RA&W உளவுத்துறையின் செயல்பாடுகளை முடக்கிய ஹமீத் அன்சாரி
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் துணை குடியரசு தலைவருமான ஹமீத் அன்சாரி 1990 முதல் 1993 வரையிலான காலகட்டத்தில் ஈரானின் இந்திய தூதராக (Indian Ambassador for Iran) இருந்தார். அவர் தூதராக இருந்த காலகட்டத்தில் எப்படி இந்தியாவின் உளவு அமைப்பான RA&W வின் செயல்பாடுகளை முடக்கினார், ஈரானில் களப்பணியாற்றிவந்த RA&W வின் உளவாளிகளை ஈரானுக்கு காட்டிக்கொடுத்தார், RA&W வின் உளவாளிகள் ஈரான் அரசின் உளவுத்துறை கடத்தி சென்று கொடுமை செய்ய உதவியாக இருந்தார் மற்றும் கடத்தப்பட்ட அதிகாரிகளை மீட்க நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என பெரிய தேச துரோக குற்றப்பட்டியலை பிரதமர் மோடியிடம் முன்னாள் RA&W அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.. 1990களுக்கு பிறகு தான் காஷ்மீர் பிரிவினைவாதிகள் வளர்ச்சி உச்சத்தை தொட்டது. 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து காஷ்மீர் ஜிகாதிகளும் இந்திய ராணுவத்துடன் சண்டையிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படி பிரிவினை வாதிகளுக்கு ஊக்கமும் நிதி வசதியும் செய்துகொடுத்த நாடுகளில் ஈரானும் ஒன்று. இதை 1990 களின் ஆரம்பத்திலேயே அறிந்த இந்திய அரசு, ஈரானில் இந்...