முதுகில் குத்தும் நண்பன் !

இந்தியாவும் அமெரிக்காவும் 21ஆம் நூற்றாண்டுக்கு பிறகு நெருங்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகே பாகிஸ்தானுக்கு ஜாலரா அடிப்பதை குறைத்து கொண்டது அமெரிக்கா.

இன்று ஓபாமாவும் மோடியும் செல்பி நண்பர்களாக இருக்கலாம் ஆனால் அமெரிக்கா என்றுமே வியாபார நோக்கத்தை மட்டுமே முன் நிறுத்தும் நண்பன் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா 2022 ஆம் ஆண்டுக்குள் சூரிய சக்தியை கொண்டு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவை 20,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த முடிவெடுத்துள்ளது.

முடிவு எடுக்கப்பட்டது 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில். அமெரிக்கா இதற்கு உச்சி குளிர வாழ்த்து சொல்லியது. (காரணம் இல்லாமலா ?)ஆனால் 2014 ஆம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்றதும் சூரிய கொள்கையில் பெரும் மாற்றம் செய்யப்பட்டது.

india loses solar war against US


இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சூரிய செல் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே கொள்கை மாற்றமாகும். (Make in India).

நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சூரிய செல்லை பயன்படுத்தினால் தான் உங்களுக்கு மானிய சலுகை எல்லாம் கிடைக்கும்.
இந்தியாவிலேயே சோலார் பேனல் உற்பத்தி செய்வதும் ஊக்குவிக்கப்படும்.

இப்பொழுது அமெரிக்கா விழித்து கொண்டது. 2010 தில் இந்தியாவின் சூரிய கொள்கையை கைதட்டி வரவேற்ற அமெரிக்கா 2015 தில் இந்தியாவின் சூரிய கொள்கைக்கு எதிராக WTO வில் வழக்கு தொடுத்துள்ளது.

வழக்கின் சாராம்சம் இதுதான் :

The US alleged that India's programme appears to discriminate against the US solar equipment by requiring solar energy producers to use locally manufactured cells and by offering subsidies to those developers who use domestic equipment. It also alleged that forced localisation requirements restricted US exports to Indian markets.
- NDTV Report 

"இந்தியா சூரிய ஒளியை கொண்டு மின்சாரம் தயாரிக்கட்டும். ஆனா சோலார் பேனல்  எங்ககிட்ட தான் வாங்கணும். மேக் இன் இந்தியன்னு சொல்லி எங்க நாட்டு வியாபாரிங்கள பாதிக்குறாங்க "

இந்த வழக்கின் முதல் கட்டத்தில் இந்திய தோற்றுவிட்டது என்பது அதிர்ச்சிகரமான செய்தி.

இந்தியா மேல் முறையீடு செய்ய முயல்கிறது. நம்பிக்கையுடன் காத்திருப்போம் !

என் பார்வை  :

இந்தியாவிற்கு என்றுமே நல்ல நண்பன் ரஷ்யா தான். இன்று இந்தியாவில் செய்யல்படும் பல மின் நிலையங்கள் (NLC, கூடங்குளம் உட்பட), இராணுவ தளவாடங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் என முக்கால்வாசி ரஷ்யா உதவியில் பெற்றவை தான்.

அமெரிக்கா ஒரு செயலில் வழிய வந்து உதவினால் அதில் ஆதாயம் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை.

அமெரிக்கா என்றுமே நம்பதகுந்த நண்பன் இல்லை,
முதுகில் குத்தும் நண்பன் ரகம் தான்.

ஆதாரங்கள் :

http://www.ndtv.com/india-news/india-loses-solar-case-against-us-at-wto-to-appeal-1211764

http://www.livemint.com/Politics/11yE8Bz6bgZZ6LhXXlB8eL/WTO-panel-rules-against-India-in-solar-dispute.html

Comments

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)