அவளும் ! நானும் ! நீங்களும் !
ஆண்டு 2011
வீட்ல பொண்டாட்டி தொல்லை போல அதான் வீட்டுக்கு போக மனசில்லாம வண்டிய நிப்பாட்டிவச்சுருக்கான் என்றார் எதிரில் இருந்தவர், பாவம் அவருக்கு தெரியாது கடவுள் ஏன் திருச்சி ரயில்நிலையத்தில் அரைமணிநேரமாக ரயிலை நிறுத்திவச்சுருக்கார்னு !
என் ஹெட்போனில் ஜி வி பிரகாஷ் கத்திக்கொண்டு இருந்தார் !
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ !
அந்த ஆரஞ்சு கலர் சுடிதார் போட்ட தேவதை அவள் அப்பா அம்மாவுடன் வந்து எனக்கு எதிர்சீட்டில் அமர்ந்தாள். சீட் கிடைத்த சந்தோஷத்தில் ஆயாசமாக அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஒரு நொடி ஒரு சிறு பார்வை என் பக்கம் வீசினாள்.
ஜி வி பிரகாஷின் தொடர்ந்து பாடினார்.
அடி வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா !
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா !
நா தலகாலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே !
ஆடுகளம் பாட்டுக்கும், அவளின் ஒரே நொடி காந்தப்பார்வைக்கும் கூட தொடர்பு உண்டு என மேற்கத்திய Choas தியரிக்கு கிழக்கில் நான் புதுவிளக்கம் கொடுத்துக்கொண்டேன் !
அந்த நொடியே அவள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவளை அடிக்கடி பார்த்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்தேன். எங்களுக்குள் ஒரே அலைவரிசை (wavelength) இருந்தது. நான் அவளை பார்த்த பொழுதுதெல்லாம் அவளும் என்னை பார்த்தாள். அவளிடம் பேச சமயம் பார்த்திருந்தேன்.
ரயில் மணப்பாறையை நெருங்கி இருக்கும். தேவதையின் அப்பா என்னை disturb செய்தார்.
தம்பி இந்த ரயில் எப்ப மதுரை போகும் ?
எனக்கு உள்ளுக்குள் தூக்கி போட்டது ! மதுரை வரைக்கும் தானா இவளுடன் இந்த பயணம் ? இந்த டிரைவர் வேற வேகமா ஓட்டுறானே என நினைத்துக்கொண்டே, இன்னும் 2 மணிநேரத்துல போய்டும் அங்கிள் என்றேன் கடுப்புடன்.
நீங்க ரெண்டுபேரும் காலேஜ் படிக்குறீங்களா ? என்றார் அவளின் அம்மா.
அப்பொழுதுதான் என்னுடன் பயணம்செய்யும் கார்த்திக்கே எனக்கு நினைவுக்கு வந்தான் ! அவள் என் எதிரில் அமர்ந்த கடைசி 90 நிமிடங்களில் கார்த்திக்கிடம் நான் ஒருவார்த்தை கூட பேசவில்லை ! என் பேச்செல்லாம் அவளின் விழிகளோடு மட்டும்தான் ! பொறுத்துப்பொறுத்து பார்த்த கார்த்திக் தூங்கி விட்டுருந்தான் !
ஆமா ஆண்ட்டி நாங்க பஸ்ட் இயர் ஸ்டுடென்ட்ஸ் தஞ்சாவூர்ல படிக்குறோம் என கல்லூரி பெயரை சொல்லி அறிமுகம் செய்துகொண்டேன்.
என் பொண்ணும் பஸ்ட் இயர் தான் பா, எங்க சொந்த ஊரு திருவானந்தபுரம் பொங்கல் லீவுக்கு ஊருக்கு போறேன்னு தங்களை பற்றி அறிமுக படுத்திக்கொண்டார்.
அப்பாடா ! கோவில்பட்டி வரைக்கும் (நான் இறங்கவேண்டிய இடம்) இவ என்கூட வரப்போறா என்று கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் அம்மாவும் அப்பாவும் தூங்கிவிட்டார்கள் !
