இராணுவ கொள்முதலில் வரவேற்கப்படவேண்டிய மாற்றம்
இந்தியாவிற்கு இராணுவ ரீதியில் அதிக உதவி செய்த நாடு ரஷ்யா தான். எனவே நாம் அமெரிக்கா பக்கம் அதிகம் போகக்கூடாது என்ற கருத்து பலர் மத்தியில் உள்ளது, ஆனால் ரஷ்யா செய்யும் ஆயுத உதவிகளில் இருக்கும் பின்னணி தந்திரத்தை நாம் கவனிக்க வேண்டும். IT நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் development (ஒரு பொருளை உருவாக்கி விற்பனை செய்யவது ) முறையில் வரும் லாபத்தை விட support (ஏற்கனவே விற்றபொருளுக்கு service பார்த்துத்தருவது) முறையில் தான் கொள்ளை லாபம் என்று. ரஷ்யா தான் விற்கும் விமானங்களுக்கு தொழில்நுட்ப உதவியை (Technology Transfer) என்றுமே வழங்குவதில்லை. உதாரணமாக இந்திய அரசு ரஷ்யா தயாரிப்பான சுகாய் விமானங்களில் 55000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஆனால் சின்ன சின்ன தொழில் நுட்ப கோளாறுக்கும் நாம் ரஷ்யாவின் உதவியையே நாடவேண்டும். அதற்கு அவர்கள் கேட்கும் சேவை கட்டணமும் மிக அதிகம். இந்திய விமான படையில் சுகாய் விமானங்கள் மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் தற்போதைய இராணுவ அமைச்சர் திரு மனோகர் பாரிக்கர் மேலே குறிப்பிட்ட நிலைப்பாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டுவர முயல...