திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு - திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் 2

திருவாரூர் பற்றி நமது தளத்தில் ஏற்கனவே வெளிவந்து 3000 வாசகர்கள் மேல் படித்து மகிழ்ந்த திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் என்ற கட்டுரையின் அடுத்த பாகமே திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு என்ற இந்த கட்டுரை.

18 ஆம் நூற்றாண்டு 

நாம் 10 ஆம் வகுப்பில் மனப்பாடம் செய்து பாஸான கர்நாடக போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுகாரர்கள் இந்தியாவில் தங்கள் இருப்பை நிலைநாட்ட மோதிக்கொண்டனர்.

பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகத்தின் கீழ் மெட்ராஸ், கடலூர் மற்றும் திருச்சி என மூன்று முக்கிய நகரங்கள் இருந்தன. அவற்றை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று பிரெஞ்சு படை திரட்டியது. 

பிரெஞ்சு படைக்கு  தலைமை ஏற்ற தளபதி லாலே பிரிட்டிஷ் வசம் இருந்த கடலூர் கோட்டையை அசால்ட்டாக கைப்பற்றினார்.

லாலேவிற்கு அடுத்து இரண்டு வாய்ப்புகள் இருந்தன ஒன்று  வடக்கு திசையில் உள்ள மெட்ராஸ் நகரை நோக்கி படையெடுப்பது மற்றொன்று தெற்கு பக்கம் உள்ள திருச்சிநோபோலி (இன்றைய திருச்சி நகரம்) நோக்கி படையெடுப்பது.   

பூவா தலையா போட்டு பார்த்து முடிவு எடுத்தாரா என்று நமக்கு தெரியாது லாலே தேர்ந்தெடுத்து திருச்சி நகரத்தை. 

திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு


கடலூரில் இருந்து கடற்கரை (இன்றைய ECR என்னும் கிழக்கு கடற்கரை சாலை) வழியாக நாகூர் என்னும் துறைமுக நகரத்தை அடைந்தது லாலே படை. நாகூர் சத்தம் செய்யாமல் லாலேவிடம் சரண்டர் ஆனது.

ஆனால் பண பிரச்சனை,  உணவு மற்றும் துப்பாக்கி ரவைகள் போதிய அளவு இல்லாமை என லாலேவிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தன. கடலூர், நாகூர் என தொடர் வெற்றியை ருசித்து கொண்டிருந்த
லாலேவிற்கு போரை நிறுத்தவும் மனமில்லை.

துவண்டு போன லாலே கைசெலவுக்காக நாகூர் நகரை 2 லட்சம் ரூபாய்க்கு குதிரை படை தலைவரிடம் விற்றுவிட்டார். அப்பொழுது லாலே படைக்கு உற்சாகம் தரும் வகையில் வந்து சேர்ந்தது திருவாலூர் (இன்றைய திருவாரூர்) பற்றிய தகவல்.

பொன்னும், வைரமும் கணக்கில் அடங்கா செல்வமும் இரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டதாக  சொல்லப்படும் அந்த கோவிலையும், நகரத்தையும் கைப்பற்றிவிட்டால் பிரிட்டிஸுகு எதிரான போரை நடத்துவதற்கு தேவையான செல்வத்தை காட்டிலும் 10 மடங்கு செல்வம் பிரெஞ்சு படைக்கு சொந்தமாகிவிடும் என லாலேவிற்கு சொல்லப்பட்டது. எனவே லலேவின் அடுத்து திருவாரூருக்கு குறிவைத்தார். 

நாகூரில் கிளம்பிய பிரெஞ்சு படை திருவாரூர் நகரத்தை வேகமாக அடைந்தது. பெரிய எதிர்ப்பு இருக்கும் என்று நினைத்து திருவாரூர் வந்த லாலே காலியான ஒரு நகரத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். ஆம் திருவாரூர் மக்கள் லாலே படை  வந்து சேர்வதற்கு முன்னரே ஊரை காலி செய்து வேறு எங்கோ சென்று விட்டனர்.  

அசரவில்லை லாலே. கோவிலில் தான் மொத்த செல்வமும் பதுக்கப்பட்டதாக கேள்விப்பட்ட லாலே கோவிலுக்குள் தேடுதல் வேட்டையை தொடங்கினார்.

கோவில் சல்லடையாக தேடப்பட்டது. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது என்னவோ குவியல் குவியலாக நெல் மூட்டைகள் மட்டுமே.

ஊரை காலி செய்யாமல் கோவிலுக்குள்ளேயே இருந்த ஆறு பூசாரிகள் பிரெஞ்சு படையாள்  லாலே முன் இழுத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

அவர்கள் 6 பேரும் செல்வம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சொல்வதற்கு தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த லாலே 6 பூசாரிகளையும் கோவில் வளாகத்திலேயே சுட்டு கொன்றார்.

பெரிய எதிர்பார்போடு திருவாரூர் வந்த லாலே வெறும் கையுடன் அடுத்து தஞ்சாவூர் நோக்கி தனது படையை நகர்த்தினார். பின் அவர் பிரிட்டிஷ் படையிடம் தோல்வியுற்றார் என்கிறது வரலாறு.

திருவனந்தபுறம் பத்மநாத சுவாமி கோவிலை போல் திருவாரூர் கோவிலிலும் இரண்டு  இரகசிய அறைகள் உள்ளன.

டெல்லி சுல்தான்களின் முதல் பிரெஞ்சு தளபதி லலே வரை எவருக்கும்  கிடைக்காமல் பதுக்கி வைக்கப்பட்ட செல்வம் இந்த இரகசிய அறைகளில் தான் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இரகசிய அறைகளை உடைக்காமலேயே உள்ளே ஆராய்ந்து பார்க்க திருச்சி BHEL நிறுவனம் முன்வந்த பொழுதும் கோவில் நிர்வாகம் ஒத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் இரகசிய அரை பற்றிய மேலும் தகவல்களுக்கு படிக்க

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழன் பற்றிய மிக முக்கிய ஆதாரம்  திருவாரூர் கோவிலில் உள்ள கதை உங்களுக்கு தெரியுமா? வெகு விரைவில் திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் - 3 கட்டுரை.

ஆதாரங்கள் :

  • திருவாரூர் திருக்கோவில்:  எழுதியவர் திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் 
  • Clive and Dupliex - The beginning of Empire (கூகுள் புத்தக தளத்தில் இருந்து )
  • Private Diary of Anandha Ranga Pillai - 12 Vols.  (கூகுள் புத்தக தளத்தில் இருந்து) 

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)