எவ்வளோ நேரம் தான் இருவரும் பாத்துட்டே இருக்குறது, பேச ஆரம்பிப்போம் என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு அந்த நியூஸ்பேப்பர் எடுத்து தரீங்களா என்றேன் (உன் காதலை எனக்கு தந்துவிடு என்று சொல்ல இன்னும் சமயம் வாய்க்கவில்லை )
சிரித்துக்கொண்டே பேப்பரை கொடுத்தால் ! சிரிப்பின் காரணம் பேப்பரை பார்த்ததும் புரிந்தது ! அது மலையாள பேப்பர் ! அடச்சே ! மாமா (அதாங்க அவளோட அப்பா) தூக்கத்திலும் என்னைப்பார்த்து நக்கலாக சிரிப்பது போல் இருந்தது.
முதல் முயற்சி என் மானத்தை கட்டுமரத்தில் ஏற்றினாலும் மீண்டும் அவளுடன் பேச்சுக்கொடுத்தேன், இரண்டு காரணத்திற்காக.
முதலாவது மானத்தை பற்றி அப்பொழுது எனக்கு பெரிய கவலை இருக்கவில்லை ! இரண்டாவது அவளுக்கும் என்னுடன் பேச ஆவல் இருந்தது என்ற என் உள்ளுணர்வு !
செமஸ்டர் எக்ஸாம் ஈஸியா, எந்த காலேஜ் என மீண்டும் பேச ஆரம்பித்தேன். அவளும் ஆர்வமாக பேச்சுக்கொடுத்தாள்.
ஷிவானி காலேஜ் திருச்சி, ECE டிபார்ட்மென்ட் என்று சொன்னாலே தவிர பெயரை சொல்லவில்லை. என் பெயரை நான் சொல்லாததால் என்று நினைக்கிறேன் - குட்டி ஈகோ எட்டிப்பார்த்தது எங்களுக்குள். இந்த முறை அரைமணிநேரத்துக்கு பேச்சு தொடர்ந்தது.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருவரும் ஒரு ஆள் உட்காரும் சீட்டில் எதிரெதிரில் அமர்ந்துகொண்டு பேச்சை தொடர்ந்தோம்.
என்ன பேசினோம் ? தெரியவில்லை, நினைவில் இல்லை ! ஆனால் ஒன்று உண்மை. இரண்டுபேருமே அந்த உரையாடலை நிறுத்த தயாராக இல்லை.
நமக்கு தான் நல்ல நேரம் ரொம்ப நேரம் நீடிக்காதே. ஒரு பெண்மணி என்னை 4 பேர் உட்காரும் சீட்டில் மாறி உட்கார சொன்னார். போச்சுடா என்று மீண்டும் கார்த்திக் பக்கத்தில் உட்கார்தேன். அவள் நான் உட்கார்ந்த சீட்டில் மாறி உட்கார்ந்து கொண்டாள். இப்பொழுது நானும் அவளும் அருகருகில் நடுவில் நடந்துசெல்லும் பாதை !
சூரியன் மறைய தொடங்கிய நேரம். ரயில் மதுரையை நெருங்கி கொண்டிருந்தது. ஒவ்வொருவராக தூங்கி முழித்தார்கள், கார்த்திக்கும் !
முழித்தவன் சும்மா இருந்துருக்கலாம் ! (கொஞ்சம் சத்தமாக) அங்க பாருடா ஆரஞ்சு கலர் சூப்பரா இருக்குன்னு அவள் உட்கார்ந்திருக்கும் ஜன்னல் வழியாக வெளியே மறையும் சூரியனை காட்டினான். நானும் பாத்துட்டு ஆமா மச்சி என்று சொல்லியது தான் தாமதம் அவள் அம்மா 2000 டிகிரி வெப்பதுடன் கோவப்பார்வையை எங்கள் இருவர் மேலும் வீசினார்.
தன் மகளின் சுடிதார் கலரை பார்த்துதான் ஆரஞ்சு கலர் சூப்பரா இருக்குன்னு கார்த்திக் சொன்னதாக அவர்கள் எடுத்து கொண்டார்கள்.
இதுக்குமேல இங்க உட்கார்ந்தா அடிவிழுந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று எழுந்து வாசல் பக்கம் சென்று நின்றுகொண்டேன். நான் இறங்கப்போகும் இடம் வரை என் சீட்டுக்கு அருகில் கூட நான் செல்லவில்லை.
