்கு இரண்டு விஷயங்கள் ஆச்சர்யத்தை கொடுத்தது.

முதலாவது பேருந்தில் இடது புறம் இருக்கை முழுவதும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது,

இரண்டாவது பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்  அமரும் ஆண்களை "எழுந்திரிங்க இது லேடீஸ் சீட்" என்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை விட்டுக்கொடுக்காமல் கேட்டுப்பெறுவது (நம்ம ஊர்ல பொண்ணுங்க தைரியமா இது லேடீஸ் சீட் எழுந்திரிங்க என்று குரல் கொடுத்து நான் பார்த்தது இல்லை).

ட்ரைனிங் பீரியட் பொழுது ஆபீஸ் நடந்து போகும் தொலைவில் இருந்ததால் பேருந்தில் பயணம் என்பது ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான். சமீப மாதங்களில் பேருந்தில் ஆபீஸ் சொல்லவேண்டிய  சூழல்.ஆபீஸுக்கு பேருந்தில்  பயணிக்கும் பொழுது மற்றுமொரு ஆச்சர்யமான நிகழ்வு நடந்தது.

இடது பக்கம் பெண்கள் இருக்கை பலவும் காலியாக இருக்க பெண்கள் வலது பக்கம் உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்து  இருந்தார்கள். ஆண்கள் பலர் நின்று கொண்டே பயணம் செய்தார்கள். அடுத்த அடுத்த பேருந்து நிறுத்தங்களில் காலியாக இருந்த பெண்கள் இருக்கைகளும் நிரம்பிவிட்டன. கடைசி வரை ஆண்கள் நின்றுகொண்டே பயணித்தார்கள்.

இதை பலநாள் கவனித்த எனக்கு காரணம் மட்டும் விளங்கவில்லை.

கடைசியில் காரணம் தெரிந்த பொழுது அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை.

OMR சாலையில் நான் பயணிக்கும் பேருந்து காலையில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும். அந்த நேரம் சூரிய ஒளி பேருந்துக்குள் இடது புறமாக நுழையும், எனவே  இடது புற சீட்டில் உட்கார்ந்தால் சூரிய ஒளி மேலே பட்டு வேர்க்க துடங்கிவிடும் . எனவே காலையில் இடது புறம் உட்கார்வதை சில பெண்கள் தவிர்கின்றனர்.

அவர்களை சொல்லியும் குற்றமில்லை, வேர்த்தால் பலமணி நேர உழைப்பு வீண் இல்லையா ?

எப்படியோ உக்காந்துட்டு  போற பொண்ணுங்கள விடுங்க, நின்னுகிட்டே பயணம் பண்ற நம்ம பசங்க கோரிக்கை என்னன்னா வெயில் அடிக்குற திசைய பொருத்து லேடீஸ் சீட்டையும் வலதுபக்கம் இடது பக்கம்ன்னு மாத்துநீங்கன்னா பசங்க வெயில் அடிச்சாலும் அட்லீஸ்ட் உக்காந்துநாச்சும் ஆபீஸ் போவாங்க.

korikai vicky digitalnative

தயவு செஞ்சு இத அமல்படுத்துங்க லேடிசம் லேடீஸ் சீட்ல முதல்ல உட்காருவாங்க நம்ம பசங்களுக்கும் நாலு சீட் கிடைக்கும்.

chennai mtc ladies seat



அடுத்த தடவ 16 அம்ச கோரிக்கையோட போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் நடத்துரப்ப 17வது கோரிக்கையா இதையும் சேருங்கன்னு நம்ம கன்டக்டர் டிரைவர் அண்ணன் கிட்டையும் தனிய ஒரு கோரிக்கை வைக்குறோம்.

- விக்கி 

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்