யார் குற்றவாளி ?

புரட்சி ! புரட்சி ! புரட்சி !

தூங்கிக்கொண்டு மட்டுமே இருக்கும் அரசு துறைகளுக்கு மத்தியில், முதல் துறையாக தமிழக கல்வி துறை விழித்து எழுந்து கொண்டுள்ளது..!

ஆம் ! 1978 ஆம் ஆண்டு முதல் எழுத்து தேர்வாக இருந்துவந்த +1 வகுப்பின் தட்டச்சு (Typewriting) முதல் தாள் தேர்வு 2015 ஆம் கல்வி ஆண்டு முதல் செய்முறை தேர்வாக மாற்றப்படுமென அறிவித்துள்ளது. அதவாது தட்டச்சுக்கு எதுக்கு எழுத்து தேர்வு என்று யோசித்து முடிவெடுக்க 36 ஆண்டுகள் கடந்து விட்டன.

Source: http://crsttp1.blogspot.in/2014/12/2_19.html

இந்த செய்தி ஒன்றே போதும் நமது கல்வித்துறையின் இலட்சணத்தை சொல்வதற்கு. தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டும், போனஸ் வேண்டும், மத்திய அரசு ஆசிரியருக்கு நிகரான ஊதியம் தரவேண்டும், எந்த தேர்வும் இல்லாமல் நேரடியாக வேலை தரவேண்டும் இன்னும் எத்தனையோ வேண்டும் என கூவும் எந்த ஆசிரியராவது 15 வருடங்களாக பக்கம் எண் கூட மாறாமல் பாழடைந்து கிடக்கும் +1, +2 வகுப்பு பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும் என்று போராடியதுண்டா ?

tamilnadu strike


சம்பள உயர்வு கேட்டு தெருவில் இறங்குமுன் உங்கள் மனசாட்சியை கேளுங்கள் 20,000, 30000 என சம்பளம் பெரும் நாம் வெறும் 4000 ரூபாய் சம்பளத்தில் தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியரின் உழைப்பில் 10 % உழைத்தது உண்டா என்று.

தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசு மட்டும் காரணமல்ல, பெற்றோர் உங்கள்மீது இருந்த மரியாதை மற்றும் நம்பிக்கையை இழந்ததும் தான் காரணம்.

கல்வி துறை தனியார் மயத்தில் யார் குற்றவாளி என்பதற்கு பதிலை உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்.

(சமுதாயத்தை கட்டமைக்கும் ஆசிரியர் தொழிலை தெய்வமாக மதித்து பணி செய்யும் நல்ல ஆசிரியர்களிடம் இப்படி எழுதியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் )

Comments

  1. Really Good & effective but it wont affect even 1% the educational dept / teachers

    that's the fate

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)