ஒபாமா கூட நடந்து போவாரு ! நம்ம தலைவர்கள் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்ட்டர்ல தான் போவாங்களாம்

உலகின் அதி சக்தி வாய்ந்த அதிபரான ஒபாமா தனது பயணத்திற்கு VVIP ஹெலிகாப்ட்டர் வாங்கும்பொழுது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்ட்டரில் ஒன்றுதான்வாங்கினார்.

காரணம் அதன் விலை ! ஒரு ஹெலிகாப்ட்டர் சுமார் 18.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

ஆனால் வளர்ந்து வரும் நாடான இந்தியா 2010 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஒரே ஆர்டரில் 12 ஹெலிகாப்ட்டர்கள் கேட்டது. காரணம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும், சோனியா மற்றும் அவரது காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் கொடுத்த லஞ்சப்பணம்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்ட்டர்

இந்திய விமானப்படை தாக்குதல் ஹெலிகாப்ட்டர்கள் வாங்க பண பற்றாக்குறை என்று சொன்ன அதே காலகட்டத்தில் தான் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்ட்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

இன்று காங்கிரஸ் கட்சிக்கு பேரிடியாக இறங்கியிருக்கும் ஹெலிகாப்ட்டர் ஊழல் வழக்கு எப்படியும் கொஞ்சநாளில் 2G ஊழல், சொத்து குவிப்பு வழக்கை போல் இழுத்தடிக்கப்பட்டு மறக்கடிக்கப்படும் என்பது மட்டும் உறுதி.

நாட்டு மக்கள் பாதுகாப்பை விட காசு முக்கியம் என்று எண்ணிய காங்கிரஸ் வாழ்க ! காசு வாங்கிய இந்திய விமானப்படை அதிகாரிகளும் வாழ்க ! 

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)