RA&W உளவுத்துறையின் செயல்பாடுகளை முடக்கிய ஹமீத் அன்சாரி

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் துணை குடியரசு தலைவருமான ஹமீத் அன்சாரி 1990 முதல் 1993 வரையிலான காலகட்டத்தில் ஈரானின் இந்திய தூதராக (Indian Ambassador for Iran) இருந்தார்.

அவர் தூதராக இருந்த காலகட்டத்தில் எப்படி இந்தியாவின் உளவு அமைப்பான RA&W வின் செயல்பாடுகளை முடக்கினார், ஈரானில் களப்பணியாற்றிவந்த RA&W வின் உளவாளிகளை ஈரானுக்கு காட்டிக்கொடுத்தார், RA&W வின் உளவாளிகள் ஈரான் அரசின் உளவுத்துறை கடத்தி சென்று கொடுமை செய்ய உதவியாக இருந்தார் மற்றும் கடத்தப்பட்ட அதிகாரிகளை மீட்க நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என பெரிய தேச துரோக குற்றப்பட்டியலை பிரதமர் மோடியிடம் முன்னாள் RA&W அதிகாரிகள் வழங்கியுள்ளனர்..

1990களுக்கு பிறகு தான் காஷ்மீர் பிரிவினைவாதிகள் வளர்ச்சி உச்சத்தை தொட்டது. 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து காஷ்மீர் ஜிகாதிகளும் இந்திய ராணுவத்துடன் சண்டையிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படி பிரிவினை வாதிகளுக்கு ஊக்கமும் நிதி வசதியும் செய்துகொடுத்த நாடுகளில் ஈரானும் ஒன்று.
இதை 1990 களின் ஆரம்பத்திலேயே அறிந்த இந்திய அரசு, ஈரானில் இந்தியாவிற்கு எதிராக நடக்கும் செயல்பாடுகளை முடக்க RA&W வை களத்தில் இறக்கியிருந்தது. தங்கள் அடையாளங்களை மறைந்து களத்தில் தகவல் சேகரித்து வந்த RA&W அதிகாரிகளை அப்போதைய ஈரானின் இந்திய தூதராக இருந்த ஹமீத் அன்சாரி ஈரான் உளவுத்துறைக்கு காட்டிக்கொடுத்துள்ளார்.
இதனால் களத்தில் பணியாற்றி வந்த RA&W அதிகாரிகள் ஒவ்வொருவராக ஈரான் அரசால் கடத்தப்பட்டு போதைமருந்து உட்செலுத்தி சித்ரவதை செய்யப்பட்டு பின்னர் பல ஆண்டுகள் செயல்படமுடியாத நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவரின் செயல்பாடுகளால் RA&W அமைப்பின் பல செயல்திட்டங்கள் முடங்கிப்போயின. பல அதிகாரிகள் களத்தை விட்டு வெளியேறினர்.

1993 ஆம் ஆண்டு ஹமீத் அன்சாரி ஈரானில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றப்பட்ட பொழுது ஈரானின் இந்திய தூதரகத்தில் பெரிய கொண்டாட்டமே நடந்தது என்கிறார்கள் முன்னாள் அதிகாரிகள்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் மதமாற்றத்தை எதிர்த்து பேசியதற்காக ராமலிங்கம் என்பவரை படுகொலை செய்த PFI (Popular Front of India) என்கிற இஸ்லாமிய பிரிவினைவாத அமைப்பின் மாநாட்டில் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டார் ஹமீத் அன்சாரி என்பதும் குறிப்பிட்டதக்கது.

இப்படிபட்ட மனிதருக்கு தான் நாம் துணை ஜனாதிபதி பதவி கொடுத்து அழகு பார்த்தோம். மக்கள் இவர்களை போன்றவர்களின் செயல்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டும்...

மேற்கோள்கள் :

https://www.sundayguardianlive.com/news/ex-raw-officers-want-pm-act-hamid-ansaris-anti-national-acts

https://swarajyamag.com/politics/hamid-ansari-and-pfi-the-iran-connection

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்