பட்ஜெட் 2019 - என் புரிதல் (சரியாக செல்லாதவை)

வறுமையை ஒழிக்கவேண்டும், வளர்ச்சியை பெருக்கவேண்டும். அதற்கு திட்டங்கள் வேண்டும். திட்டங்களுக்கு செலவு செய்ய பணம் வேண்டும். பணத்திற்கு என்ன செய்யலாம் ?? 

இது வரை இருந்த எல்லா நிதியமைச்சரும் எதிர்கொண்ட பிரச்சனை இது தான்.. 

பணத்தை திரட்ட அரசு கடன் வாங்கலாம், பெட்ரோல் டீசல் வரியை உயர்த்தலாம், GST வரியை உயர்த்தலாம், பணக்காரனுக்கு அதிக வரி விதிக்கலாம், மத்திய அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி திரட்டலாம். இறக்குமதிக்கு வரியை உயர்த்தலாம். இவைதான் தான் காலம் காலமாக எல்லா நிதியமைச்சரும் நிதி திரட்ட செய்துவரும் நடவடிக்கைகள்..

இதே பாணியை அச்சு பிசுங்காமல் காப்பி அடித்துள்ளார் நிர்மலா சீதாராமன் அவர்கள். இதில் இருந்து நமக்கு தெரிவது அவரிடமும், அவரின் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளிடமும் Out of Box ஐடியாக்கள் எதுவும் இல்லை என்பதே.....

ஒரு உதாரணம் சொல்கிறேன் :

"5% customs duty on imported books, to promote the domestic publishing and printing industry" - பட்ஜெட் 2019

இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5% வரி உயர்வு அறிவித்த நிர்மலா சீதாராமன், இந்த வரி உயர்வின் மூலம் இந்தியாவில் புத்தக அச்சிடுதல் ஊக்கம் பெறும் என்றார்.

ஒரு பொருளின் உற்பத்தியை உள்நாட்டில் பெருக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் அதே பொருளுக்கு வரியை கூட்டினால் மட்டும் போதும் என்பது எத்தனை அபத்தமான சிந்தனை ?

சரி உள்நாட்டில் புத்தகம் அச்சிடுதல் துறை பேப்பர் விலை உயர்வால் கடுமையாக கஷ்டப்படுகிறதே, பேப்பர் விலையை குறைக்க என்ன செய்தீர்கள் நிர்மலா ?? தொழில் செய்ய உதவி செய்யாமல் போட்டிக்கு வருபவனை மட்டும் வாரிபோட்டு ஓடவிட்டுவிட்டால் போதும் என்றால் கடைசியில் பாதிக்கப்படப்போவது அந்த பொருளை நுகரும் consumer தானே ???

இப்படி பழைய சிந்தனைகள் நிரம்பிய பட்ஜெட்டாக நிர்மலாவின் 2019 பட்ஜெட் எனக்கு படுகிறது. நிர்மலா தன்னை சுற்றியுள்ள பழைய சிந்தனைகள் கொண்ட IAS கூட்டத்தை ஒழித்துக்கட்டுவது நல்லது. இல்லாவிடில் மோடி 2.0 அரசு UPA 3.0 வாக முடிந்துவிடும்..  

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)