அவள் எனக்கு எதிரில் உட்கார்ந்து இருந்தால், நான் படிக்கட்டு கதவில் சாய்ந்த படி அவளுடன் கண்களில் காதல் பேசிக்கொண்டிருந்தேன்.
நான் இறங்கவேண்டிய ஸ்டேஷன்வந்துதொலைந்துவிட்டது. நானும் கார்த்திக்கும் கீழே இறங்கினோம். இவ்வளவு நேரமும் அவளிடம் நான் போன் நம்பர் வாங்கவில்லை.
ரயில் இன்னும் கிளம்பவில்லை. நானும் வீட்டுக்கு கிளம்புவதாக இல்லை. நடைமேடையிலேயே நின்றுகொண்டு (அவள் அம்மா கண்ணில் படாதவாறு) அவளிடம் நம்பர் எப்படி வாங்குவது என்று சிந்தித்து கொண்டிருந்தேன்.
அவளும் அதே சிந்தனையில் இருந்தாள் போலும், ஐடியா வந்தவளாக ஒரு துண்டு சீட்டில் நம்பர் எழுதிவிட்டு, ஒரு டீ வாங்கினால். டீ கப்பை ஜன்னல் வழியாக போடும் சாக்கில் துண்டு பேப்பரையும் கீழே போட்டால். எனக்கு சைகை மூலம் பேப்பரை எடுத்துக்கொள்ள சொன்னாள் !
ரயில் கிளம்பியதும் மனசில்லாமல் அவளை வழியனுப்பி வைத்தேன்.
எக்ஸ்பிரஸ் ரயில் வேகம் கூடியது ! Bernoulli's தத்துவ படி அவள் கீழே போட்ட துண்டு சீட்டு ரயிலின் வேகத்தில் சக்கரத்துக்குள் இழுக்கப்பட்டது !
ரயில் சென்றதும் ட்ராக்கில் விழுந்த பேப்பரை நானும் கார்த்திக்கும் தேட முயற்சி செய்தோம். ட்ராக் புள்ள இருந்த குப்பையிலே அந்த துண்டு சீட்ட எங்க போய் தேட ????
அதுனாலதான் மக்களே உங்கள கெஞ்சி கேட்டுக்கிறேன் தயவு செஞ்சி ஸ்டேஷனிலும் ட்ராக்கிலும் குப்பையை போடாதீங்க ! குப்பையை கீழ போடறதுக்கு முன்னாடி என் கதையை ஒரு தடவ நெனச்சு பாருங்க !
குப்பையை குப்பை தொட்டியில் போடுவோம் !

Wow
ReplyDelete.... Simply super bro....
Super g sema link create panitinga
ReplyDeleteDai......thambi.......
ReplyDeleteSema!!!
ReplyDeleteSuper Vicky..twist lam bayangram
ReplyDeleteReally awesome twist nd link at d climax na
ReplyDeleteAwesome awesome
ReplyDeleteSuper
ReplyDeleteSemma machi,
ReplyDeleteNama life.la eathuthan plan panni nadakuthu ??.
don't feel...
Super twist.
Really enjoyed
ReplyDeleteRight from the first word till end it dragged me with suspension and full masala
Enjoyed
really superb

Nice twist and funny ending... Superb na..
ReplyDeleteSema twist :)
ReplyDeleteIpdi onnu nadathatha enkita ni sollavae illaye pa .... between nice story ... :)
ReplyDeleteNICE END... NICE FRIEND:p
ReplyDeleteHi Vicky unexpected climax... Lol.... Nice ending....
ReplyDeleteReally enjoyedu.. And i felt bad for u.. Are u in linked in.. How to follow u??
ReplyDeleteIs it ur real story???!!! 😂 finally I got the reason y u hate ECE department...CLG name & department yr lam theriyumla...pooi thedirukkalaam avungala...#kuppaila gandam..
ReplyDelete.Is it ur real story???!!! 😂 finally I got the reason y u hate ECE department...CLG name & department yr lam theriyumla...pooi thedirukkalaam avungala...#kuppaila gandam..
ReplyDelete