Posts

Showing posts with the label பொன்னியின் செல்வன்

citizen திரைப்பட கிளைமாக்ஸும் - இராஜராஜ சோழனும்

சிட்டிசன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் வில்லன்களுக்கு வித்தியாசமான ஒரு தண்டனையை அறிவிப்பார். அதன்படி வில்லன், அவரது குடும்பத்தார்,அவர்தம் குடும்பத்துடன் திருமண உறவு செய்துகொண்டவர்கள் என அனைவரது குடியுரிமை மற்றும் சொத்துகளும் பறிக்கப்பட்டு சொந்தநாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்படுவர். புதுமையான தண்டனை என்று சொல்லப்பட்ட இந்த தண்டனை சுமார் 1000 வருடங்களுக்கு முன்னரே வழங்கியுள்ளார் இராஜராஜ சோழன் ! சோழ சரித்திரத்தில் அவிழ்க்க முடியாத ரகசியமான ஆதித்ய கரிகாலன் கொலை பற்றிய மர்மத்தை தனது சிற்றப்பா உத்தம சோழரின் ஆட்சிக்கு பின் பதவியேற்ற ராஜராஜ சோழர் கண்டுபிடிக்க முயல்கிறார். தனது இரண்டாவது ஆட்சியாண்டில் (கி. பி 986-987) பாண்டிய ஆபத்துதவிகளின் தலைவரான ரவிதாசன் மற்றும் அவரது சகோதரர்களே அதித்ய கரிகால சோழரின் கொலைக்கு காரணம் என்பதை கண்டுபிடித்த ராஜராஜர் அவர்களுக்கு வழங்கிய தண்டனை வித்தியாசமானது. அதாவது ரவிதாசன் அவர்தம் சகோதர்கள் மட்டுமல்லாது அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர் (சிறு குழந்தைகள் உட்பட) என அனைவரின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டதோடு...

படித்ததில் பிடித்தது - 1 (எழுத்தாளர் கல்கி பற்றிய குறிப்புக்கள்)

Image
கல்கி தன்னுடைய சொந்த பெயரில் பத்திரிகையைத் தொடங்கிய நேரம் அதன் நிர்வாக தலைவர் சதாசிவத்திற்கு பெரிய கவலை காரணம் காகிதத் தட்டுப்பாடு. இதை பற்றி கேள்விப்பட்ட கல்கி கிண்டலாக சிரித்தார், "கவலைபடாதிங்க,  நான் ஒரு  தமிழ்நாட்டுச் சரிந்திர நாவல் எழுதப்போகிறேன். அதை அதிகம் பேர் படிக்கமாட்டாங்க. நமக்கு காகிதம் நிறையத் தேவைபடாது" என்று வேடிக்கையாக சொன்னார். 1941 ல் தொடங்கிய அந்த சரித்திர நாவல் தான் 'பார்த்திபன் கனவு'. பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் தான் எழுத தொடங்கினார் கல்கி ஆனால் அவரது எழுத்து லாவகம் கல்கி விற்பனையை கிடுகிடுவென உயர்த்தியது. பார்த்திபன் கனவு தந்த வெற்றி உற்சாகத்தில் கல்கி 1944ல் அடுத்த எழுதிய நாவல் "சிவகாமியின் சபதம்". ஆறு வருடம் கழித்து "பொன்னியின் செல்வன்" நாவலை கல்கி எழுதத் தொடங்கினார். தொடர்ந்து மூன்றரை ஆண்டு காலம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற  பொன்னியின் செல்வன் வெளிவந்து 60+வருடங்கள் ஆகியும் இன்று வரை புத்தக விற்பனையில் முன்னணியில் உள்ளது. கல்கி  - என். சொக்கன், புக் மார்க்ஸ் புத்தகத்திலிருந்து...