ஜூலை 1, இது வெறும் ஆரம்பம் (பாகம் 1)

ஜூலை 1, 2003.

ஜெயலலிதா தமிழக முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்திருந்தது. அரசு ஊழியருக்கு சம்பளம் வழங்கவே கஷ்டப்படும் அளவுக்கு நிதி நிலை மோசமாக இருந்ததால் பல சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன.

D.A என்ற அழைக்கப்படும் பஞ்சப்படி மற்றும் சில பென்ஷன் சலுகைகள் ரத்து செய்யப்பட்டது.

இதனை எதிர்த்தும் ஊதிய உயர்வு போன்றவற்றை வழியுறுத்தியும் போக்குவரத்து தொழிலாளர்கள், ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தன.

tamilnadu strike

மொத்தம் 13 லச்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு இயந்திரம் ஸ்தம்பித்தது.  தமிழகம் சந்தித்த மிகப்பெரிய அரசு ஊழியர் வேலைநிறுத்தமாக இது பார்க்கப்பட்டது.

போராட்டத்துக்கு பல அரசியல் கட்சிகளும் (தி.மு.க உட்பட) ஆதரவு தெரிவித்தன.

அரசு  Essential Services Maintenance Act (ESMAசட்டம் பாயும் என எச்சரித்தது. எனினும் போராட்டம் தொடர்ந்தது.

ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் செயல்படாததால் அரசு தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்து விடும் என்று அவர்கள் தீர்க்கமாக நம்பினார்.

ஆனால் நடந்ததோ வேறு . 4 நாட்களில் போராட்டம் நசுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமே தமிழக அரசுக்கு சாதகமா நின்றது.

என்ன நடந்தது 4 நாட்களில் ? திரில்லர் காட்சிகள் போல அரங்கேறின அடுத்தடுத்த நிகழ்வுகள்.

அடுத்த கட்டுரையில்....
ஜெயலலிதா பாணி (பாகம் 2)



Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)