திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்
திருவாரூரில் தங்க கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர் தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன என்பது உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் : திருவாரூர் தங்க கோவில் : திருப்பதி கோவில் தங்கத்தால் செய்யப்பட்ட கோபுரத்திற்கு பெயர் போனது. திருப்பதியை போன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறை கோபுரமும் தங்கத்தால் செய்யப்பட்டது. ஆச்சர்யமாக உள்ளதா ? தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனுக்கு திருவாரூரில் பிறந்த பரவை என்ற நாட்டிய பெண்ணின் மேல் காதல். அவளுக்கு திருவாரூர் கோவில் என்றால் அத்தனை பிரியம். அவள் வேண்டுகோளுக்காக ராஜேந்திரன் திருவாரூர் கோவில் விமானம் மற்றும் கருவறை சுவர்களை தங்கத்தால் வேய்ந்தான். தங்கமா ? திருவாரூர் கோவில்லையா ? யார்கிட்ட விட்ரிங்க ரீல் என்று கூறுவோருக்கு ராஜேந்திரன் செய்த கல்வெட்டு வரிகள் " உடையார் வீதிவிடங்கதேவர் குடத்திலும் வாய் மாடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும் பொன்வேய்தான் " தங்கம் காலபோக்கில் பலரால் அழிக்கப்பட்டுள்ளது. இன்று மிஞ்சம் இருப்பது கற்க...