Posts

Showing posts from July, 2019

BS IV தரத்தில் இருந்து BS VI க்கு மாறுவதால் பெட்ரோல் டீசல் விலை உயருமா ??

BS VI பெட்ரோல் மற்றும் டீசலின் விலை BS IV தர பெட்ரோலை விட விலை அதிகம் ?? வாகனங்கள் உமிழும் புகையை கட்டுப்படுத்த அரசு BS எனப்படும் தரநிலையை பின்பற்றி வருகிறது.. 2000 ஆம் ஆண்டு BS I எனப்படும் Bharat Emission Stage 1 அமலுக்கு வந்தது.. BS II 2005 ஆம் ஆண்டும், BS III 2010 ஆம் ஆண்டும், BS IV 2017 ஆம் ஆண்டும் நாடுமுழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது.. இப்பொழுது நடைமுறையில் இருப்பது BS IV தான்.. அடுத்ததாக BS V க்கு பதிலாக நேரடியாக BS VI புகை வெளியீடு தரத்துக்கு மாற விருப்பதாக இந்திய அரசு 2016 ஆம் ஆண்டு அறிவித்தது.. இதன்படி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார் மற்றும் பைக்குகள் BS VI புகை உமிழ்வு தரத்துக்கு மாறவேண்டும்... BS IV தர வாகனங்களை விற்பனை செய்யமுடியாது.. எனவே கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் BS VI தரத்திலான வாகனங்கள் தயாரிக்க பல கோடி முதலீட்டில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. அதே போல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்றவையும் தங்கள் சுத்திகரிப்பு முறையில் சில மாற்றங்களை செய்த

RA&W உளவுத்துறையின் செயல்பாடுகளை முடக்கிய ஹமீத் அன்சாரி

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் துணை குடியரசு தலைவருமான ஹமீத் அன்சாரி 1990 முதல் 1993 வரையிலான காலகட்டத்தில் ஈரானின் இந்திய தூதராக (Indian Ambassador for Iran) இருந்தார். அவர் தூதராக இருந்த காலகட்டத்தில் எப்படி இந்தியாவின் உளவு அமைப்பான RA&W வின் செயல்பாடுகளை முடக்கினார், ஈரானில் களப்பணியாற்றிவந்த RA&W வின் உளவாளிகளை ஈரானுக்கு காட்டிக்கொடுத்தார், RA&W வின் உளவாளிகள் ஈரான் அரசின் உளவுத்துறை கடத்தி சென்று கொடுமை செய்ய உதவியாக இருந்தார் மற்றும் கடத்தப்பட்ட அதிகாரிகளை மீட்க நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என பெரிய தேச துரோக குற்றப்பட்டியலை பிரதமர் மோடியிடம் முன்னாள் RA&W அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.. 1990களுக்கு பிறகு தான் காஷ்மீர் பிரிவினைவாதிகள் வளர்ச்சி உச்சத்தை தொட்டது. 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து காஷ்மீர் ஜிகாதிகளும் இந்திய ராணுவத்துடன் சண்டையிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படி பிரிவினை வாதிகளுக்கு ஊக்கமும் நிதி வசதியும் செய்துகொடுத்த நாடுகளில் ஈரானும் ஒன்று. இதை 1990 களின் ஆரம்பத்திலேயே அறிந்த இந்திய அரசு, ஈரானில் இந்

பட்ஜெட் 2019 - என் புரிதல் (சரியாக செல்லாதவை)

வறுமையை ஒழிக்கவேண்டும், வளர்ச்சியை பெருக்கவேண்டும். அதற்கு திட்டங்கள் வேண்டும். திட்டங்களுக்கு செலவு செய்ய பணம் வேண்டும்.  பணத்திற்கு என்ன செய்யலாம் ??  இது வரை இருந்த எல்லா நிதியமைச்சரும் எதிர்கொண்ட பிரச்சனை இது தான்..  பணத்தை திரட்ட அரசு கடன் வாங்கலாம், பெட்ரோல் டீசல் வரியை உயர்த்தலாம், GST வரியை உயர்த்தலாம், பணக்காரனுக்கு அதிக வரி விதிக்கலாம், மத்திய அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி திரட்டலாம். இறக்குமதிக்கு வரியை உயர்த்தலாம். இவைதான் தான் காலம் காலமாக எல்லா நிதியமைச்சரும் நிதி திரட்ட செய்துவரும் நடவடிக்கைகள்.. இதே பாணியை அச்சு பிசுங்காமல் காப்பி அடித்துள்ளார் நிர்மலா சீதாராமன் அவர்கள். இதில் இருந்து நமக்கு தெரிவது அவரிடமும், அவரின் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளிடமும் Out of Box ஐடியாக்கள் எதுவும் இல்லை என்பதே..... ஒரு உதாரணம் சொல்கிறேன் : "5% customs duty on imported books, to promote the domestic publishing and printing industry" - பட்ஜெட் 2019 இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5% வரி உயர்வு அறிவித்த நிர்மலா சீதாராமன், இந்த வரி உயர்வின் மூலம் இந்