வல்லவனுக்கு வல்லவன் - #1 (சபாஸ் சரியான ஜோடி)
வல்லவனுக்கு வல்லவன் தொடர் தமிழக மற்றும் இந்திய அரசியலில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பாகும். படித்து விட்டு உங்கள் மேலான கமென்ட்களை பதிவிடவும்.
சபாஸ் சரியான ஜோடி
எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை மனிதரின் மாயாஜாலத்தில் தமிழகம் அரசியல் சுழன்ற காலகட்டம் அது. ஆனால் அவருக்கு எதிர் கட்சியாக விளங்கிய கருணாநிதி அரசியலில் யாருக்கும் சளைத்தவர் அல்ல.
1977 - அதிமுக சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக வெற்றியை பறித்து ஆட்சியை கைபற்றி இருந்தது. அப்பொழுது இந்திரா காந்தியும் எம்.ஜி.ஆரும் கூட்டணியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றார்கள்.
ஆனால் அதிமுக இந்திரா கூட்டணி சில மனகசப்பால் நீடிக்கவில்லை.
1979 ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் கலைஞர் உடன் கூட்டு சேர்ந்து பாராளமன்ற தேர்தலை சந்தித்தது.
எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக திமுக இந்திரா கூட்டணி பாராளமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். பிரதமர் ஆனதும் இந்திரா செய்த முதல் வேலை எதிர் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் ஆட்சி களைப்பு.
தமிழகத்தில் கருணாநிதியின் நெருக்குதலால் எம்.ஜி.ஆர் ஆட்சியும் கலைக்கப்பட்டது.
இப்பொழுது எம்.ஜி.ஆர் மீண்டும் ஒரு தேர்தலை சந்தித்தாகவேண்டும். ஆனால் அவரது கட்சி இன்னும் நாடாளமன்ற தேர்தல் தோல்வியில் இருந்தே மீளவில்லை.
திமுக - இந்திரா காந்தி கூட்டணியோ இப்பொழுது தான் நாடாளமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய தோல்வியை கொடுத்திருந்தன. எனவே அவர்களை பொறுத்தவரை அடுத்த ஆறே மாதத்தில் நடக்கும் இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் ஓட ஓட விரட்டப்படுவார் என தீர்க்கமாக நம்பினர். அன்றைய எதார்த்த நிலையும் அதுவே.
கலைஞர் ஒருபடி மேலே சென்று யார்யாருக்கு மந்திரி பதவி யாருக்கு எந்த துறை என்று கூட ஆலோசனைகளை தொடங்கி இருந்தார். அவரை பொறுத்தவரை தேர்தலில் திமுக வெற்றி பெறப்போவது 100 இல்லை 200 சதவீத உறுதி.
ஆனால் ஒரு புகைப்படம் ஒட்டுமொத்த தேர்தல் களத்தையேமாற்றும் என்று கலைஞர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.
எம்.ஜி.ஆர் ஒரு ஏழை மூதாட்டியை கட்டி பிடித்திருப்பதை போன்ற புகைப்படம் அதிமுகவால் தேர்தல் வாக்கு சேகரிப்புக்கு பயன்படுத்தபட்டது.
அந்த புகைப்படத்தை பார்த்து கலைஞர் ஒரு ஆர்வத்தில் பத்திரிகை நிருபர்களிடம் சொன்ன வார்த்தை அவரது முதல்வர் கனவையே தகர்த்தது.
கலைஞர் சொன்ன வார்த்தை சபாஷ் சரியான ஜோடி.
இதை கப்பென பிடித்து கொண்ட அதிமுக கலைஞரின் கீழ்த்தரமான இந்த விமர்சனத்தை தேர்தல் ஆயுதமாக பயன்படுத்தியது. கலைஞர் பெண்களை பற்றி இழிவாக பேசிவிட்டார் என்பதே அவர்களின் முழக்கம்.
அரசியல் கணக்குகள் ஆட்டம் கண்டன தேர்தல் முடிவுகள் முன்பு கணிக்கப்பட்டதற்கு தலைகீழ் ! அதிமுகவிற்கு பெண்கள் ஓட்டு வங்கி அதிகம் என்பதால் பிரச்சாரம் எளிதாய் வெற்றி அடைந்தது.
அரசியல் கணக்குகள் ஆட்டம் கண்டன தேர்தல் முடிவுகள் முன்பு கணிக்கப்பட்டதற்கு தலைகீழ் ! அதிமுகவிற்கு பெண்கள் ஓட்டு வங்கி அதிகம் என்பதால் பிரச்சாரம் எளிதாய் வெற்றி அடைந்தது.
எம்.ஜி.ஆர் மீண்டும் தமிழகத்தின் முதல்வர் (அவர் சாகும் வரை அவரே முதல்வர்)
Comments
Post a Comment
Post ur comments and help us to improve