citizen திரைப்பட கிளைமாக்ஸும் - இராஜராஜ சோழனும்

சிட்டிசன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் வில்லன்களுக்கு வித்தியாசமான ஒரு தண்டனையை அறிவிப்பார்.

அதன்படி வில்லன், அவரது குடும்பத்தார்,அவர்தம் குடும்பத்துடன் திருமண உறவு செய்துகொண்டவர்கள் என அனைவரது குடியுரிமை மற்றும் சொத்துகளும் பறிக்கப்பட்டு சொந்தநாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்படுவர்.

புதுமையான தண்டனை என்று சொல்லப்பட்ட இந்த தண்டனை சுமார் 1000 வருடங்களுக்கு முன்னரே வழங்கியுள்ளார் இராஜராஜ சோழன் !

சோழ சரித்திரத்தில் அவிழ்க்க முடியாத ரகசியமான ஆதித்ய கரிகாலன் கொலை பற்றிய மர்மத்தை தனது சிற்றப்பா உத்தம சோழரின் ஆட்சிக்கு பின் பதவியேற்ற ராஜராஜ சோழர் கண்டுபிடிக்க முயல்கிறார்.

தனது இரண்டாவது ஆட்சியாண்டில் (கி. பி 986-987) பாண்டிய ஆபத்துதவிகளின் தலைவரான ரவிதாசன் மற்றும் அவரது சகோதரர்களே அதித்ய கரிகால சோழரின் கொலைக்கு காரணம் என்பதை கண்டுபிடித்த ராஜராஜர் அவர்களுக்கு வழங்கிய தண்டனை வித்தியாசமானது.

அதாவது ரவிதாசன் அவர்தம் சகோதர்கள் மட்டுமல்லாது அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர் (சிறு குழந்தைகள் உட்பட) என அனைவரின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டதோடு  அவர்கள் சோழ நாட்டில் வாழ தகுதி அற்றவர்கள் என கூறி நாடுகடத்தப்பட்டதாக உடையார்குடி கல்வெட்டு கூறுகிறது.

சிட்டிசன் அஜித்துக்கும் முன்னோடி இராஜராஜர் !

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்